Friday, September 22, 2017

காயா - தமிழ் இலக்கியம் புகழும் பூமரம் - KAYA - PORTRAYED TREE OF TAMIL LITERATURE


                                               

காயா - தமிழ் இலக்கியம் 

  பேசும் பூமரம் 

KAYA - PORTRAYED TREE OF TAMIL LITERATURE


MEMECEYLON 
UMBELLATUM
                                                                   

பரிபாடலில், திருமாலின் உடல் அழகுக்கு
உவமையாக சொல்லப்பட்ட காயா மலர்

ஆயிரம்  விரித்த  அணங்குடை  அருந்தலை
தீ உமிழ்  நிறலொடு  முடிமிசை  அணவர
மாவுடை மலர் மார்பின்,  மைகில் வாள்வளை  மேனி,

சேய் உயர்  பணை மிசை  எழில் வேதம்  ஏந்திய
வாய்  வாங்கும்   வாளை நெஞ்சில்  ஒரு  குழை ஒருவனை ;   

எரிமலர்  சினை இய  கண்ணை ; பூவை
விரிமலர்  புரையும்  மேனியை ;  மேனித்
திரு நெமிர்ந்து அமர்ந்த  மார்பினை ; மார்பில்
தெரிமணி  பிறங்கும்   பூணினை  மால்வரை
எரிதிரிந்தன்ன  பொன்புனை   உடுக்கையை
சேவல் அம்   கொடியோய்  ! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல்  உழந்தமை  கூறும்,
நாவில்  அந்தணர்  அருமறைப்  பொருளே "

திருமாலே, ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷன் நீ;  திருப்பாற்கடல் மீது பள்ளி கொண்டுள்ளாய் ;   திருமகள் உன் மார்பில் உரைந்துள்ளாள் ;  ஒற்றைக் காதணியையும்; கூரிய கலப்பையை படையாகவும், உயர்ந்த மூங்கில் கொம்பில் கட்டப்பட்ட, யானைக் கொடியை உடையவராகவும், வெண்சங்கு போன்ற மேனியையும் உடைய பலதேவனாகவும் உள்ளாய். 

உனது கண்கள் தாமரையை தோற்கடித்துவிடும். நீல வண்ணத் திருமேனி காயா மலர் போல் அழகுக்கு அழகு சேர்க்கிறது ; மார்பில் ஒளி மிக்க  கவுந்துவ மணியை அணிந்துள்ளாய் ; நீல மலையின் மீது சுற்றிய, தீப்பிழம்பு போல பொன்னாடையை, அணிந்துள்ளாய் என்று இந்தப் பாடல் வருணிக்கிறது.
இந்த பூக்கள், கருமை, ஊதா , நீலம் என பல வண்ணங்களில் பளிச்சிடும் ; கோடையில் பூக்கும்  பச்சைப் பசேலென்ற இலைகளின் நடுவே இருக்கும்  மலர்களைப் பார்க்க மயிலின் தோகை போல காட்சியளிக்கும்.  பூக்கள் காயாகி கனியான பின்னால் அவை ஊதா நிற மாணிக்கங்கள் போல இருக்கும்.
திருமாலின் திருமேனிக்கு உவமையாக, சொல்லப்பட்டுள்ளது காயா மலர். 


காசா என்பதும், பூவை என்பதும், இதன் மாற்றுத் தமிழ்ப் பெயர்கள் ; காயா மரத்தின் ஆங்கிலப் பெயர் கார்ப்பா (KARPA ); இலை உதிராத சிறு மரம். 'காடுகள் அழிந்தாலும், காயா அழியாது'  என்று சொல்வதுண்டு.

காயாவின் தாவரவியல் பெயர் , மெமிசிலான் அம்பலேட்டம் (MEMECEYLON UMBELLATUM) ; மெலஸ்டோமேசி (MELASTOMACEAE) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

பரிபாடல்; சங்க இலக்கியங்களில் ஒன்று; எட்டுத்தெகை நூல்களுள் ஐந்தாவதாக அமைந்தது;  சங்க  இலக்கியங்களில், பண்ணோடு பாடப்பட்ட ஒரே நூல்; 70 பாடல்களைக் கொண்டது ; ஆனால் கிடைப்பவை 22 மட்டும்தான். 

நல்லந்துவனார், இளம்பெருவழுதியார், கடுவன் இளவேயினார், கரும்பிள்ளைப் பூதனார், கீரந்தையார், குன்றம் பூதனார், கேசவனார், நப்பண்ணணார், நல்லச்சுதனார், நல்லழகியார், நல்லெழினியார், நல்வழுதியார், மையோடக்  கோவனார், ஆகியோர் இதன் ஆசிரியர்கள்.
பாலையாழ், காந்தாரம், தோதிறம், என்பவை இந்த நூலில், பயன்படுத்தப்;பட்ட பண்கள். 

இதனை  டாக்டர். உ.வே. சாமிநாத ஐய்யர், பரிமேலழகர் உரையுடன் 1918 ல், வெளியிட்டார்.  1957 ல் பெருமழைப் புலவர். உ.வே. சோமசுந்தரனார் உரையில் மீண்டும் வெளி வந்தது. 

இந்த நூல் என்.சி.பி.எச்., 2004 -ல் முதல் பதிப்பை வெளியிட்டது. இதில் முதல் 12 பாடல்களுக்கு உரை எழுதியவர் முனைவர். பெ. சுப்பிரமணியனார் ; அடுத்த 6 பாடல்களுக்கு எழுதியவர் முனைவர்.கு.தேவ.பாலசுப்பிரமணியன்;  மீதம் உள்ள நான்கு பாடல்களுக்கும் எழுதியவர் முனைவர் அ. தட்சிணா மூhத்தி.
 
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370
            

No comments:

செயற்கை நுண்ணறிவு பிதாமகன் கதை - THE FATHER OF ARTIFICIAL INTELLIGENCE

  கடிதம் 5 செயற்கை நுண்ணறிவு பிதாமகன் கதை THE FATHER OF ARTIFICIAL INTELLIGENCE CAN ROBOTS PERFORM TASKS LIKE HUMANS ? செயற்கை நுண்ணற...