வெற்றி பெற்ற மனிதனாக மனுஷியாக ஆவது எப்படி ?
ஒரு மனுஷன் வெற்றிகரமான மனுஷனா எப்படி
ஆகறது ?
டேல் கார்னஜி படிச்சேன். நெப்போலியன் ஹில் படிச்சேன். அப்பொறம் ஸ்டீபன் கோவி, சிக் சேக்லர், ராபின் ஷர்மா எல்லாம் படிச்சேன். திருக்குறள் படிச்சேன், நாலடியார் படிச்சேன், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் படிச்சேன், அப்படியும் முன்னுக்கு வர்ற வழிய என்னால கண்டுபிடிக்க முடியல.
ஒருநாள் கடற்கரையில வறுத்த வேர்க்கடலை வாங்கினேன். ஒரு ‘ஏஃபோர்’ சைஸ் பேப்பர்ல மடிச்சிக் கொடுத்தான்.
வேர்க்கடலையை சாப்பிட்டு விட்டு அந்த பேப்பர்ல என்ன போட்டிருக்கான்னு பார்த்தேன்.
நாலே வரியில நச்சுனு எழுதியிருந்தான்.
வெற்றி பெற்ற மனுஷன் யார் ?
வெற்றி பெற்ற மனுஷி யார் ?
உங்களுக்கு எல்லோருக்குமே அதை சொல்லலாம்னு நெனைக்கறேன்.
உங்க மனைவி எவ்வளவு செலவு செய்யறாங்களோ, அதைவிட அதிகமா சம்பாதிச்சா நீங்க வெற்றி பெற்ற மனுஷன் !
உங்கள் கணவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அது குறைவு என்று அவரையே நம்ப வைக்கும் நங்கைதான், வெற்றி பெற்ற மனுஷி !
30 வயசுல தொடங்கி 60 வயசு வரைக்கும் செய்த ஆராய்ச்சி 5 ரூபா வேர்க்கடலை பொட்டலத்துல முடிஞ்சி போச்சிங்க !
No comments:
Post a Comment