தே. ஞானசூரிய பகவான்
இது காவேரியின் கிளையாறு. இது ஐந்து
ஆறுகளாகப் பிரிந்து திருச்சிராப்பள்ளி
மாவட்டத்திலிருந்து தஞ்சை மாட்டத்திற்குள்
நுழைகிறது.
குள்ளம்பாடி என்னும் இடத்தில் காவேரி
ஆற்றின்மீது லோயர் அணைக்கட்டு
கட்டப்பட்டுள்ளது. பின்னர் திருவையாறு
என்னுமிடத்தில் ஐந்து ஆறுகளாகப் பிரிகிறது.
அதில் ஒன்று தான் அரசலாறு. ஆக
திருவையாற்றிலிருந்து புறப்படும் அரசலாறு
கும்பகோணத்தின் வழியாகச் சென்று
காரைக்காலில் கடலில் சங்கமமாகிறது.
இந்த ஆற்றின் பெயரால் ஒரு ஊரே
இருந்தது: இது 19 ஆம் நூற்றாண்டின்
தலைசிறந்த ஆற்றுத்துறைமுகம்:
செயற்கைப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி
இங்கு கொடிகட்டி பறந்தது.
துடுப்புகளுடன் கூடிய தோணிகளும்
பாய்மரப், படகுகளும் அரசலாற்றின்
அலைகளில் எப்போதும் அலைந்துக்
கொண்டிருந்தன.
சையாம் (இன்றைய தாய்லாந்து),
தென்கிழக்கு மற்றும், தூரக்கிழக்கு ஆசிய
நாடுகள்,(FAR EAST COUNTRIES )மத்திய கிழக்கு,
மற்றும் ஆப்பிரிக்க நாட்டு வணிகர்கள்
பூக்களை சுற்றிவரும் தேனீக்கள்போல
காரைக்காலின் அசலாற்றுத் துறைமுகத்தை
அயல்நாட்டு வணிகர்கள்
மொய்த்தவண்ணம் இருந்தனர்.
கப்பல்களை மரக்கலங்கள் என்றும்
அவற்றின் உரிமையாளர்கள்
மரைக்காயர் ஆயினர் .
பொன்னியின் செல்வன், தமிழின்
பிரபலமான சரித்திர எழுத்தாளர் ‘கல்கி’
அவர்கள் எழுதிய தமிழ் நாவலை
அறியாதவர்கள் இருக்க முடியாது .
இந்த நாவல் ராஜராஜ சோழனின
வீர வரலாறு பற்றி பேசும் தமிழ் இலக்கியம்.
இதில் அரசலாற்றின் அலைகள் அதன்
அருமை பெருமைகளைப் பேசும்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370,
மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment