மழைநீரை சேகரித்து சுத்தம் செய்து குடிக்கலாம்
RAINWATER - HARVEST - CLEAN - DRINK
எத்தiனை குடிநீர் திட்டங்கள் வந்தாலும், உடனடியாக நமது குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதற்கு முக்கியமான காரணம், மழை பொய்த்துப் போனதுதான் என்பது எல்லோருக்கும் தெரியும். நாளை காலையே நதி நீர் இணைப்பையும் செய்ய முடியாது.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையில், ஆரம்பக்கட்டம் பொய்த்துப் போனாலும், ஆகஸ்ட் மாதம் திருப்திகரமாக உள்ளது; செப்டம்பர் மாதமும் அப்படியே இருக்கும் என்று நம்பலாம்; அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும் வடகிழக்கு பருவ மழையும், சாதகமாக இருக்கும் என நம்பலாம்.
மழை நீர் பற்றி பலரும் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை கீழே தொகுத்து அளித்துள்ளேன்.
கேள்வி 1. மழைநீரை குடிக்கலாமா.. ? கூடாதா ..? குடிக்கலாம். பயம் வேண்டாம். உலகம் முழுக்க பல நாடுகளில் மழை நீரைத்தான் குடிக்கிறார்கள். மழை நீருக்கு சமமான, சுத்தமான நீர் எதுவும் இல்லை.
2. மழைநீர் சுத்தமானதா ..?
மழைநீர் சுத்தமானதுதான்; சுத்தமாக சேமித்தால், சுத்தமான மழைநீர் கிடைக்கும்.
3. மழைநீர் குடிப்பதற்கு ஏற்ற தரமான குடிநீரா ..?
குடிப்பதற்கு ஏற்ற தரமான குடிநீர் என்று பார்த்தால், கிணற்று நீர், குழாய் நீர், பாட்டில் தண்ணீர், இவை எல்லாவற்றையும் விட தரமானது மழைநீர்.
4. மழை நீரில் தாது உப்புக்கள் இல்லை என்று சொல்லுகிறார்களே, அதைக் குடிப்பதால் சத்துக் குறைபாடு ஏற்படாதா ?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து அவை கிடைக்கிறது அதனால், நாம் குடிக்கும் நீர் சுத்தமாக இருந்தால் போதும்.
5. தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா, அல்லது நோய்க் கிருமிகளை அழிக்க என்ன செய்ய வேண்டும் ..?
பத்து காலன் தண்ணீருக்கு, ஒரு டீஸ்பூன் பிளீச்சிங்; பவுடர் கரைத்து விடுங்கள்; அதன்பின்னர் 30 நிமிடம் கழித்து அந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
6. பிளீச்சிங் பவுடர் என்பது என்ன ரசாயனம் ..?
சோடியம் ஹைப்போ குளோரைட்(SODIUM HYPO CHLORITE) என்பதுதான் அந்த ரசாயனம். தண்ணீரை சுத்தப்படுத்தும் சோடியம் ஹைப்போ குளோரைட் 5 முதல் 6 சதம் திறன் கொண்டதாக இருக்கும்.
7. குடிநீரில் அதிகபட்சமாக எவ்வளவு குளோரின் இருக்கலாம் ..?
அதிகபட்சமாக குளோரின் 4 பி பி எம் வரை இருக்கலாம். பி பி எம்; என்றால் பார்ட்ஸ் பெர் மில்லியன் என்பர். (PPM - PARTS PER MILLION).அப்படி என்றால் பத்து லட்சத்தில் 4 பங்கு என்று அர்த்தம்.
8. குடிநீரில் பிளீச்சிங்; பவுடர் கலந்த பிறகு, எவ்வளவு நேரம் கழித்து அதனைப் பயன்படுத்தலாம் ..?
இதனைக் கலந்த பிறகு அரைமணி நேரம் கழித்து, குடிக்கவோ, சமைக்கவோ, பயன்படுத்தலாம்.
9. மழைநீரை சுத்தப்படுத்துவது ரொம்பவும் கடினமான வேலையா ..?
சேமித்த மழைநீரை வடிகட்டி, கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது கடினமான காரியமா ..? அதில் கிருமிகள் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டால், பிளீச்சிங்; பவுடர் கலக்க வேண்டும்; கலந்த பிறகு 30 நிமிடம் கழித்துக் குடிக்கலாம். மழை நீரை சேமித்து குடித்தால் மட்டுமே குடிநீர் பஞ்சத்துக்கு தீ;வு காண முடியும்.
10. சேமிக்கும்போதே சுத்தமான மழைநீரை சேகரிக்க முடியுமா ..?
கண்டிப்பாக முடியும்; மழைநீர் சேகரிக்கும் கட்டிடக் கூரையிலிருந்து சேமிக்கும் பாத்திரம் அல்லது தொட்டிக்கு எடுத்து செல்லும் குழாய், அடுத்;து சேமிக்கும் பாத்திரம், அல்லது தொட்டி, இந்த மூன்றையும் சுத்தமாக வைத்துக் கொண்டால், சுத்தமான மழைநீரை சேமிக்கலாம். சேமித்துக் குடிக்கலாம், குளிக்கலாம், சமைக்கலாம், துவைக்கலாம்; கழிவறையை சுத்தம் செய்யலாம்; சைக்கிள், டுவீலர் கார் அத்தனையும் கழுவலாம்; தொட்டிச் செடிகளுக்கு உயிர் கொடுக்கலாம்; அத்தனைக்கும் மழை நீர் மட்டும்தான் கைகொடுக்கும்.
11.மழைக்காலத்தில் முதன்முதலாக பெய்யும் நீரை சேகரிக்கக் கூடாது என்கிறார்களே, அது ஏன் ..?
மழை பெய்ய ஆரம்பித்ததும், முதல் 10 அல்லது 20 நிமிடங்களுக்கு சேமிக்காமல் விட்டுவிடலாம்; இதனால் கூரையில் ஏதாவது அசுத்தம் சேர்ந்திருந்தால், அது தானாகக் கழுவிக்கொண்டு போய்விடும் அல்லவா ..?
12. கூரைநீர் அறுவடை எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கடைபிடிக்கலாம் ..? உலகின் அதிக மழை பெறும் பெருமை உடைய சிரபுஞ்சியில் கூட மக்கள் கோடைக் காலத்தில் ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். இப்போது நீங்களே சொல்லுங்கள், ‘கூரைநீர் அறுவடை எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கடைபிடிக்கலாம் ..?’
13. மழை அறுவடையில் எத்தனை முறைகள் உள்ளன...?
இன்று இயற்கையான நீர் ஆதாரங்களில், செயற்கையான தொட்டிகளில், நிலத்தடியில் உள்ள மண் கண்டத்;தில், வீடுகள் அல்லது இதர கட்டிடங்களின் கூரைகளின் மூலம், என நான்கு முறைகளில் மழை அறுவடை செய்யலாம்.
14. பயன்படும் வகையில் மழைநீர் அறுவடையை எத்தனை வகைகளில் பிரிக்கலாம் ..?
இரண்டு வகைகளில்; ஒன்று உடனடியான உபயோகத்திற்கு (பயிர்களுக்கு, தோட்டத்திற்கு மற்றும் கழிவறைகளுக்கு), இரண்டு நிலத்தடியில் சேகரித்து எதிர்காலத்தில் பயன்படுத்து வதற்கு.
15. நீரை அறுவடை செய்வதால் கிடைக்கும் பயன்கள் யாவை ..?
1.தண்ணீருக்காக செலவு செய்யும் பணம் மிச்சம்.
2.உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உப்புக்களோடு, நைட்ரேட் உப்புக்களின் அடர் தன்மையை நிலத்தடியில் குறைத்துவிடும்.
3. பெரும்பாலான மக்கள் கூரை நீர் அறுவடை செய்யும்போது குடிநீர் வடிகால் வாரியத்தின் வேலைப்பளுவும், பிரச்சனைகளும் வெகுவாகக் குறைந்துவிடும்.
16. அறுவடை செய்ததண்ணீரை அப்படியே பயன்படுத்தலாமா ...?
அதன் கார அமிலத்தன்மை எப்படி இருக்கும் ..?
அறுவடை செய்த நீர் காரத்தன்மை இல்லாமல், (ZERO HARDNESS) நடுநிலையான கார அமிலத் தன்மையுடன் (NATURAL PH) இருக்கும். இதனை வீடுகளில், தொழிற்சாலைகளில்;, இதர நிறுவனங்களில் அப்படியே பயன்படுத்தலாம்.
வெள்ள அபாயம் குறையும். குடிநீர் பிரச்சனை தீரும். குடிநீருக்காக செய்யும் செலவு மிச்சப்படும்; நீர் எடுப்பது, விநியோகம் செய்வது, ஆகியவற்றிற்கு செலவுசெய்யும் மின்சாரம் மற்றும் எரிபொருள் மிச்சமாகும். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வேலைப் பளு மிச்சமாகும்.
பூமி ஞான சூரியன், செல்பேசி: +8526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
FOR FURTHER
READING LIST
FROM
VIVASAYA PANCHANGAM
1. பழவேற்காடு பகுதியில் பாரம்பரிய
கூரைநீர் அறுவடை - TRADITIONAL ROOF WATER HARVESTING IN
PAZHAVERKADU – Date: 21.12.2019
2. பள்ளிக்கூடங்களில் மழைநீர்
சேகரிப்பு - RAINWATER
HARVESTING IN SCHOOLS - Date:
19.12.2019/
3. மழைநீர் சேகரிக்க சில வழிமுறைகள் - RAINWATER HARVESTING - TEN GUIDELINES – Date:19.12.2019 /
4. தண்ணீரினால் பரவும் நோய்கள் -
WATERBORNE DISEASES – Date of Posting: 19.12.2019/
5. மழைநீரை சுத்தம் செய்வது
எப்படி ? HOW TO CLEAN RAINWATER TO DRINK ? Date of Posting: 18.12.2019/
6. இன்று ஒரு குறுஞ்செய்தி -
கூரைநீர் அறுவடை - NEWS TODAY - ROOFWATER HARVESTING / Date of Posting: 13.08.2019/
7. சென்னையில் மழை அறுவடை
விழிப்புணர்வு - ROOFWATER
HARVESTING AWARENESS PROGRAMME IN CHENNAI - Date of Posting: 07.07.2019/
8. 38000 கோவில்களில் மழை
அறுவடை செய்ய அரசுக்கு கோரிக்கை ! 38000 TEMPLES NEED RAINWATER HARVEST / Date of Posting:
12.08.2017/
9. இஸ்ரேல் நாட்டின் மழை அறுவடை
வாத்தியார் - RAIN MAN OF ISRAEL/ Date of Posting: 07.07.2019/
10. உங்கள் வீட்டு கூரை
மூலம் 30000 லிட்டர் நீரை அறுவடை செய்யலாம் - ROOF WATER HARVEST YOU CAN DO IT / Date of Posting: 27.02.2020/
11. மழைநீரை சுத்தப்படுத்த
பிளீச்சிங் பவுடர் CLEAN RAINWATER BY BLEACHING POWDER / Date of Posting:
19.12.2019/
12. கூரை நீர் அறுவடை சில கேள்விகளும் பதில்களும் ROOFWATER HARVESTING
QUESTIONS & ANSWERS / Date of Posting:
19.12.2019/
No comments:
Post a Comment