Friday, August 4, 2017

கொசத்தலையார் சென்னை ஆறுகளில் ஒன்று RIVER KOSATHALAYAR ONE OF 3 OF CHENNAI




                                                 











கொசத்தலையார்  
சென்னை ஆறுகளில் 
ஒன்று

RIVER KOSATHALAYAR 
ONE OF 3 OF CHENNAI 

கொசத்தலையார்  ஆறு


இப்போதைய கொசஸ்தலை ஆறுதான்;
சுமார் 100  ஆண்டுகளுக்கு முன்  குடித்தலை
ஆறு. இதையே கொற்றலையாறு
என்றும் சொல்லுகிறார்கள்.
1886 ஆம் ஆண்டு   வாக்கிலேயே
கொசஸ்தலையாறு சென்னைக்கு
குடிநீர் கொடுத்துதவி செய்ததாம்.


இந்த ஆற்றிலிருந்து கொண்டு
செல்லப்பட்ட தண்ணீர்  சோழவரம்
புழல் ஏரிகளில் தேக்கிவைத்து
முதலில் கீழ்ப்பாக்கம் வரை கொண்டு
சென்றார்கள். அதன்பிறகு இந்தத்
தண்ணீருடன் மருந்து கலந்து  28 அடி
 உயரத்தில் அமைக்கப்பட்ட 15 லட்சம்
 காலன்  பிடிக்கும்  மேல்நிலைத்
தொட்டியில்  நிரப்பி   சென்னை
நகரின் மாடிவீடுகளிலும், தண்ணீர்
கிடைக்கும்படி  விநியோகம்
செய்யப்பட்டதாக  “சென்னை மாநகர்
என்னும் புத்தக ஆசிரியர்;
இது பற்றி  விளக்கமாக எழுதியுள்ளார்.

1922 ஆம் ஆண்டு 5.25 லட்சமாக  இருந்த
சென்னை  மக்கள் தொகை  1941  ல்  7¾
லட்சமாக  அதிகரித்தது.  குடிநீர்த்தேவையும்
அதிகரித்தது. அதனை ஈடுசெய்ய அன்றைய
நகராண்மைக் கழகத்தின்  நகரத்
தந்தை  எஸ். சத்யமூர்த்தி 1940 ஆம்
ஆண்டு ஆகஸ்டு மாதம்  பூண்டி நீர்த்தேக்கம்
கட்டுமானத்தைத் தொடங்கி  1944
ஆம் ஆண்டு  ஜூன் மாதம் இழுபறி
இல்லாமல் கட்டி முடித்தார்.
இதன் கொள்ளளவு  25,000.
மில்லியன் கனஅடி. இது
சோழவரம்  புழல் ஏரிகளின்
மொத்த கொள்ளளவிற்கு 
சமமானது. 

கொற்றலையாறு  பிற்காலத்தில் மருவி
கொசத்தலையார் ஆறு ஆனது.  
சென்னைப்  பெருநகர்ப் பகுதியில்

ஓடும்  முக்கிய 3 நதிகளுள்  இதுவும் ஒன்று.
மணலியில்   பிரியும் இதன் கிளை ஆற்றை
கொற்றலையார் ஆறு என அழைக்கப்படுகிறது.

திருவள்ளுர் மாவட்டத்தில்  பள்ளிப்பட்டு பகுதியில் உற்பத்தியாகி 136 கி.மீ  பயணம் செய்து  கிழக்கு முகமாக ஓடி  வங்கக்கடலில் சங்கமமாகிறது. 
இந்த ஆற்றின் வடதிசையில்  ஓடிவரும் முக்கிய உபநதி நகரி ஆறு:  ஆந்திர மாநிலத்தின்  சித்தூர் மாவட்டத்தில்  உற்பத்தியாகி  பூண்டி அணைக்கட்டு பகுதியில்  கொசத்தலையாற்றுடன் சேர்கிறது.

பின்னர் அது சென்னைப் பெரு நகரில்  நுழைந்து எண்ணூர் ஓடையின் வழியாக வங்கக்கடலில்  கலக்கிறது.

தாமரைப்பாக்கம்  மற்றும் வள்ளுர்  என்ற இரு  இடங்களில் இந்;த ஆற்றின்  குறுக்கே  இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன: இதன்    மொத்த  நீர் பிடிப்பு பகுதி 3,757 ச.கி.மீ: இதன் நீரோட்ட அளவு (DISCHARGE OF CAPACITY) ஒரு வினாடிக்கு 1,10,000. கியூபிக் மீட்டர்.

பெருமழைக்காலத்தில் மிகையான நீர்வரத்து  பூண்டி நீர்த் தேக்கத்தில்  ஏற்படும் போது  அதனை கொசத்தலை ஆற்றில் வடிக்கிறார்கள்.  இது கொசத்தலை ஆற்றின்  வழியாக  எண்ணூர் சிற்றோடையில்  கலந்து வங்கக் கடலை  அடைகிறது.

கொசத்தலை ஆற்றின்  உப ஆற்றுப் படுகையில் (சுiஎநச  ளுரடி  டீயளin) சுமார் 200 ஏரிகள்  அயம்வாம்( INTEGRATED AGRICULTURE MODERN ASSOCIATION AND WATER BODIES RESTORATION AND MANAGEMENT) திட்டத்தின் மூலம் சீரமைக்க  திட்டமிடப்பட்டுள்ளது.  கழிமுகத்தில் (RIVER MOUTH) மணல்மேடு வருவதைத் தடுக்க  (FORMATION OF SAND BARS)  தடுப்புச் சுவர் (GROYNES) அமைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு நீர் வள ஆதாரத்தை (WATER RESOURCE DEPARTMENT) 300 மில்லியன்  ரூபாய்ச் செலவில்  இந்த ஆற்றில் திருவள்ளுர் மாவட்டத்தில்  வண்டிக்காவனூர்  கிராமத்தில் ஒரு தடுப்பணை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இது சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்  காரனோடை  மேம்பாலத்தின்  அருகாமையில்  அமைய உள்ளது. இந்த தடுப்பணையின் அகலம்  300 மீட்டர்,  உயரம்  6.3 மீட்டர்.    இதன்மூலம் சுமார் 10 கி.மீ.  தொலைவிற்கு நீரை சேமிக்க முடியும்
.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்gsbahavan@gmail


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...