Friday, August 4, 2017

வைகை வருஷநாட்டு ஆறு - RIVER VAIGAI OF VARSHANADU


     





                                                          
வைகை 
வருஷநாட்டு
ஆறு 

RIVER VAIGAI
OF VARSHANADU

  வைகை ஆறு


பூமி ஞானசூரியன்,
செல்பேசி: +918526195370,
மின்னஞ்சல்: gsbahavan@gmail.com


மதுரையின்  பிரபலமான ஆறு
வைகை.  இது வருசநாடு
மலைப்பகுதியிலிருந்து  உற்பத்தியாகிறது.
பழனிமலை மற்றும்  வருசநாடு
மலைச் சரிவிற்கு  இடைப்பட்ட
பகுதிதான்;  இதன் சரியான
உற்பத்தி கேந்திரம். 


வட்டப் பாறை நீர்வீழ்ச்சி இந்த
ஆற்றில்தான் உள்ளது. மதுரை வழியாக
258 கி.மீ. பயணப்படும்  வைகை ஆற்றின்
நீர்வடிப்பரப்பு  7031 கி.மீ.: இது இராமனாதபுரம்
மாவட்டத்தில்  “பாக்ஸ்  ஸ்ட்ரைட்”  எ
ன்னுமிடத்தில்  சங்கமமாகிறது.

சங்க  இலக்கியங்களில்  வைகை ஆறு
பற்றிய  குறிப்புக்கள் பலவற்றை பார்க்கலாம்.
வைகை நதி எப்படி தோன்றியது என்பது
பற்றிய பாரம்பரிய  கதைகள்
பல உள்ளன. சுருளியாறு,
முல்லையாறு,  வராகநதி,  மஞ்சள்
ஆறு, கிருதுமால்நதி  ஆகியவை
அனைத்தும்  வைகை யாற்றின்
துணையாறுகள். இவற்றில்
கிருதுமால் நதியைத்தவிர
தேனீ  மாவட்டத்திலுள்ள  வைகை
அணைக்கட்டுப்;  பகுதியில்  இவை
ஒன்றாக சேர்கின்றன.  கிருதுமால்
மட்டும் மதுரையில்   இணைகிறது.

ஆயினும்  வைகை நதிக்கு  பெரும்பகுதி  நீர் கேரளாவின்  குமுளி என்னுமிடத்திலுள்ள ‘பெரியார்’ அணைக்கட்டிலிருந்துதான்  கிடைக்கிறது.
கேரளாவின்  ‘பெரியார்’  ஆற்றிலுள்ள தண்ணீர்  மேற்கு மலைத்தொடரிலிருந்து  பெரும்  குழாய்களின் வழியாக  தண்ணீர்  வைகை ஆற்றை அடைகிறது.

கோடைக்காலங்களில்  வைகை நதி  எப்போதும் வறண்டே இருக்கும்.  பெரும்பாலான   ஆண்டுகளில்  வைகையில்வரும்  தண்ணீர் மதுரையைத் தொடாமலே  காய்ந்து போகும்.

தேனி மாவட்டத்தில்   பெரியகுளம்  வட்டத்தில்  வைகை ஆற்றின்  குறுக்கே  கட்டப்பட்டுள்ளது  வைகை  அணை.

மதுரை மற்றும்  திண்டுக்கல்  மாவட்டங்களில்  குடிநீர்த்  தேவையையும்,  பாசனத் தேவையையும்  பூர்த்தி செய்யும் பணியைச்   செய்கிறது  வைகை ஆறு.

‘பெரியார்’  அணைக்கட்டு  1895 ஆம் ஆண்டு “ஜான் பென்னி குயிக்” என்ற வெள்ளைக்காரரால்  உருவாக்கப்பட்டது.  திருவாங்கூர்  ராஜ்ஜியத்தின்  வேண்டுகோளின்படி  பிரிட்டிஷ்  ராணுவத்தைச்  சேர்ந்த  பொறியாளர்கள்  இதனை கட்டி முடித்தார்கள். அடுத்து வந்த வெள்ளம்  அந்த  அணைக்கட்டை  சுத்தமாக   துடைத்தெறிந்தது.

மீண்டும் இந்த அணையைக் கட்ட  அரசு மறுத்து விட்டது.  ஜான் பென்னி  குயிக் தனது சொந்த ஊர் இங்கிலாந்துக்குப் போய் தனது பூர்வீக சொத்துக்களை  விற்று பணம் சேகரித்;துக் கொண்டு வந்து  இந்த அணையை இரண்டாவது முறையாகக்  கட்டி முடித்தார்.

அதனால் ஜான் பென்னி  குயிக்  என்ற பெயர் இங்கு  மிகவும் பிரபலம்.  அதனால்தான் இன்றும் கூட ஒவ்வோர் ஆண்டும்  மதுரை மற்றும்  தேனி  மாவட்டத்தை  சேர்ந்த விவசாய குடும்பங்கள்  அவருக்கு விழா  எடுக்கின்றன.

மதுரை, தேனி மாவட்டங்களில் குழந்தைகளுக்கு ஜான் பென்னி குயிக் என்று பெயர் வைப்பது சாதாரணம். கருப்புசாமி, மதுரை வீரன் மாதிரி ஜான் இங்கு காவல் தெய்வம் ஆகிவிட்டார்.




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...