Thursday, August 3, 2017

சிறுவாணி பவானியின் துணையாறு - RIVER SIRUVANI TRIBUTARY OF BAVANI




                                                             


  சிறுவாணி  ஆறு



பூமி ஞானசூரியன்,
செல்பேசி: +918526195370,
மின்னஞ்சல்: gsbahavan@gmail.com


கோயம்புத்தூர்  வாசிகளுக்கு சிறுவாணி
தண்ணீர்  அருமை புரியும்;.  மதுரையில்
வசித்த கழுதை எங்கு  கொண்டு
போய் விரட்டி விட்டாலும்  தேடிவந்துவிடுமாம்
மதுரைக்கே.  அதுபோல   சிறுவாணி  தண்ணீர்
குடித்தவர்கள்,  வேறு எந்தத்  தண்ணீரையும் 
மதிக்க மாட்டார்கள்.


வேளாண்மை பல்கலைக் கழகத்தில்
படித்தபோது நான்கு ஆண்டுகள் நான்
கோவையில்  குப்பை கொட்டி  இருக்கிறேன்.
சிறுவாணி  தண்ணீர்    என்றால்  அப்படி
ஒரு கிக்.  ஒரு முறை நாங்கள் சைக்கிள்
பயணமாக சிறுவாணி  சென்று வந்தோம்.
அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கோயம்புத்தூரிலிருந்து  ரொம்பப்  பக்கம்.
 
தென்இந்தியாவிலுள்ள மிக அழகான
சுற்றுலாத் தலங்களில்  முக்கியமானவை
இரண்டு.   சிறுவாணி  அணைக்கட்டு மற்றும்
சிறுவாணி  நீர்வீழ்ச்சி.  இதன் அருகாமையில்
பாணன் கோட்டை,                    (BANAN FORT)
 என்ற சுற்றுலா  தளமும்  உள்ளது. பாணன்
கோட்டை கோயம்புத்தூரிலிருந்து  15 கீ. மீ.
தொலைவிலும், சிறுவாணி   25 கி. மீ.
தொலைவிலும் உள்ளன.

பவானி ஆறு  காவேரி ஆற்றின்
துணையாறு.  அதுபோல  சிறுவாணி
பவானியின் துணையாறு.

2002 ஆம்  ஆண்டு கேரள அரசு
சிறுவாணி ஆற்றில் தடுப்பணை
கட்ட முயற்சித்தது. அப்போது
தமிழ்நாடு அரசு அதனை கடுமையாக
எதிர்த்தது.  இதனால் கோவை
நகருக்கு குடிநீர்  கிடைக்காது. பவானி
ஆற்றிற்கு நீர் வரத்து இருக்காது.
ஈரோடு விவசாயத்தை பாதிக்கும் என
தமிழ்நாடு  அரசு எதிர்ப்பு தெரிவித்தது
நினைவிருக்கலாம்.

சிறுவாணி கேரளா மாநிலத்தில்
இருந்தாலும். கோயம்புத்தூருக்கு
அருகில்; உள்ள ஆறு.

இந்த உலகின்  இரண்டாவது சுவைமிக்க
குடிநீர்  சிறுவாணிநீர்  என்று
சொல்லப்படுகிறது. அப்படி என்றால்
முதல் சு.மி.கு.நீ எது என்று வலைத்தளம்
முழுக்க வலை வீசி தேடியும் என் வலைக்கு
 சிக்கவில்லை. தேடிப்பாருங்கள. உங்களுக்கு
கிடைத்தால் சொல்லுங்கள்.
  
கோவை நகரின் தாகம் தீர்க்க தினமும்
72 மில்லியன்  லிட்டர் நீர்
சிறுவாணியிலிருந்தும் பில்லூர்
என்னுமிடத்திலிருந்து 35 மில்லியன்
லிட்டர்  தண்ணீரும் தினமும் செல்கிறது.

சிறுவாணி  அணைக்கட்டு, சுரங்கப் பாதை மற்றும்  கால்வாய் மூலம்  ஆளியார்,  பரம்பிக்குளம்,  வீரார், கோவையார்,   தூணக்கடவு, பாலார்,(?) தேக்கடி ஆகிய  ஆறுகள்  சிறுவாணி  அணைக்கட்டுடன்  இணைக்கப் பட்டுள்ளன.  மின் உற்பத்தி மற்றும்  பாசனத்திற்கான  ஏற்பாடு இது.
சிறுவாணி  நீர்வீழ்ச்சி  கோவையிலிருந்து  37 கி.மீ. தொலைவில் உள்ளது.

தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில்  குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட நீர்த்தேக்;கம்;  இது.  இதற்கான நிதியை வழங்கியது  தமிழ்நாடு  அரசு.
கோவையிலிருந்து  சிறுவாணி  நீர்வீழ்ச்சிக்கு பஸ்ஸிலேயே போகலாம்;.  இதற்கு பக்கத்திலுள்ள  இதர சுற்றுலா  ஸ்தலங்கள்  பரம்பிக்குளம்,  ஆளியார்,  கோவையில்  பாலார்  மற்றும்  ஆனைமலை மலைத்தொடர்.





No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...