Sunday, August 6, 2017

நொய்யல் ஆறு காவேரியின் துணையாறு - RIVER NOYYAL TRIBUTARY OF KAVERI



நொய்யல்  ஆறு 

காவேரியின் 

துணையாறு 


RIVER NOYYAL 

TRIBUTARY OF KAVERI

 

மேற்கு தமிழ்நாட்டில்  பாயும் நதி
நொய்யல் ஆறு காவேரியின் துணையாறு.
தமிழ்நாட்டின்  மேற்கு மலைத் தொடர்
வெள்ளியங்கிரி மலைத் தொடரில்  உருவாகி
ஏறத்தாழ கேரள மாநிலத்தின்  எல்லையில்,
கோயம்புத்தூர்  மற்றும் திருப்பூர்  மற்றும்
அதன்  சுற்று வட்டாரங்களில்  பாய்ந்து
இறுதியாக  நொய்யல் என்னும் இடத்தில்
காவிரியுடன் சங்கமம்  ஆகிறது.

இந்த ஆற்றுப்படுகையின் மொத்தப் பரப்பு
3,580.  ச.கி.மீ. இதன் வடிநில பரப்பு
1,800 ச. கி.மீ. பரப்பில் வவசாயம்
செய்யும் நிலங்கள்  உள்ளன.

தென் மேற்கு மற்றும் வடகிழக்கு
பருவ மழைகளால் இப்பகுதி
குறைவான மழையைப் பெற்றாலும்
சுற்றுச்சூழல்  ரீதியாக  மிக முக்கியமானதாக
இப்பகுதி  கருதப்படுகிறது.  காவேரியின்
உப  நதியாக  விளங்கும்  நொய்யல்
ஆறு 173  கி.மீ.  பயணம் செய்து
32  ஏரிகளுக்கு  நீர் தந்து   உயிர் பிச்சை
அளிக்கிறது.   இந்த ஏரிகள் ஒன்றுடன்
ஒன்று  சீராக இணைக்கப் பட்டுள்ளன.
இதனால் நொய்யல் ஆற்றில்
நீரோட்டம் என்றால் இந்த  32  ஏரிகளும்
நீருக்காக  காத்திருக்கும்.  

நொய்யல் ஆற்றின்  கால்வாய்கள்,
ஏரிகள்,  குளங்கள், கிளைக்  கால்வாய்கள்
 ஆகியவை அனைத்தும்  ஏறத்தாழ
கோவைப் பெருநகரை  சுற்றி  அமைந்துள்ளன.
இது ஒரு அற்புதமான  நீர் விநியோக
முறைக்கு  ஓர் உதாரணமாகும்.

இதற்கான பெருமை சாளுக்கிய மற்றும்
சோழ அரசர்களைச் சேரும்.  நீரை
கால்வாய்கள் மூலமாக  பல பகுதிகளுக்கும்
எடுத்துச் செல்வது அத்துடன்  சேமிப்பது,
தேக்குவது, அதன்மூலம் நிலத்தடிநீரை
மேம்படுத்துவது. இந்த நுணுக்கங்களை
யெல்லாம்   சாளுக்கிய மற்றும்
சோழ அரசாட்சியில் இருந்தவர்கள்
விரல் நுனியில்  வைத்திருந்தார்கள்.
இதனால் சொர்ப்பமான அளவு
தண்ணீர் வந்தால் கூட  வெள்ளமாக
உருவாகாமல்  தடுப்பதில்  கவனம் காட்டினர்.

சங்கிலித் தொடராக அமைக்கப்பட்டுள்ள
இந்த ஏரிகள்  நிலத்தடி நீரை   மேம்படுத்தும்
பணியைச்  செய்தன.  அண்மைக் காலத்தில்
தொடரும்  நகர்ப்புறமாதலின் விளைவாக
இந்த சங்கிலித்தொடர் ஏரிகளை  பாராமுகமாக
விட்டு விட்டனர்.  நிலத்தடி நீர்வளம்
பெருக்கும் இச் செயல்  முடக்கப்பட்டு
விட்டதால்  இப்பகுதியில் தண்ணீர்
தட்டுப்பாடு என்பது  கொடிகட்டிப்
பறக்கிறது. விவசாய விளை நிலங்கள்
பரப்பில் சுருங்கிப்  போய்விட்டன.
மிதமிஞ்சிய பாசனத் தட்டுப்பாட்டால்
லட்சக் கணக்கான  தென்னை மரங்கள்
தங்களது நாளை எண்ணிக்
கொண்டிருக்கின்றன.  

தமிழகத்தின் சரித்திரத்தில்,
நொய்யல் ஆறு புனிதமான ஒன்றாக
கருதப்படுகிறது.  நொய்யல் என்னும்
இடத்தில் காவேரி ஆறு கலப்பதால்,
காஞ்சி என்று சொல்லப்பட்ட ஆறு
நொய்யல் ஆறாக மாறியது.  

இந்த இரு ஆறுகள்;  சங்கமமாகும்
நொய்யல் கிராமத்தில்  பழமையான
செல்லாண்டி அம்மன் என்னும்
பெண் தெய்வத்திற்கான  கோயில்
அமைந்துள்ளது.  கொங்கு நாட்டு
வேட்டுவ  கவுண்டர்  இனத்தைச்
சேர்ந்த  கரடிக்குளம் மக்களுக்கு
பாத்தியப்பட்டது என சொல்லுகிறார்கள்.  

தமிழ்நாட்டின் மேற்குப்பகுதி  கொங்கு
நாடு; சேரமன்னர்களின் ஆட்சிப்பகுதி;
சேர ராஜ்ஜியத்தின்  தலைமையாக
இருந்தது; அதன் பின்னர்  நந்த வம்சத்தினை
தாராபுரத்தை   தலைமையாகக்  கொண்டு
ஆட்சி செய்தனர்; விஜய ஸ்கந்தபுரம்
என்றும் தாரகாபுரி என்றும்  ஒருகாலத்தில்
தாராபுரத்தை அழைத்தனர். 

இப்பகுதியிலிருந்து  ஒரு காலத்தில்
கிரேக்கம் மற்றும்  ரோமானிய நாட்டினர்
வர்த்தக தொடர்பில் இருந்தனர்.  நொய்யல்
ஆற்றுப் படுகையில் உள்ள  காட்டீஸ்வரர்
கோயில்  ஆற்றுப் படுகையில்,  அதன்
கட்டிடக்கலைக்கு பேர்போனது; முதலாம்
நூற்றாண்டிற்கு முன்னரே ,இதன் ஆற்றுப்
படுகையில்  வசித்த மக்கள்,  வியாபாரம்
செய்ததற்கான சான்றுகள்  உள்ளதாக
ஆராட்சியாளர்கள்  சொல்கிறார்கள்.  

திருப்பூர்  மற்றும்  கரூர்  நகரங்களிலுள்ள,
தொழிற்சாலைகளிலுள்ள   கழிவுநீரை
ஒட்டுமொத்தமாக  சேகரிக்கும்  ஆறாக
தற்சமயம்    உள்ளதாக கூறுகிறார்கள்

இப்பகுதி  மக்கள். 2004  ஆம் ஆண்டு
‘சிறுதுளி’  எனும்  தொண்;டு  நிறுவனத்;தின்
முயற்சியால்  தொழிற்கூடங்கள் கழிவு நீரை
சுத்திகரிப்பு  செய்த பின்னNர்
வெளியிட வேண்டும் என  2003
முதல்  2011  வரை  பல  தொழிற்கூடங்கள்
மூடப்பட்டன.
காஞ்சிமாநதி  மற்றும் செய்யாறு
ஆகியவை  நொய்யல் ஆற்றின் முக்கியமான
துணையாறுகள்.  இரண்டும் மேற்குத்
தொடர்ச்சி மலைத் தொடரில்
உற்பத்தியாகின்றன. சிறுவாணி 
அணைகளிலிருந்து  வெளிப்படும்
பெரியாறு, செய்யாறு ஆகிய ஆறுகள்
அனைத்தும்  கூடுதுறை  என்னுமிடத்தில்;
ஒன்றாக    இணைய  இவை நொய்யல்
ஆறாக புறப்படுகிறது.  

உற்பத்தியான இடத்திலிருந்து  160 கி.மீ.
பயணம் செய்யும் நொய்யல்  ஆறு, ஈரோடு
மாவட்டத்தில்  குடி நொடி  என்னும் இடத்தில்
காவிரி ஆற்றோடு கலக்கிறது.

இந்த  3  ஆறுகள் தவிர எண்ணற்ற
சிற்றோடைகள்  நொய்யல் ஆற்றிற்கு
நீர் விநியோகம் செய்கின்றன. இது
மழைக்காலத்தில்  மட்டும்தான்.
இதுபோல  34  சிற்றோடைகள்
நொய்யல் ஆற்றிற்கு  நீர்க் கொடை
செய்கின்றன.

நொய்யல் ஆற்றில்  இரண்டு பெரிய
அணைக்கட்டுகள்  உள்ளன.  ஒன்று திருப்பூர்
மாவட்டத்தில், சென்னிமலைக் கருகில்
ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு.
இன்னொன்று கரூர் மாவட்டத்தில்
வெள்ளக்கோயில் கிராமம் அருகே
ஆத்துப்பாளையம் அணைக்கட்டு.  

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில்
சுமார் 20,000  ஏக்கரில்  பாசனம்  செய்ய
இவ்விரு அணைகளும் கட்டப்பட்டன.
ஆனால் இன்றுவரை திருப்பூர் நகரின்
 நெசவு தொழிற் கூடங்களின்
கழிவுநீர்  சேகரிக்கும்  தேக்கமாகி
விஷமாகிறது  ஒரத்துப்பாளையம்
எனறு சொல்லப்படுகிறது. 

 கூடுதுறையிலிருந்து திருப்பூர் வரை
நொய்யல்  ஆற்றில்  23  தடுப்பணைகள்
கட்டப்பட்டுள்ளன. 

ஒரு காலத்தில்  3,580  ச.கி.மீ.  பரப்பு
பாசனம் அளித்த பெருமை உடையது
நொய்யல் ஆறு.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370,
மின்னஞ்சல்: gsbahavan@gmail.com


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...