Thursday, August 31, 2017

இணையில்லாத இருபத்தியிரண்டு இந்திய தீவன மரங்கள் - 22 FIRST- RATE FODDER TREES




இணையில்லாத 

இருபத்தியிரண்டு  

இந்திய தீவன மரங்கள்

22 

FIRST- RATE

FODDER 

TREES


மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குக் கூட நாம் வளர்க்கும் ஆடுமாடுகளுக்கு பசும்புல் கிடைப்பதில்லை.

மர இலைகளைப் போடுவதென்றால் ஆண்டு முழுவதும் ஆடுமாடுகளை வளர்க்க முடியும்.

மர இலைகளைப் போடும்போது கணிசமாகதீவனம் போடுவதைக் குறைத்துக் கொள்ளலாம்.

காட்டில் வளரும் ஆடு மாடுகள் கொழுகொழுவென இருப்பதற்குக் காரணம் புரதச்சத்து நிறைந்த மர இலைகள்தான்.

கிராமங்களில் உள்ள மேய்ச்சல் தரைகள் எல்லாம் பெரும்பாலும் கட்டாந்தரைகளாக உள்ளன. அங்கெல்லாம் கிராமத்திற்கு ஒரு தீவன மர வங்கி என உருவாக்கினால் நமது கால்நடைப் பொருட்களின் உற்பத்தியைக் கணிசமாகப் பெருக்கலாம்.

விதைத் தேவை மற்றும் மரக்கன்றுகள் தேவைக்கு அருகில் அமைந்துள்ள நாற்றங்கால்கள் அல்லது வனத்துறையின் விரிவாக்க மையங்களில் விசாரித்துப் பாருங்கள்.

உங்கள் கிராமத்திலும் ; இந்தப் பட்டியலில் உள்ள மரங்களில் ஒரு  ஐந்து மரங்களாவது இருக்கும். அவற்றிலிருந்து விதைகளை சேகரித்து விதைக்கலாம். விதைப் பந்து தயாரித்தும் விதைக்கலாம்.


1. வட்டப்பொலவு  Common Name: Karniker Tree – Pterospermum acerifolium, Family:    Sterculiacea


2. வக்கனி Common Name: Mountain Persimon – Diospyros montana, Family: Ebanaceae


3. நெல்லி  Common Name: goose Berry  Tree – Emblica officinalis, Family: Euphorbiaceae


4. நீர்கடம்பை Common Name: Kaim Tree – Mytragyna parviflora, Family: Rutaceae


5. நாவல் Common Name: Jamun  Tree – Syzygium cuminii, Family: Myrtaceae


6. நரிவேங்கை  Common Name: Sandan  Tree – Ougenia oojensis, Family: Rutaceae


7. குடசப்பாலை Common Name: Esater Tree – Hollahena dysentrica, Family: Apocyaceae


8. குமிழ் ; Common Name: Kumizh Tree – Gmelina arborea, Family: Verbinaceae


9. வெள்வேல் ; Common Name: White Babul  Tree – Accacia leucophloea, Family: Mimoceae


10. தோதகத்தி  Common Name: Rose wood  Tree – Dalbergia latifolia, Family: Fabaceae


11. சடச்சி  Common Name: Dhaman  Tree – Grewia tilifolia, Family: Tiliaceae


12. சாரப்பருப்பு   Common Name: Cuddapa almond  Tree – Buchanania lanzan, Family: Anacardiaceae


13. சுந்தரவேம்பு Common Name: Toon Tree – Toona ciliata, Family: Miliaceae


14. சோழவேங்கை Common Name: Bishop wood  Tree – Bichofia javanica , Family: Euphorbiaceae


15. தானிக்காய் ; Common Name: Belleric Myrobalan Tree – Terminalia billerica, Family: Combretaceae


16. கடற்கொஞ்சி  Common Name: Andaman satin wood – Murraya paniculata, Family: Rutaceae


17. கடுக்காய்  Common Name: Yellow myrobalan Tree – Terminalia chebula, Family: Combretaceae


18. கண்டல் ; Common Name: True mangrove Tree – Rhizophora mucranata, Family: Rhizophoraceae


19. கத்தக்காம்பு  Common Name: Cutch Tree – Accacia catechu, Family: Mimoceae


20. கமலா மரம் ; Common Name: Monkey face Tree – Mallotus Phllipensis, Family: Euphorbiaceae


21. குங்கிலிய மரம் ; Common Name: Sal  Tree – Shorea robusta, Family: Dipterocarpaceae


22. தம்பகம்  - Common Name: Sal Tree – Shorea  tumbaggia, Family: Dipterocarpaceae


22. குட்டைக் குங்கிலியம்  - Common Name: Sal Tree – Shorea  roxburghii, Family: Dipterocarpaceae 


பூமி ஞானசூரியன்:; செல்பேசி: +918526195370







































No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...