ஆபிரகாம்லிங்கனின்
நகைச்சுவை
ஒரு பெரிய அறிவாளி ஒரு கூட்டத்தில்
பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நாய் குறுக்காக நடந்து போனது
அங்கு கூட்டத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள்
இவர் பேசுவதை கவனிக்காமல் விட்டு விட்டு
நாயை கவனித்தார்கள்.
உடனே அவர் ஒரு கேள்வி கேட்டார். ஒரு
நாய்க்கு எத்தனை கால் ? என்று அவர் கேள்வியைக்
கேட்டு முடிப்பதற்குள் நான்கு என்று நிறைய
பேர் சொன்னார்கள்.
நான் இன்னும் என் கேள்வியை கேட்டு
முடிக்கவில்லை, ஒரு நாய்க்கு எத்தனை கால், ?
ஒரு வேளை நீங்கள் அதன் வாலையும் கால்
என்று கணக்கில் எடுத்துக் கொண்டால்,
நாய்க்கு எத்தனை கால் ?
ஒருத்தர் ஒன்று என்றார்.
எப்படி என்றார், வாலை கால் என்று
அழைத்தால், உண்மையான கால்களை கால்
என்று கொள்ள முடியாது என்றார்.
இன்னொருத்தர் ஐந்து என்றார். ஏற்கனவே இருக்கும்
கால்கள் நான்கு. வாலையும் காலாகக் கொண்டால்
மொத்தம் ஐந்தாகிறது என்று
விளக்கம் சொன்னார்.
அந்த அறிவாளி இரண்டும் தப்பு என்றார்.
ஒரு நாயின் வாலை கால் என்று சொன்னாலும்
தலை என்று சொன்னாலும், ஒரு நாய்க்கு நான்கு
கால்கள்தான் என்று முடித்தார்.
அந்த அறிவாளி வேறு யாரும் இல்லை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
No comments:
Post a Comment