Friday, August 4, 2017

கடனாநதி அகத்திய மலை ஆறு - RIVER KADANA OF AGASTHIYAR MOUNTAIN

                                                         



     

         
கடனாநதி
அகத்திய  மலை
ஆறு 

RIVER KADANA
OF AGASTHIYAR
MOUNTAIN

 கடனாநதி


பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail


திருநெல்வேலி   மாவட்டத்தில்  ஓடும்
ஆறு கடனா நதி:   கருணை ஆறு  என்றும்
இதனை அழைப்பர்:  பொதிகையில்
பொதிந்திருக்கும் அகத்திய  மலையில் 
உருவாகிறது:  இதற்கு 5 துணையாறுகள்
உள்ளன: அவை   கல்லார்;, கருணையார்,
வீர நதி,  ஜம்பு நதி,  மற்றும் ராமநதி.


கடனார் நதி  உற்பத்தியான  இடத்திலிருந்து
43 கி.மீ. பயணித்து திருப்புடை மருதூர்;
என்னும்  கிராமத்தில்  தாமிரபரணி

நதியுடன் சேரந்து  தனது தனிப்பட்ட
பயணத்தை   முடித்துக் கொள்கிறது.
 
திருப்புடைமருதூர்  என்னும் கிராமத்தில்
தாமிரபரணியுடன்   சங்கமமானதை
அடுத்து  கரையின் இருமருங்கிலும்,
அமைந்துள்ளவை  அம்பாசமுத்திரம்
மற்றும் கல்லிடைக்குறிச்சி நகரங்கள்.  

கீழாம்பூர் என்னுமிடத்திலிருந்து 
வடகிழக்கு திசையில்  1½  கி.மீ. 
தொலைவில் கடனா  நதியின்
துணையாறுகள் கல்லார்,
கருணையார்,  வராகநதி
ஆகியவை சங்கமமாகின்றன.

கடனார் நதியில்  ஆறு அணைக்கட்டுக்களும்  ஒரு நீர்த்தேக்கமும்  அமைந்துள்ளன.  இந்த நீர்தேக்கத்தின்  கொள்ளளவு  99 லட்சத்து  70  ஆயிரம்  கியூபிக்  மீட்டர். (8,000 ஏக்கர் அடி) இதன்  மூலம்  38.87 ச.கி.மீ. பரப்பில், பாசனத்திற்கு தண்ணீர்                    தருகிறது.

அரசப்பட்டு அணைக்கட்டு,  ஆழ்வார்குறிச்சி  தேங்கல்  அணைக்கட்டு,  பஞ்சப்பள்ளி அணைக்கட்டு,  காங்கேயம்  அணைக்கட்டு,  காக்கவல்லூர்   அணைக்கட்டு,  ஆகியவை ஆறும்  கடனார்  நதியின் மீது  அமைந்துள்ளவை.
சாம்பன் குளம்,  சிவசைலம்,  கருத்தபிள்ளையூர்,  பூவன்  குறிச்சி,  கீழாம்பூர்  ஆகியவை  கடனார் நதிக்கரை  நகரங்கள்.

கடனா நதியின் நீர்த்தேக்கம்  திருநெல்வேலி நகரின் அழகிய  ஓர்  சுற்றுலா  தலம்.  இது மேற்கு மலைத் தொடர்ச்சியில்  ஆழ்வார் குறிச்சிக்கு அருகாமையில் சிவசைலம்  கிராமத்தில்  அமைந்துள்ளது.  குற்றாலம் மற்றும்  சபரிமலை சீசன்களில்  இங்கு  சுற்றுலா  பயணிகள் கூட்டம்  நிரம்பி வழியும்.




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...