Wednesday, August 16, 2017

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1100 மரங்கள் - மியாவாக்கி அடர்வனம் - 1100 TREES MIYAWAKI MODEL FOREST



திருப்பத்தூர் மாவட்டத்தில் 
1100 மரங்கள் -
மியாவாக்கி 
அடர்வனம்

(திருப்பத்தூர்  
மாவட்டம், தமிழ்நாடு)

1100 TREES 

MIYAWAKI

MODEL FOREST 



அன்பிற்குறிய சகோதரர்களே !   சகோதரிகளே !
தெக்குப்பட்டு அடர் வனம்

இப்போது உங்களுக்கு மியாவாக்கி முறையில், காடுவளர்ப்பது எப்படி என்று சொல்லப்போகிறேன்;  காடு வளர்ப்பது புரிகிறது; அது என்ன மியோவாக்கி ..?   மியோவாக்கி ஜப்பான் நாட்டு இயற்கை விஞ்ஞானி; உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் காடுகளை உருவாக்கியவர்; மரங்களை உருவாக்கியவர்; அவற்றை செயற்கை காடுகள் என்கிறார்கள்; ஆதாவது ஆங்கிலத்தில்  மேன் மேட் பாரஸ்ட் (MAN MADE FOREST)

நோபல் பரிசுக்கு சமமான, 'புளு பிளானட்  அவார்ட்" என்ற பரிசினைப் பெற்றவர்; இவரைப்பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்;  இப்போதைக்கு இதுபோதும் என்று நினைக்கிறேன்.

மியாவாக்கி சொல்லிக் கொடுத்த வழி இது;  நாங்களும் ஒரு சிறு மாதிரி அடர்வனத்தை உருவாக்கியுள்ளோம்; அதன் பரப்பளவு 220 சதுர மீட்டர்;  அதில் நடவுசெய்துள்ள மொத்த மரங்கள் 1100. 

அதிலுள்ள மர வகைகள் 100;  இந்த மியேவாக்கி முறையின் சிறப்பே  இதுதான்; குறைவான நிலப்பரப்பே போதுமானது ;அதிகமான எண்ணிக்கையில் மரங்கள் நடலாம்; அதிகமான மர வகைகளையும் இதில் நட முடியும்; ஒரு சதுர மீட்டரில் 5 மரங்கள் தோராயமாக  ஒரு மீட்டர் நீள, அகலமுள்ள நிலப்பரப்பில், 5 மரங்களை நடவு செய்யலாம்.

இப்போது எங்கள் அடர் சிறு வனத்தில், 1100 மரங்கள் உள்ளன.  100 வேறு வேறு வகையான மரங்கள்; இயற்கையான ஒரு காட்டிற்கு போனால்கூட, ஒரே இடத்தில் 100வகையான மரங்களை பார்த்தல் இயலாது. 

இன்னொன்று உலகத்திலுள்ள இயற்கையான எந்த வனத்திலும், ஒரு ஹெக்டேர் நிலபரப்பில்  1,000 மரங்கள் என்பதுதான் சராசரி மர எண்ணிக்கை;  ஆனால் இந்த அடர் நடவு முறையில், 50,000 மரங்களை உருவாக்க முடியும்.  

ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பு என்பது 10000 சதுர மீட்டர்; ஒரு சதுர மீட்டருக்கு 5 மரக்கன்றுகள்;  அப்படியானால்;  10,000 சதுர மீட்டருக்கு  50,000  மரக்கன்றுகள்;.
மியாவாக்கி அவர்களுக்கு  வயது  85 க்கும் மேல்;  பல நாடுகளில், பல ஆண்டுகளாக, 3000 க்கும் மேற்பட்ட செயற்கை வனங்களில் 40 மில்லியன் மரங்களை  வளர்த்து, வெற்றியும் பெற்றுள்ளார்.

ஆகையால், நாங்கள், நம்பிக்கையோடு, 2016 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 24 ம் தேதி, இந்தப் பணியைத் தொடங்கினோம்; ஆனால் 100 மர வகைகளை தெரிந்தெடுத்து, நட்டு முடிக்க, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டது.

 பூமியின் அடர் வனத்திற்கு இன்னும் ஒரு வயது முடியவில்லை;  ஆனால் மலைவேம்பு, மந்தாரை, நீர்மத்தி, தேக்கு, பூவரசு, பெருங்கொன்றை, பொன்னாவரை, போன்றவை, 10 முதல் 15 அடிவரை வளர்ந்துள்ளன.  

நொச்சி, ஆடாதொடை, ஆச்சா, சீயக்காய், ருத்ராட்சை, வில்வம், கருமருது, மருதாணி, மூங்கில், போன்றவை 5 முதல் 10 அடி வரை வளர்ந்துள்ளன; செஞ்சந்தனம், சந்தனம் ,ரப்பர், தோதகத்தி, போன்றவை நன்கு வளர்கின்றன. 

இப்படி ஒரு அடர்வனம், என்னும் இந்த சிறு காட்டினை, ஏன் நாம் உருவாக்க வேண்டும் ..?  

இதுபோன்ற சிறு அடர் வனங்களை, யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம்; வெறும் 20 சதுர மீட்டர் நிலம்கூட போதுமானது; அதில் 100 மரங்கள நடலாம்;  இந்த 20 சதுர மீட்டரில் கூட 100 வகை மரங்களை நட முடியும்; நமது  தோட்டத்தில் ஒரு சதுர மீட்டர் நிலம் இருந்தால் போதும்; 5 மரங்கள் கொண்ட மிகச் சிறு வனத்தை, உருவாக்கலாம்;   மனம் இருந்தால் போதும், மரங்களை நடலாம்;   மரவனம் உருவாக்கலாம்.
        

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...