Friday, August 4, 2017

பறலியாறு கன்னியாகுமரி ஆறு. - RIVER PARALIYARU OF KANNIYAKUMARI




பரலியாறு
                                                                 








 
பறலியாறு 
கன்னியாகுமரி   
ஆறு 
 
RIVER 
PARALIYARU OF 
KANNIYAKUMARI
பறலியாறு

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370,

மின்னஞ்சல்: gsbahavan@gmail.com

மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவின்
மஹேந்திரகிரி மலைகளில்
உற்பத்தியாகும் கன்னியாகுமரி
மாவட்டத்திற்கான ஆறு.
பறலியாறு அல்லது மத்தூர் அக்யூடக்ட்
என்கிறார்கள். பறலி ஆற்றின்மீது
மத்தூர்  என்னும் ஊரில்  கட்டப்பட்டிருப்பதால்
அதற்கு அந்தப் பெயர். இதனை
மத்தூர்  தொங்கும் பாலம்  என்றும்
சொல்லலாம்.

 இரண்டு மலைகளைத் தாண்டி தண்ணீர்
எடுத்துச்செல்ல  என்ன செய்யலாம் ?
என்று யோசித்தார்கள். அந்த இரண்டு
மலைகளுக்கு இடையே  தொங்கும்
பாலத்தை அமைத்தார்கள். தரைக்குமேல்
ஓடும் ஆறுகளைத்தான் இதுவரை நாம் பார்த்தோம்.
இது தலைக்குமேல் ஓடும் ஆறு (த.மே.ஓ.ஆ).
 
இந்த த.மே.ஓ.ஆ வின் நீளம் 3 கி.மீ;
தெற்கு ஆசியாவிலேயே அமைந்துள்ள
மிக நீளமான பாலம்; பெருஞ்சாணி  என்னும்
அணைக்கட்டும்   இவ்வாற்றின் மீது
கட்டப்பட்டுள்ளது. 

காமராஜர்  தமிழ்நாட்டின்
முதலமைச்சராக இருந்தபோது
வறட்சி நிவாரணப்பணியாக இது கட்டப்பட்டது.
இதன் மூலம்  எடுத்து செல்லப்படும்  நீர்
 விளவங்கோடு  கல்குளம்
ஆகிய வட்டங்களில்  விவசாயத்திற்கு
உதவுகிறது. 

கோடை  மாதங்கள் தவிர்த்து  மற்ற
மாதங்களில்  இந்த பாலம் தண்ணீரை
தொடர்ந்து  சுமந்து செல்கிறது. 

இது  கன்னியாகுமரி  மாவட்டத்தின்
கவர்ச்சிகரமான  சுற்றுலாத்தலம்.
தமிழக சுற்றுலாத்துறையும்,  உள்ளுர்
ஊராட்சியும்  சுற்றுலாப் பயணிகளும்
சிரமமின்றி  வந்து செல்ல அனைத்து
வசதிகளையும் செய்துள்ளனர்.

 சுற்றலாப் பயணிகள்  மேலே
ஏறிச்சென்று, மேலே ஓடும் நதி
நீரையும் சுற்றிலுமுள்ள இயற்கை
காட்சிகளையும் கண்டால்,
ஒட்டு மொத்த மேற்கு தொடர்ச்சி
மலைச்சாரலையும்  பார்த்த திருப்தி
அடையலாம்  என்கிறார்கள்.
எத்தனைமுறை  போய் இருக்கிறோம்
கன்னியாகுமரிக்கு பறலி ஆற்றைப்
பார்க்க வில்லையே  என
மனம் ஏங்குகிறது. 

இதனை பறதியாறு என்றும்
பரலியாறு என்றும் அழைக்கிறார்கள்.
இது தாமிரபரணி ஆற்றின் துணையாறு
என்பது குறிப்பிடத்தக்கது.  அதுபோல பரலி
ஆற்றின்  உபநதி  கொடையாறு.
இது மூலாட்டு முகம் என்ற  ஊரில்
 அதனுடன் கலக்கிறது.




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...