Friday, August 4, 2017

செய்யாறு ஜவ்வாது மலை ஆறு RIVER CHEYYARU OF JAVVATHU HILLS


                                                         





செய்யாறு
ஜவ்வாது மலை
ஆறு

RIVER CHEYYARU
OF JAVVATHU HILLS 

 செய்யாறு

செய்யாறு என்பது இன்றைய பெயர்.
ஒரு காலத்தில்  அது சேய் ஆறு.
இதன்பொருள்  குழந்தை ஆறு.
ஒரு குழந்தை விளையாடுவதற்காக
உருவாக்கப்பட்ட ஆறு. தன் குழந்தை
முருகன் விளையாடுவதற்காக
தாய்  பார்வதி  பூமிப் பந்தின்மீது
தனது திரிசூலத்தால்  கோடிட்டு
இந்த ஆற்றினை  உருவாக்கி;
தன் மகனிடம் விளையாடக்;
கொடுத்தார். இதுதான்
சேய்ஆறு புராணம்.


மிகவும் பிரபலமான  4 சைவ முனிவர்களுள்
ஒருவரான  திருஞான சம்பந்தர்,
ஒருமுறை இந்தக்கோயிலுக்கு வருகை
தந்தார்.  அங்கிருந்த ஆண் பனை ஒன்றை
தனது பாடலால்  பெண்  பனையாக 
மாற்றி அனைவரையும் ஆச்சரியத்திற்கு
உள்ளாக்கினார்.

இன்றும் கூட செய்யாறு  புனித ஆறு.
தெய்வத்தன்மை  படைத்த ஆறு.
இதன் பின்புலத்தில்  நுற்றுக்கணக்கான
சுவையான சரித்திரச் சம்பவங்கள்  அடங்கியுள்ளன.

கிழக்கு தொடர்ச்சி மலையின்
அழகிய பகுதியாக விளங்கும்
ஜவ்வாது மலைத்தொடரில்
பிறப்பெடுத்து, அங்கிருந்து
திருவண்ணாமலையில்
இறங்கி ஓடி  ஓய்ந்து
வங்காள விரிகுடாவில்  சங்கமமாகும்.
தனக்கு தேவையான நீரை
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு
பருவ மழைகளின்  மூலமாக பெறுகிறது. 

பாலாற்றின்  துணையாறுகளுள்
முக்கியமானது   செய்யாறு.
பாலாற்றில் அணைக்கட்டிலிருந்து
அதன் உபரியான நீர்  கொசத்தலை
ஆற்றின் ஆற்றுப் படுகையின், பூண்டி
நீர்த்தேக்கத்திற்கும், அடையாறு
ஆற்றுப் படுகையின்;   செம்பரம்பாக்கம்
 ஆற்றிற்கும்,    விநியோகிக்கப்பட்டது.

தெலுங்கு கங்கைத் திட்டம்  வருவதற்கு
முன்னால்  இந்த இரண்டு நீர்த்
தேக்கங்கள்தான்  சென்னைக்கு குடிநீர்
விநியோகம் செய்தது.  இந்த  திட்டம்
வந்தபின்னால்  பாலாற்றை சென்னை
முழுவதுமாக நம்பி இருக்கவில்லை
என்பது  குறிப்பிடத்தக்கது. நாள் ஒன்றுக்கு
1,000 மில்லியன் லிட்டர் குடிநீர்
சென்னைக்கு விநியோகம் செய்யத்
தொடங்கப்பட்டது                        
 “தெலுங்கு  கங்கை   புராஜெக்ட்;”
என்னும்  அற்புதமான திட்டம்.

கணேசபுரம்  அணைக்கட்டு
பாலாற்றின் குறுக்காக 
ஆந்திர அரசால்  கட்டப்படுவது.
குப்பம் அருகே அமைந்துள்ள
இந்த அணைக்கட்டை  எதிர்த்து,
வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை,
திருவள்ளுர்  மற்றும் சென்னையை
சேர்ந்த  பொதுமக்கள் போர்க்கொடி
 உயர்த்தி உள்ளனர்.

காவேரி  ஆற்றுப்பிரச்சனைக்கு அடுத்தபடியாக   பாலாற்றின் பிரச்சனையும் கர்நாடகாவிலும்  தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் கொழுந்துவிட்டு எரிகிறது.  ஆனால் எப்போதாவது ஒருமுறை என்றால்கூட  இந்த ஆறுகளில்; உபரியாகச் செல்லும்  நீரை  தேக்கி வைக்கும்  நீர்த்தேக்கங்களை  நிறைய அமைப்பதன் மூலம் இந்தப்  பிரச்சனையை சுமூகமாக  தீர்க்க  முடியும்.

மழைநீரில்   ஆறில் ஒரு பங்கு நீர்  ஆற்றில்  ஓடுகிறது.  ஒரு பங்கு  நிலத்தடி  நீராக சேர்கிறது.  மீதமுள்ள 4 பங்கு நீர் அவ்வித பயனுமின்றி நீர்  சேகரத்திற்கு வாய்ப்பின்றி  சேதாரம்  ஆகிறது.  ஒரு பங்கு கடலைச்சென்று   சரணடைகிறது.  இது  என் சொந்தக்  கருத்தல்ல.  தமிழ்நாட்டில்  துவாக்குடியில்  உள்ள நீர்  ஆராய்ச்;சி  மையத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு.  இப்படி சேதாரம் ஆகும் நீரை  சேகரிக்க  நாம் என்ன செய்யப் போகிறோம் ?

பருவகால மழைநீரை  எடுத்துச் சென்று திருவண்ணாமலை  மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி  மற்றும் எண்ணற்ற கிராமங்களுக்கு பரசன நீரை  தந்து  விவசாயத்திற்கு உயிர்நாடியாக  விளங்குவது செய்யாறு.

செய்யாறு ஆற்றங்கரையில்தான்  அமைந்துள்ளது  வேதகிரீஸ்வரர்  ஆலயம்.  வேத நடேஸ்வரர்  கோயில்  என்பது  இதன் பழைய பெயர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்:
gsbahavan@gmail.com


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...