கூந்தல் பனை
அழகான
அலங்கார மரம்
KOONTHAL PANAI
BEAUTIFUL
ORNAMENT TREE
1. மரத்தின் தமிழ்ப்
பெயர் : கூந்தல் பனை
2. தாவரவியல்
பெயர் : CARYOTA URENS
3. பொதுப்பெயர் ஃ
ஆங்கிலப்பெயர் : WHITE PALM
4. தாவரக்குடும்பம் : PALMAE
5. மரத்தின்
வகை : அலங்கார அழகுமரம்
6. மரத்தின்
பயன்கள் :
கிளையில்லா வெள்ளை மரத்தில் பெரிய இலைகளை
போர்த்திக்கொண்டு ஓங்கி வளர்ந்து நிற்கும் பெரிய
அலங்கார அழகு மரம்.
குருத்து : பட்டை இல்லாத இம்மரத்தின் குருத்தைவெட்டி, உள்ளே
மரத்திற்குள்,
‘சாகோ’ மாவுப்பொருள் எடுத்து ஜவ்வரிசி தயாரிக்கலாம்;
குருத்து கறி சமைக்க
உதவும்.
பதநீர் : பூக்க
ஆரம்பித்ததிலிருந்;து இறந்து மடியும் வரை வெல்லம், சீனி, கற்கண்டு, தேன் பாகு,
காடி, கள், மதுபானம் தயாரிக்க பதநீர், தரும்.
இலை, மட்டை, மரம், வேர் : நார் மற்றும் பிரஷ்கள் செய்யலாம் ;அடுப்பெரிக்க விறகாகும்.
சுற்றுச் சூழல் : கிளை இல்லா வழுவழுப்பான வெள்ளை
மரத்தில், தன்
பச்சை பெரிய இலைகளால், வீசும் காற்றைத்
தடுத்து
தூசியினை வடிகட்டும் மரம்.
7. மரத்தின் தாயகம்
: இந்தியா --
அஸ்ஸாம்.
8. ஏற்ற மண் : மணல்சாரி வறண்ட மண்.
9. நடவுப் பொருள் :
விதை, நாற்று, வேர்க்குச்சி.
10. மரத்தின்
உயரம் :
10 -- 16 மீட்டர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
No comments:
Post a Comment