குடசப்பாலை -
சிற்ப வேலைக்கான
சிறந்த மரம்
KUDASAPPALAI -
SUITED FOR MAKING
STATUES
KUDASAPPALAI -
SUITED FOR MAKING
STATUES
1. மரத்தின் தமிழ்ப்
பெயர் : குடசப்பாலை
2. தாவரவியல் பெயர்
: HOLLARHENA ANTIDYSENTRICA
3. பொதுப்பெயர் ஃ
ஆங்கிலப்பெயர் : EASTER TREE
4. தாவரக்குடும்பம் : அபோசையனேசி (APOCYNACEAE)
5. மரத்தின்
வகை :
அலங்கார அழகுமரம்.
6. மரத்தின்
பயன்கள் :
தழை :
கால்நடைகளுக்கு தீவனமாகும்.
பட்டை : டேனின் நிறைந்தது; தோல்பதனிடலாம்.
பூக்கள் : சமைத்து உண்ணலாம்.
காய் : விதைப் பஞ்சு, தலையணைக்குள் பொதியலாம்.
பால் :
மரத்திலிருந்து எடுக்கும் பாலில், இரப்பர் மற்றும் ரெஸின் தயாரிக்கலாம்.
பிசின் : கோந்து தயாரிக்கலாம்.
மரம் : கடைசல் வேலைகள் மற்றும் சிற்ப வேலைகளுக்கு ஏற்ற மரம்,
இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க
விறகாகும்.
சுற்றுச் சூழல் : வீசும் காற்றின் வேகத்தை
தடுத்து, தூசியினை
வடிகட்டி
காற்றை தூய்மைப்படுத்தும்.
சிறப்பு செய்திகள் :
வெண்ணிற பூக்களையுடைய அழகிய குற்று மரம்.
ஈஸ்டர் பண்டிகையின் போது, தேவாலயங்களை
அழகுபடுத்துவதற்கென்றே, பூக்கும்.
சிற்ப வேலைகளுக்கான மரம்; அதனால் 'ஐவரி
ட்ரீ" எனப் பெயர் பெற்ற மரம்.
வால்மீகி
இரமாயணம் மற்றும் காளிதாசரின்
காவியங்களில் ‘கடஜா’ என்று பெயர் பெற்றுள்ளது.
7. மரத்தின் தாயகம்
: இந்தியா -- வங்காளம்
ஹல்லரினா
8. ஏற்ற மண் : மணல்சாரி மலை மண்.
9. நடவுப் பொருள் :
விதை, நாற்று, வேர்க்குச்சி.
10. மரத்தின் உயரம்
: 9 - 12
மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment