Friday, August 4, 2017

கூவம் சென்னையின் மூன்று ஆறுகளில் ஒன்று - RIVER KOOVUM ONE AMONG THREE






கூவம் 
சென்னையின் 
மூன்று 
ஆறுகளில்  ஒன்று

 RIVER KOOVUM 
ONE AMONG THREE 
OF CHENNAI
 கூவம் ஆறு

வங்கக் கடலில் சங்குமமாகும்  ஆறுகளில்
மிகவும் குறைவான நீளமுள்ள ஆறு  கூவம்.
மொத்தம் 72 கி.மீ.  ஓடும் இது.  நகர்ப்புறத்தில்
 32  கி.மீ. ம், மீதமுள்ள 40 கி.;மீ.
கிராமப்புறங்களிலும்  பாய்ந்து சென்னை
நகரின் கழிவு நீரை  சுமக்கும்  பெரும்பணி
ஆற்றும்  புனிதமான ஆறு.


இந்த ரீதியில் பார்த்தால்  அநேகமாக
இந்தியாவில் பாயும்  அனைத்து ஆறுகளுமே
புனித ஆறுகள்தான்.

திருவள்ளுர் மாவட்டத்தில்,  கூவம்
என்னும்  கிராமத்தில்   உற்பத்தி  ஆகும்
இந்த ஆறு  சென்னை   மாவட்டத்தில்
கீழ்பாக்கம்,  நுங்கம்பாக்கம், மற்றும்
திருவல்லிக்கேணி பகுதியில்  மட்டும்
14 கி.மீ. செல்கிறது.

இந்த ஆறு கிராமங்களின் வழியாக
பயணம்  செய்யும் போது மாசுபடாமலும்
தூசுபடாமலும் வருவதால், அதன் தண்ணீர்
விவசாயத்திற்கு பயனாகிறது.
அத்தோடு நிலத்தடி நீர்மட்டத்தை
மேம்படுத்தவும்  உதவுகிறது.

திருவல்லிக்கேணி  ஆறு  (TRIPLICANE RIVER)  என்பது  அதன் பழைய பெயர். பலநூறு ஆண்டுகளாக சென்னைப் பெருநகரின்  கலாச்சார வாழ்வுடன்  மிக நெருங்கிய தொடர்புடையது  கூவம். 

இருபதாம் நூற்றாண்டின்  தொடக்க காலம்  வரை   சென்னைக்கு  வரும் யாரும் இறங்கி  குளிக்கும்  வகையில் சுத்தமாகத்தான் இருந்தது கூவம்.  பிரபல கொடையாளி  பச்சையப்ப முதலியார் தினமும்  கூவம் குளியலுக்கு  பின்னால்;தான்  சிந்தாதிரிப்பேட்டை   கோமளீஸ்வரர்  கோயிலுக்கு  சாமி கும்பிடப் போவாராம்.

கூவம் ஆற்றுத்தண்ணீர்  குளிப்பதற்கு மட்டுமல்ல  வேறு எதற்குமே  பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாகிவிட்டது.  விஷத்தன்மை கொண்டதாகவும் மாறிவிட்டது.

கூவம் ஆறு  அதே  பெயருடைய  கிராமத்தில்தான்  உருவாகிறது  என்று பார்த்தோம். இந்த கூவம் கிராமம் சென்னையிலிருந்து  70  கி.;மீ.  தொலைவில்  உள்ளது. ஆனால் அது ஒரு ஆறாக உருவெடுப்பது  5 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும்  சட்டரை என்னும் கிராமத்திலிருந்துதான்.

பூந்தமல்லியிலிருந்து  சென்னைக்கு நுழையும் கூவம், அரும்பாக்கம,; சூளைமேடு ,சேத்துப்பட்டு , எக்மோர் கடந்து  சிந்தாதிரிப்டே;டையை அடைந்தவுடன் அகன்ற கூவமாக                மாறுகிறது. எக்மோர் அருகே அது இரண்டாக பிரிந்து மீண்டும் நேப்பியார் பாலம் அருகில்  இணைந்து ஒரு தீவி னை உருவாக்குகிறது.  அதுதான் தீவுத்திடல் என்னும்  ஐலேண்ட் கிரவுண்ட். 

பக்கிங்ஹாம்  கால்வாயின்  வடக்குப்பகுதி, பழைய  மத்திய சிறைச்சாலை அருகில்  கூவம் ஆற்;றுடன் இணைகிறது. பின்னர் அது சென்னைப் பல்கலைக்கழக   வளாகத்தின்  அருகில் நேப்பியார் பாலத்தைத்  தாண்;டி  வங்கக்கடலில்  சங்கமமாகிறது.

இந்த ஆற்றுடன்  75 க்கும் மேற்பட்ட   சிறு சிறு  ஏரிகள்  இணைந் துள்ளன. இந்த  ஏரிகளிலிருந்து வடியும் மிகுதியான நீர்  கூவம் ஆற்றை வந்தடையும். இந்த ஆற்றின் நீர்வடிக்கும் திறன்  (DISCHARGE CAPACITY)  ஒரு வினாடிக்கு 19,000  கனமீட்டர்.

கூவம் ஆறு   உருவாகும் இடத்தில்  3 பழமையான சிவன் கோயில்கள் உள்ளன.  கூவம் கிராமத்தில்  உள்ள  திருவிற்கோலம் கோயில், விளம்;புடையான் கோப்புக் கோயில்,   மற்றும் திருவேற்காடு  சிவன் கோயில்.  கோயம்பேடு கோயிலும் இதன் கரையில்தான்  உள்ளது.  இந்த கோயில்கள் அனைத்தும் திருஞான சம்பந்தரின்  பாடல்களால் பாடப்பெற்ற ஸ்தலங்கள்.  கூவம் கிராமத்திலிருந்து   2  கி.மீ. தொலைவிலுள்ள பிள்ளையார் குப்பத்தில்  அகோரமூர்த்தி கோயிலும்  குறிப்பிடத்தக்க  ஒன்றாகும்.  

பழந்தமிழ்  நாட்டில்  சோழ அரசாட்சியின்போது,  கூவம் ஆற்றிற்கு  வேறு பெயர் வைத்திருந்தார்கள்.   கஷ்டபுத்யோர்  பதிஹி  என்பது அதன் பெயர்.  கூவத்தோடு சேர்ந்திருந்த  16  கிராமங்களை, 16 நத்தம்  என்றழைத்தார்கள்.  கூவம் ஆறு சென்னை சேப்பாக்கத்தில்  மெரினா கடற்கரையின்  வடக்கு முனையில்  கடலில் போய் கலக்கிறது .  1950 ல் நடத்திய ஆய்வின்படி  கூவம் ஆற்றில் 49  வகையான மீன்இனங்கள்  கண்டறியப்பட்டன.  இவை 1970 ல்  21 ஆக குறைந்தது.
 
உலக வங்கியின்  உதவியுடன்  கூவம் ஆற்றில்  ஓர் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது.  இந்த ஆய்வில் சுத்திகரிக்கப்பட்ட  கழிவு நீரைப்போல 80 பங்கு மாசுடைய நீர்  கூவம் ஆற்றில் ஓடுவதாக  கண்டுபிடிக்கப்பட்டது.  இதில் எடுக்கப்பட்ட நீர் மாதிரியை  அதிக நீர் சேகரித்த பின்னாலும், அதில் விடப்பட்ட மீன்கள்  3 முதல்  5 மணி நேரத்தில்  இறந்து போயின. 

இதில் ‘ஹெவி மெட்டல்ஸ்’ என்னும்  மிகு எடை கொண்ட தாமிரம் மற்றும் பூச்சிக் கொல்லி களான  எண்டோசல்பான், லிண்டேன்  ஆகியவையும் குறைவான அளவு இருப்பதாக  தெரிவிக்கப்பட்டது. 

அரசு நிறுவனமான சென்னைக்  கார்ப்பரேஷன், தொழிற்கூடங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களும்  கழிவு நீரை கூவம் ஆற்றில் விடுவதில்  பிரதானப்பங்கு வகிக்கின்றன  என்று பொதுப்பணித் துறை  தெரிவித்து  உள்ளது. 

இந்த நீரில் ஆக்சிஜன் சுத்தமாக இல்லை  என்று  ஆய்வுக் குறிப்;புகள்  தெரிவிக்கின்றன.  கூவம் நதி சென்னைப் பெருநகருக்குள்  சாக்கடையாக ஓடினாலும் அதன் கரையோரங்களில்  குடிசைகளுக்கு குறைவில்லை.  அங்கு வீசும் துர்நாற்றத்தையும்  அசுத்தமான சூழலையும்  ஈ , கொசு ,  போன்றவற்றுடன்  மக்கள் மல்லுகட்டியபடி வசிப்பது என்பது  ஆச்சரியமானது.

2003 ஆம் ஆண்டு; கணக்கெடுப்பின்படி 9,000. குடும்பங்கள் கூவம் ஆற்றங்கரையில் குடிசையில் வசிக்கிறார்கள். 400 க்கும் மேற்பட்ட கடை வண்டிகள், விளம்பர நிறுவனங்களின் கட்டிடங்களும் இருந்ததாக சொல்லப் படுகிறது. இங்கு 2915 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும்  வெள்ளம்  இவர்களை  எல்லாம்  காலி செய்துவிட்டதாக  சொல்கிறார்கள். 

வெள்ளம் வடிந்துவிட்டதும்  அங்கு மறுபடியும் குடியேறிய குடியிருப்புக்கள் எவ்வளவு என்பதையும்  இனிவரும் கண்டெடுப்பில்தான்   கணக்கெடுக்க முடியும். சென்னையில் தினமும்  50,000 மில்லியன்;  லிட்டர்  கழிவு நீர்  வெளியிடப்படுகிறது.   இதில் 30 சதம் கூவம் ஆற்றையும், 60 சதம்;  பக்கிங்ஹாம் கால்வாய்  கால்வாயிலும் மீதம் 10 சதம்  அடையார் ஆற்றிலும் விடப்படுகிறது.

கூவம் ஆற்றில் சில இடங்களில் நகராட்சியின்  திடக் கழிவுப் பொருட்களும் கொட்டப்படுகின்றன. உதாரணத்திற்கு மதுரவாயல்  பகுதியில் தினமும் 7 டன் நகராட்சி  கழிவுகள்  கொட்டப் படுவதாக  சொல்கிறார்கள்.
 
கூவம் போன்ற  நீர்வழித் தடங்;களை   சுத்தம் செய்வதற்கான முயற்சி  1872 ல்  வெள்ளைக்காரர்கள்  ஆட்சிக்காலத்திலேயே   தொடங்கியது.  நாடு சுதந்திரம் அடைந்தபிறகு,  அறிஞர் அண்ணா   பொறுப்பேற்றதும்  அதற்கென ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தார். 

இந்த திட்டத்தின் கீழ்  7 படகுத்துறைகள்  அமைக்கப்பட்டன.  1973 ல் டாக்டர். கலைஞர். மு. கருணாநிதி  அவர்கள் அமைச்சராக பொறுப்பேற்றபோது  மீண்டும் ஒரு முறை  முயற்சி  மேற்கொள்ளப்பட்டது.

2006 ஆம் ஆண்டில்  தி.மு.க.   ஆட்சிக் காலத்தில்   இதற்கென ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து  2010, 2011, 2012, இப்படி தொடர்ந்து  பல   முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் சென்னையின் கழிவு நீரை ஏந்திச் செல்லும் கூவம் ஆறு, பக்கிங்ஹாம்  கால்வாய்,  அடையாறு  ஆகிய 3  ஆறுகளின்  சாக்கடை  என்னும் அவற்றின் முகத்தை  மாற்ற முடியவில்லை.

ஒரு சமயம் இதே நிலையில் இருந்த தேம்ஸ் நதியை சுத்தப் படுத்தி விட்டார்கள். இன்று உலகின் மிக சுத்தமான நதிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து முறையாக முயற்சி செய்தால் தேம்ஸை ஓரங்கட்டிவிடலாம்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...