Wednesday, August 16, 2017

மியாவாக்கி செயற்கை காடுகளின் தந்தை - MIYAWAKI FATHER OF 40 MILLION TREES

















                                             



மியாவாக்கி 
செயற்கை 
காடுகளின் 
தந்தை 

MIYAWAKI FATHER OF40 MILLION TREES


 உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில், பல நாடுகளில் அதிசயமான மரங்களை நட்டவர் மியோவாக்கி; இதுவரை 40 மில்லியன் மரங்களை,  கன்றுகளாக நட்டு காடுகளாக மாற்றியுள்ளார்;   இவற்றில் முக்கியமானது சீர்கேடடைந்த வனங்களை சீரமைத்ததுதான்; ஜப்பான், போர்னியோ, அட்டசோனியா, மற்றும் சீனாவில் மட்டும் 1400 இடங்களில் வனங்களை அமைத்துள்ளார்.


தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள உள்ளுர் தாவர வகைகளை ஆய்வு செய்யும் பணியை 1908 ஆம் ஆண்டுவாக்கில் எடுத்துக்கொண்டார்.

மியோவாக்கி மாடல் என்று சொல்லும்போது முக்கியமான மூன்று அம்சங்களை முன் வைக்கிறார்;    ஒன்று உள்ளுர் மர வகைகள்   (LOCAL TREE SPECIES);   இரண்டாவது அடர் நடவு முறை (HIGH DENSITY PLANTATION); அதாவது ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பில், 5 மரக்கன்றுகள் நடவு செய்வது;    மூன்றாவது முக்கியமாக, பிரச்சனை உள்ள இடங்களில் ஏற்ற மர வகைகளை தெரிந்தெடுப்;பது; உதாரணம் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடம், சீர்கேடடைந்த வனம், மற்றும் மேல்மண் இழந்த நிலப்பகுதிகள்.

1990 ஆண்டு வாக்கில் மிக மோசமாக சீர் கேடடைந்த காடுகளை, வெப்பமண்டலக் காடுகளை, சீரமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.

 2013 வாக்கில், இந்தியாவில் வடகிழக்கு பகுதியில், பாராபாணி தொழிற்சாலைப்பகுதியில், முதன்முதலாக, 'மியோவாக்கி மாடல்" ல்  அடர்வனம் ஒன்று உருவாக்கப் பட்டது.

      மியோவாக்கி மாடலில் முழுக்க முழுக்க ஒரு அடர் வனத்தை,  100 சதவீதம் மாற்றம் இல்லாமல் உருவாக்குவது எப்படி ..?

1. அடர்வனம் அமையும் பகுதியில் உள்ள உள்ளுர் மரவகைகள் என்னென்ன என்று ஆய்வு செய்வது.
2. மரவகைகளை தெரிந்தெடுத்தபின், உள்ளுர் மரவகைகளின், விதைகளைச்  சேகரம் செய்வது.
3. விரைந்து முளைப்பதற்கான விதைநேர்த்தி முறைகளை செய்வது.
4. மரங்கள் நடவு செய்வதற்கான நிலப்பரப்பினைத்  தயார் செய்வது.
5. மரக்கன்றுகளை நடவுசெய்வது.

மியாவாக்கி தனது மாடலை, தாய்லாந்து, பிரேசில், சைல் ஆகிய நாடுகளில் வெற்நிகரமாக நிரூபித்தார்.

1998 ல்  சீனப்பெருஞ்சுவரின்  ஊடாக 4 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கினார்;   அவை 2004 ஆம் ஆண்டு வாக்கில், 3 மீட்டர் உயரம் வளர்ந்து சாதனை நிகழ்த்தியது;   2006 ஆம் ஆண்டு இயற்கையை பாதுகாத்த சிறந்த மனிதர்  என்பதற்கான சர்வதேச விருதான  ' புளு பிளாண்ட் அவார்ட்"  வழங்கப்பட்டது .

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com    


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...