Wednesday, August 16, 2017

அகிரா மியாவாக்கி செயற்கை காடுகளின் தந்தை - AKIRA MIYAWAKI FATHER OF MANMADE FORESTS


                                                              அகிரா  மியாவாக்கி
              செயற்கை காடுகளின் தந்தை

AKIRA MIYAWAKI
FATHER OF
MANMADE FORESTS


1928 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் பிறந்தவர் ஜப்பானிய தாவரவியலர்  ( BOTANIST)  மற்றும் சூழலியல்  வல்லுநர்;  விதைகள் மற்றும் இயற்கைக் காடுகள் பற்றிய ஆய்வு செய்தவர்; 2006 ல் புளு பிளானட் அவார்ட் ( BLUE PLANET AWARD)  பெற்றவர்;    1998 ல் ஆசாகி (ASHAHI) விருது பெற்றவர். 1993 வரை ஜப்பானின் யோகோஹாமா தேசிய பல்கலைக்கழகத்தின் எமிரிட்டஸ்  பேராசிரிரியராக  (EMERITUS PROFESSOR) பணிசெய்தவர்.
1970 ஆம் ஆண்டிலிருந்து இயற்கை காடுகள் பற்றிய ஆய்வுகளைச் செய்தார்;    1992 ல்  ரியோ டி ஜெனிரோவில் நடந்த 'எர்த்  சம்மிட்"  (EARTH SUMMIT) ல் இயற்கைக் காடுகள் பற்றிய முடிவு எடுக்கவில்லை என அறிவித்தவர் மியாவாக்கி.

மியாவாக்கி பாரம்பரியமான ஜப்பானின் மரங்களைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார்; ஆனால் பல மரவகைகள் ஜப்பானின் சொந்த மரங்கள் போல ஆகிவிட்டன.   இதனால் இயற்கையான ஜப்பானிய காடுகளின் முகம் மாறிவிட்டது.  

ஜப்பானிய செடார் (JAPANESE CEDAR), சைப்ரஸ் (CYPRUS), லார்ச் பைன் (LARCH PINE)  ஆகியவை, பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகம் செய்யப்பட்டு , ஜப்பானின் சொந்த மரங்கள்போல, மாறிப்போனவை எனக் கண்டு பிடித்தார். 

ஜப்பானின் புளு ஓக் (JAPANESE BLUE OAK)  காஸ்டேன்ப்சிஸ்  காஸ்பிடேட்டா (COSTANPSIS COSPIDATA), பேம்பூ  லீப்  ஓக் (BAMBOO LEAF OAK), மற்றும் ஜப்பானிய செஸ்ட் நட் (JAPANESE CHESTNUT) போன்றவைதான் ஜப்பானின் பாரம்பரிய  மரவகைகள் என கண்டுபிடித்தார்.

மியாவாக்கியின் ஆய்வுப்படி, ஜப்பானிலுள்ள மொத்த காடுகளின், பரப்பில் 0.6 % மட்டுமே பாரம்பரியக் காடுகள் என்ற உண்மையைக் கண்டுபிடித்தார்;   இப்போதுள்ள காடுகள் ஜப்பானின் சுற்றுச் சூழலுக்கு ஏற்புடையவை அல்ல என்று அறிவித்தார்.
     
மியாவாக்கி முறை (MIAWAKI MODEL) என்றால் பாரம்பரிய வகைகளின் விதைகளை சேகரித்து, அழிந்து போன காடுகளில் மீண்டும் விதைத்து, மறுபடியும் அவற்றை உருவாக்கும் முறை என்று பெயர்;    இதன் அடிப்படையில் மூன்று வகையான  பாதுகாப்பானக் காடுகளை (PROTECTIVE FORESTS)  உருவாக்கத் திட்டமிட்டார்;   இயற்கை சீற்றங்களைத் தவிர்க்கும் வகைக்காடு முதல் வகை;  சுற்றுச் சூழல் பாதுகாப்புக் காடு இரண்டாம் வகை;    நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்புக் காடு மூன்றாம் வகை;    இதன் அடிப்படையில் 1300 இடங்களில் பல வெப்ப மண்டல பகுதிகளிவ் நாடுகளில் நிறுவ திட்டமிட்டார்;  பசிபிக் பகுதிகளில் (PACIFIC AREA) காற்றுத் தடுப்பு வனமாகவும் (SHELTER BELTS), உட் லாட்ஸ் (WOOD LOTS) ஆகவும், உட் லேண்ட் (WOOD LAND) ஆகவும், குறிப்பாக நகர்ப் புறங்கள் (URBAN AREA),  துறைமுகங்கள்              (PORTS), மற்றும்  தொழிற்சாலைகளிலும்  நிறுவினார்.

சீர் கேடடைந்த வனப் பகுதிகளை (DEGRADED FORESTS) சீரமைப்பது கடினமான பணி என்று கருதினார்கள் சில வனவியல் அறிஞர்கள்; சரியான மரவகைகளைக் கண்டறிந்து, அடர் நடவு செய்து, நுண்ணுயிர்ப் பெருக்கம் செய்வதனால், (SELECTION OF PIONEER & SECONDARY INDIGENOUS SPECIES DENSELY PLANTED & MYCORHIZED) இதனைச் சுலபமாக செய்யமுடியும் என நிரூபித்தவர் மியாவாக்கி;   இதற்காக 40 முதல் 60 வகையான மரங்களைத் தேர்ந்தெடுத்தார்.

மியாவாக்கி அடிப்படையில் ஒரு தாவரவியல் அறிஞர் (BOTANIST);   முக்கியமாக விதைகள் மற்றும் சூழலியல்              (SEEDS & ECOLOGY) சிறப்பறிஞர்;   பின்னர் ஹீரோஷிமா பல்கலைக் கழகத்தில், விவசாயத் துறையில் தனது ஆய்வுக் கட்டுரையை எழுதினார்;  பின்னர் ஜப்பானின் பல பகுதிகளில் ஆய்வுகளைச் செய்தார்;   பின்னர் யோகோஹோமா பல்கலைக் கழகத்தில் (YOKOHAMA UNIVERSITY) தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

ஜெர்மனியின் 'பெடரல் இன்ஸ்ட்டியுட் ஆப் நேச்சரல் வெஜிட்டேஷன் (FEDERAL INSTITUTE OF NATURAL VEGETATION) என்ற அமைப்பின் தலைவர் 'ரேய்ன்ஹோல்ட்  டியூக்சன்" (RAINHOLD TUEXON) என்பவருடன் இணைந்து 1956 முதல் 1958 வரை கான்செப்ட் ஆப் பொட்டன்ஷியல் நேச்சர் (CONCEPT OF POTENTIAL NATURE) என்பதுபற்றி ஆய்வுகளை மேற் கொண்டார்.

1960 ஆம் ஆண்டில் ஜப்பான் திரும்பிய அவர்  பழமையான வனங்கள் மற்றும் மரங்கள் பற்றிய ஆய்வினைத் தொடங்கினார்;   அது தொடர்பான வரை படங்களைத்  தயாரிக்கத்  தொடங்கினார்; பின்னர் 1300 இடங்களில்,  முழுக்க முழுக்க  ஜப்பானிய மரங்களை உருவாக்கத் திட்டமிட்டார்.

மியாவாக்கி அடிப்படையில் ஒரு ஆராய்ச்சியாளர்; அவர் மிகுந்த சிரமத்துடன் பல ஆண்டுகள் ஆய்வு செய்து, உள்ளுர்  மரவகைகளைக் கண்டுபிடித்தார்;  நாமும் நாம் இழந்துபோன  வனங்களை  உருவாக்கும்போது, நமது உள்ளுர் மர வகைகளைத்  தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com    

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...