Friday, September 29, 2017

காட்டாமணக்கு இந்திய ரயில்வே பச்சை கொடி காட்டிய பயோடீசல் மரம் - KAATTAMANAKKU- RECOGNIZED BIO-DIESEL TREE

காட்டாமணக்கு   இந்திய ரயில்வே பச்சை கொடி காட்டிய பயோடீசல் மரம் 

KAATTAMANAKKU- INDIAN RAILWAY RECOGNIZED BIO-DIESEL TREE


(ஒரு காலத்தில் உயர் ரக டீசல் தயாரிக்க ஏற்றது என பரிந்துரைக்கப்பட்ட மரம்; கார் மற்றும் ஜெட் விமானம் ஓட்டலாம்; எண்ணெய் எடுத்த பிண்ணாக்கு தீவனமாக பயன்படும். இந்திய ரயில் காட்டாமணக்கு டீசலில் ஓடப்போகிறது என்று சொன்னார்கள். நாங்கள் கூட (பூமி ) நிறைய விவசாயிகள் நிலத்தில் நட ஏற்பாடு செய்தோம். அதற்குப்பிறகு காட்டாமணக்கை யாரும் கண்டு கொள்ளவில்லை. இன்னும் கூட சிலர் கேட்கிறார்கள் "காட்டாமணக்கு டீசல் வருமா" என்று)

(ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரின் போது என்ஜின்களுக்கு காட்டாமணக்கு எண்ணெயை மசகு எண்ணையாகப் பயன்படுத்தியதாக ஒரு செய்தி உண்டு. இதற்கான காட்டாமணக்கை இந்தோனேசியா உற்பத்தி செய்து ஜப்பானுக்குக்  கொடுத்தார்களாம்.)

1. மரத்தின் தமிழ்ப் பெயர் : காட்டாமணக்கு
2. தாவரவியல் பெயர் :    JATROPHA CURCAS
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :  JATROPHA
4. தாவரக்குடும்பம் :  யூபார்பியேசி (EUPHRBIACEAE)
5. மரத்தின் வகை : வறண்டநிலத்தாவரம் .

 
6. மரத்தின் பயன்கள் :
 தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்  
 இலை : துணிகளுக்கு சலவைத் தொழிலாளர்கள் குறிபோட,  இலைப்பால்        தரும்.  
 விதை : வார்னிஷ் தயாரிக்க, எலிகளைக் கொல்லும்
 எலிநச்சு செய்ய, சோப்பு தயாரிக்க, விளக்கு எரிக்க, மசகு
 எண்ணெய், மற்றும் மெழுகுவர்த்தி செய்ய எண்ணெய் தரும்.
  7. மரத்தின் தாயகம் : அமெரிக்கா
8. ஏற்ற மண் :   மணல்சாரி வறண்ட மண்.
9. நடவுப் பொருள் : விதை,  நாற்று,   வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம் :  3  மீட்டர்.  

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...