Thursday, August 31, 2017

இணையில்லாத இருபத்தியிரண்டு இந்திய தீவன மரங்கள் - 22 FIRST- RATE FODDER TREES




இணையில்லாத 

இருபத்தியிரண்டு  

இந்திய தீவன மரங்கள்

22 

FIRST- RATE

FODDER 

TREES


மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குக் கூட நாம் வளர்க்கும் ஆடுமாடுகளுக்கு பசும்புல் கிடைப்பதில்லை.

மர இலைகளைப் போடுவதென்றால் ஆண்டு முழுவதும் ஆடுமாடுகளை வளர்க்க முடியும்.

மர இலைகளைப் போடும்போது கணிசமாகதீவனம் போடுவதைக் குறைத்துக் கொள்ளலாம்.

காட்டில் வளரும் ஆடு மாடுகள் கொழுகொழுவென இருப்பதற்குக் காரணம் புரதச்சத்து நிறைந்த மர இலைகள்தான்.

கிராமங்களில் உள்ள மேய்ச்சல் தரைகள் எல்லாம் பெரும்பாலும் கட்டாந்தரைகளாக உள்ளன. அங்கெல்லாம் கிராமத்திற்கு ஒரு தீவன மர வங்கி என உருவாக்கினால் நமது கால்நடைப் பொருட்களின் உற்பத்தியைக் கணிசமாகப் பெருக்கலாம்.

விதைத் தேவை மற்றும் மரக்கன்றுகள் தேவைக்கு அருகில் அமைந்துள்ள நாற்றங்கால்கள் அல்லது வனத்துறையின் விரிவாக்க மையங்களில் விசாரித்துப் பாருங்கள்.

உங்கள் கிராமத்திலும் ; இந்தப் பட்டியலில் உள்ள மரங்களில் ஒரு  ஐந்து மரங்களாவது இருக்கும். அவற்றிலிருந்து விதைகளை சேகரித்து விதைக்கலாம். விதைப் பந்து தயாரித்தும் விதைக்கலாம்.


1. வட்டப்பொலவு  Common Name: Karniker Tree – Pterospermum acerifolium, Family:    Sterculiacea


2. வக்கனி Common Name: Mountain Persimon – Diospyros montana, Family: Ebanaceae


3. நெல்லி  Common Name: goose Berry  Tree – Emblica officinalis, Family: Euphorbiaceae


4. நீர்கடம்பை Common Name: Kaim Tree – Mytragyna parviflora, Family: Rutaceae


5. நாவல் Common Name: Jamun  Tree – Syzygium cuminii, Family: Myrtaceae


6. நரிவேங்கை  Common Name: Sandan  Tree – Ougenia oojensis, Family: Rutaceae


7. குடசப்பாலை Common Name: Esater Tree – Hollahena dysentrica, Family: Apocyaceae


8. குமிழ் ; Common Name: Kumizh Tree – Gmelina arborea, Family: Verbinaceae


9. வெள்வேல் ; Common Name: White Babul  Tree – Accacia leucophloea, Family: Mimoceae


10. தோதகத்தி  Common Name: Rose wood  Tree – Dalbergia latifolia, Family: Fabaceae


11. சடச்சி  Common Name: Dhaman  Tree – Grewia tilifolia, Family: Tiliaceae


12. சாரப்பருப்பு   Common Name: Cuddapa almond  Tree – Buchanania lanzan, Family: Anacardiaceae


13. சுந்தரவேம்பு Common Name: Toon Tree – Toona ciliata, Family: Miliaceae


14. சோழவேங்கை Common Name: Bishop wood  Tree – Bichofia javanica , Family: Euphorbiaceae


15. தானிக்காய் ; Common Name: Belleric Myrobalan Tree – Terminalia billerica, Family: Combretaceae


16. கடற்கொஞ்சி  Common Name: Andaman satin wood – Murraya paniculata, Family: Rutaceae


17. கடுக்காய்  Common Name: Yellow myrobalan Tree – Terminalia chebula, Family: Combretaceae


18. கண்டல் ; Common Name: True mangrove Tree – Rhizophora mucranata, Family: Rhizophoraceae


19. கத்தக்காம்பு  Common Name: Cutch Tree – Accacia catechu, Family: Mimoceae


20. கமலா மரம் ; Common Name: Monkey face Tree – Mallotus Phllipensis, Family: Euphorbiaceae


21. குங்கிலிய மரம் ; Common Name: Sal  Tree – Shorea robusta, Family: Dipterocarpaceae


22. தம்பகம்  - Common Name: Sal Tree – Shorea  tumbaggia, Family: Dipterocarpaceae


22. குட்டைக் குங்கிலியம்  - Common Name: Sal Tree – Shorea  roxburghii, Family: Dipterocarpaceae 


பூமி ஞானசூரியன்:; செல்பேசி: +918526195370


Saturday, August 26, 2017

பயன்மிகு பதின்மூன்று மூலிகை மரங்கள் - MOST USEFUL MIRACULOUS MEDICINAL TREES


பயன்மிகு 

பதின்மூன்று 

மூலிகை மரங்கள்

MOST USEFUL
MIRACULOUS 
MEDICINAL TREES

வெப்பாலை


மருத்துவ குணங்கள் இல்லாத மரங்கள் எதுவும் இல்லை; எல்லா மரங்களிலும் எதாவது ஒரு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்கிறது; அதிக மருத்துவ குணங்கள்  கொண்ட மரங்களை இந்த பட்டியலில் தந்துள்ளேன்.



1.வேம்பு - Neem - Azadirachta indica - Family: Meliaceae 


2. கல்யாண முருங்கை - Indian Coral Tree - Erithrina Indica - Family: Fabaceae 


3. மலைவேம்பு - Malai Vembu Tree - Melia azadirach - Family: Meliaceae 


4.மாவிலங்கு ( அடிச்சரணம் ) - Sacred Barna - Crataeva religiosa - Family: Capparidaceae


5. முருங்கை - Drumstick - Moringa oleifera, Family:Moringaceae 


6.மூங்கில் - Bamboo - Bamboosa aundinaceae - Family: Acanthaceae

 7. கடுக்காய் - Chebulic Myrobalan Tree - Terminalia chebula - Family: Comberataceae


8. வெப்பாலை - Paalai Tree - Wrightia tinctoria - Family: Apocyanaceae


9. வெள்ளை குங்கிலியம் - Jalari Tree - Shorea robusta - Dipterocarpaceae


10. வேங்கை - Indian Kino Tree - Pterocarpum marsupium -


8. வெப்பாலை - Paalai Tree - Wrightia tinctoria - Family: Apocyanaceae 

9. வெள்ளை குங்கிலியம் - Jalari Tree - Shorea robusta - Dipterocarpaceae 

10. வேங்கை - Indian Kino Tree - Pterocarpum marsupium -

11.தம்பகம் - Shorea Tree - Shorea tumbaggaia - Dipterocarpaceae

12. ஆல்பீசியா மரம்- Albizia Tree - Albiziathompsonii - Leguminaceae

13. நாவல் - நாவல் - Jambolan Tree - Syzigium cumini, Family - Myrtaceae


அடர் நடவு முறையில் (மியாவாக்கி) ஒரு மூலிகை மரங்கள் கொண்ட சிறுவனம் அமைக்கலாம்; ஒரு சதுர மீட்டரில் 5 மரங்கள் நடலாம்; 100 மரங்கள் நட 20 சதுர மீட்டர் இடம் கூட போதுமானது.


வீட்டின் பின்புறம், அலுவலகங்களில்பள்ளிகளில், கல்லூரிகளில்பாக்டரிகளில், தொழிலகங்களில் எல்லா இடங்களிலும் சிறு வனம் அமைக்கலாம்.


தொடர்புக்கு :பூமி ஞானசூரியன், செல்பேசி: 8526195370
மின்னஞ்சல்: gsbahavan@gmail.com.

பத்தொன்பது புனிதமான இந்திய கோவில் மரங்கள் - MOST DIVINE-FULL NINETEEN TEMPLE TREES



                                                         
பத்தொன்பது
புனிதமான
இந்திய  கோவில்
மரங்கள்

MOST DIVINE-FULL
NINETEEN
TEMPLE TREES

புன்னை மரப் பூ



















1. இலந்தை - ZIZUPUS TREE - Zizipus jujuba - Family: Rhamnaceae

2. இலுப்பை - MAHUA TREE

3. பன்னீர் மரம் - INDIAN CORK TREE

4. சரக்கொன்றை - GOLDEN SHOWER TREE

5. புன்னை - CALOPHYLLUM TREE

6. கடம்பமரம் - KADAMBA TREE

7. அத்தி மரம் - FIG TREE

8. மகிழ மரம் - BULLET WOOD TREE

9. மாமரம் - MANGO TREE

10. பலா மரம் - JACK TREE

11. பராய் மரம் - PARAI TREE

12. வன்னி மரம் - KEJORI TREE

13. வேம்பு - NEEM TREE

14. வில்வம் - VILVAM TREE

15. பாதிரி மரம் - FRAGRANT PADRI TREE

16. குரா மரம் - KURA TREE

17. நெல்லி மரம் - GOOSE BERRY

18. கல் அத்தி மரம்-

19.ஊமத்தை - DATURA SHRUB

இந்த மரவகைகளைக் கொண்ட கோவில் காடுகளை உருவாக்கலாம்;  20 சதுர மீட்டர் இடம் இருந்தால் 100 மரங்கள் கொண்ட ஒரு சிறு காட்டினை உருவாக்கலாம்;  அதில் வகைக்கு 10 என 10 வகையான மரங்களை நடலாம். 

உள்ளுரில் இருக்கும் நாட்டு மரங்களின் விதைகளைச் சேகரியுங்கள். நாட்டு மர விதைகளைக் கொண்டு விதைப் பந்து தயாரித்து விதையுங்கள்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: 8526195370

அழகான 18 இந்திய பூ மரங்கள் - DAZZLING EIGHTEEN FLOWERING TREES



அழகான 18 
இந்திய
பூ மரங்கள்

DAZZLING
EIGHTEEN
FLOWERING
TREES

வேங்கை மரப்பூக்கள்

























1. சரக்கொன்றை – SARAKONRAI

2. பொரசு – BRAMMA VRUKSHAM

3. ஆத்தி – CAMEL FOOT TREE

4. பூமருது – PRIDE OF INDIA

5. செவ்விலவு – RED COTTON TREE

6. மஞ்சள் இலவு – YELLOW COTTON TREE

7. அசோகமரம் - TREE OF ASHOKA

8. மரமல்லி – INDIAN CORK TREE

9. பவளமல்லி – PARADISE TREE

10. செண்பகம் - CHAMPAK TREE

11. வேங்கை மரம் - INDIAN KINO TREE

12. கல்யாணமுருங்கை – INDIAN CORK TREE

13. பூவரசு மரம் -INDIAN TULIP TREE

14. மகிழ மரம் - BULLET TREE

15. பாதிரி மரம் - FRAGRANT PADRI TREE

16. புன்னை – CALOPHYLLUM TREE

17. மாவிலங்கு – SACRED BARNA TREE

18.  நரிவேங்கை – SANDAN TREE

இந்த மரவகைகளைக் கொண்ட பூந் தோட்டங்களை உருவாக்கலாம்;. 20 சதுர மீட்டர் இடம் இருந்தால் 100 மரங்கள் கொண்ட ஒரு சிறு பூங்காவினை உருவாக்கலாம். அதில் வகைக்கு 10 என 10 வகையான மரங்களை நடலாம்.

உள்ளுரில் இருக்கும் நாட்டு மரங்களின் விதைகளைச் சேகரியுங்கள். நாட்டு மர விதைகளைக் கொண்டு விதைப் பந்து தயாரித்து விதையுங்கள். கன்றுகள் தயாரித்தும் நடலாம்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: 8526195370

Monday, August 21, 2017

ROOFWATER HARVESTING QUESTIONS & ANSWERS கூரை நீர் அறுவடை சில கேள்விகளும் பதில்களும்



RAIN  HARVESTING POTS OF PAZHAVERKADU



கூரை நீர் 
அறுவடை
சில கேள்விகளும் 
பதில்களும் 


ROOFWATER 

HARVESTING

QUESTIONS  &

ANSWERS



(கேள்வி பதில்)
தே.ஞான சூரிய பகவான் B.Sc(Ag), M.A (jmc)

1. மழைக் காலத்தில் முதன்முதலாக
பெய்யும் நீரை சேகரிக்கக் கூடாது
என்கிறார்களே, அது ஏன் ..? 


மழை பெய்ய ஆரம்பித்ததும்,
முதல் 10 அல்லது 20 நிமிடங்களுக்கு
சேமிக்காமல் விட்டுவிடலாம்;
இதனால் கூரையில் ஏதாவது
அசுத்தம் சேர்ந்திருந்தால்,
அது தானாகக் கழுவிக்கொண்டு
போய்விடும் அல்லவா ..?

2. கூரைநீர் அறுவடை எந்தெந்த
பகுதிகளில் எல்லாம்
கடைபிடிக்கலாம் ..?   


உலகின் அதிக மழை பெறும் பெருமை
உடைய சிரபுஞ்சியில் கூட
மக்கள் கோடைக் காலத்தில்
ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய்
விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
இப்போது நீங்களே சொல்லுங்கள்,
‘கூரைநீர் அறுவடை எந்தெந்த
பகுதிகளில் எல்லாம் கடைபிடிக்கலாம் ..?’

3. மழை அறுவடையில் எத்தனை
முறைகள் உள்ளன...?  

இன்று இயற்கையான நீர் ஆதாரங்களில்,
செயற்கையான தொட்டிகளில்,
நிலத்தடியில் உள்ள மண் கண்டத்தில்,
வீடுகள் அல்லது இதர கட்டிடங்களின்
கூரைகளின் மூலம்,  என நான்கு
முறைகளில் மழை அறுவடை செய்யலாம்.

4. பயன்படும் வகையில் மழைநீர்
அறுவடையை எத்தனை
வகைகளில் பிரிக்கலாம் ..?  


இரண்டு வகைகளில்.   ஒன்று உடனடியான
உபயோகத்திற்கு, இரண்டு,
நிலத்தடியில் சேகரித்து
எதிர்காலத்தில் பயன்படுத்து வதற்கு.

5. கூரை நீரை அறுவடை செய்வதால்
கிடைக்கும் பயன்கள் யாவை ..?  


பணம் மிச்சம்; மின்சாரம் மிச்சம்.
பெண்களின் பெண் குழந்தைகளின் உழைப்பு மிச்சம்.
படும் மன உளைச்சல் மிச்சம்.
தண்ணீரினால் பரவும் நோய்களுக்காக
செய்யும் செலவு மிச்சம்.
நமக்குத் தெரியாமல் அதிகப் படியாய்
கலந்திருக்கும் குளோரின், புளோரின்,
இதர கனரக உலோகங்களினால் ஏற்படும்
உடல் உபாதைகளைத் தீர்க்க
செய்யும் செலவு மிச்சம்.

6. எங்கெல்லாம் கூரை நீரை
அறுவடை செய்யலாம் ?


குன்றிருக்கும் இடங்களில் எல்லாம்
குமரன் இருப்பான். அது போல கூரை
 இருக்கும் இடமெல்லாம் மழை நீரை
அறுவடை செய்யலாம்.
இது தனியார் வீடுகள், அரசு மற்றும்
தனியார் அலுவலகக் கட்டிடங்கள்,
தொழிற் கூடங்கள, பள்ளிக் கூடங்கள,
 கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் -
இப்படி எல்லா கட்டிடக் கூரைகளிலும்
மழை அறுவடை செய்யலாம். அவர்கள்
தண்ணீருக்காக செய்யும் செலவு மிச்சம்.
 குறிப்பாக அங்கிருக்கும் கழிவறைகளை
 சுத்தமாக பராமரிக்க முடியும்.
பொது மக்கள் வந்து செல்லும்
அலுவலகங்களில் (மாவட்ட
ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் உட்பட)
 உள்ள கழிப்பறைகளில் உள்ளே
நுழைய முடிவதில்லை.
இதற்கெல்லாம் தீர்வு மழைநீர்
அறுவடை ஒன்றுதான்.

7.அறுவடை செய்யும்
மழை நீரின் கார அமிலத்தன்மை
எப்படி இருக்கும்  ..?  

அறுவடை செய்த நீர்  காரத்தன்மை
இல்லாமல், (ZERO HARDNES)
நடுநிலையான கார அமிலத் தன்மையுடன்
(NATURAL PH) இருக்கும். இதனை வீடுகளில்,
தொழிற்சாலைகளில்,
இதர நிறுவனங்களில்
அப்படியே பயன்படுத்தலாம்.
சில இடங்களில் லேசான
அமிலத் தன்மையுடன் இருக்கும்.

8. கூரைநீர் அறுவடையை
நகர்ப்புறத்தில் செய்வதால்
என்ன மாற்றம் நிகழும் ..?   


வெள்ள அபாயம் குறையும்.
குடிநீர் பிரச்சனை தீரும். குடிநீருக்காக
செய்யும் செலவு மிச்சப்படும்;
நீர் எடுப்பது, விநியோகம் செய்வது,
ஆகியவற்றிற்கு செலவு செய்யும்
மின்சாரம்  மற்றும் எரிபொருள்
மிச்சமாகும்.  பெண்களுக்கும்,
பெண் குழந்தைகளுக்கும் வேலைப் பளு
மிச்சமாகும். பொது மக்கள் அதிகம் வந்து
 செல்லும் அலுவலகங்களில் உள்ள
கழிப்பறைகளில் தைரியமாக உள்ளே
நுழைய லாம். ஊராட்சி, நகராட்சி,
மற்றும் மாநகராட்சிகளின் குழாய்
நீருக்காக நீண்ட வரிசைகளில்
தாய்மார்கள் குடங்களுடன்
காத்திருக்க வேண்டாம்.
குற்ற உணர்ச்சி இல்லாமல்
 செடிகளுக்கு நீர் ஊற்றலாம்;
சைக்கிள் கழுவலாம்; டுவீலர்
கழுவலாம்;மற்றும் கார் கழுவலாம்.

9.வெளி நாடுகளில் மழை நீரை
அறுவடை செய்து
பயன்படுத்துகிறார்களா ?


சீனா, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய
 நாடுகளில் மழை நீரை சேமித்து குடிக்க,
குளிக்க, துவைக்க, சமைக்க,
கழுவ, செடி வளர்க்க என்று
பயன்படுத்துகிறார்கள்.

10. இஸ்ரேலில் அதிகம்
மழை நீரை அறுவடை செய்து
பயன்படுத்துவதாகச் சொல்லுகிறார்களே ?


ஆமாம், இஸ்ரேல் நாட்டினர்
பயன்படுத்தும் மொத்த நீரில் 10 முதல்
12 சதவிகித நீர் மழை நீரை
அறுவடை செய்தது.
உலகிலேயே மழை நீரை சேமித்து
பயன்படுத்துவதில் முதல் நிலையில்
இருப்பவர்கள் தாய்லாந்து நாட்டினர்.
இவர்கள் 40 சதவிகிதம் பேர் மழை நீரை
பயன்படுத்துகிறார்கள்.

FOR FURTHER READING LIST
FROM VIVASAYA PANCHANGAM


1. பழவேற்காடு பகுதியில் பாரம்பரிய கூரைநீர் அறுவடை  -  TRADITIONAL ROOF WATER HARVESTING IN PAZHAVERKADU – Date: 21.12.2019 

2. பள்ளிக்கூடங்களில்   மழைநீர் சேகரிப்பு - RAINWATER HARVESTING IN SCHOOLS  - Date: 19.12.2019/ 

3. மழைநீர்   சேகரிக்க  சில வழிமுறைகள்    - RAINWATER   HARVESTING  - TEN GUIDELINES – Date:19.12.2019 / 

4. தண்ணீரினால்  பரவும்  நோய்கள் -  WATERBORNE  DISEASES – Date of Posting: 19.12.2019/

5. மழைநீரை சுத்தம் செய்வது      எப்படி ?    HOW TO CLEAN  RAINWATER TO DRINK ? Date of Posting: 18.12.2019/ 

6. இன்று ஒரு  குறுஞ்செய்தி - கூரைநீர்  அறுவடை - NEWS TODAY - ROOFWATER  HARVESTING / Date of Posting: 13.08.2019/ 

7. சென்னையில் மழை அறுவடை  விழிப்புணர்வு - ROOFWATER HARVESTING AWARENESS PROGRAMME IN CHENNAI - Date of Posting: 07.07.2019/ 

8. மழைநீரை  சேகரித்து      சுத்தம் செய்து      குடிக்கலாம்  -   RAINWATER HARVEST CLEAN DRINK/ Date of Posting: 20.08.2017/ 
9. 38000 கோவில்களில்   மழை அறுவடை செய்ய   அரசுக்கு கோரிக்கை !    38000 TEMPLES  NEED    RAINWATER HARVEST / Date of Posting: 12.08.2017/ 

10. இஸ்ரேல்  நாட்டின்  மழை அறுவடை   வாத்தியார்  -   RAIN MAN OF ISRAEL/ Date of Posting: 07.07.2019/ 

11. உங்கள் வீட்டு  கூரை மூலம்  30000 லிட்டர் நீரை அறுவடை செய்யலாம்  - ROOF WATER HARVEST  YOU  CAN DO IT / Date of Posting: 27.02.2020/ 

12. மழைநீரை  சுத்தப்படுத்த பிளீச்சிங் பவுடர்  CLEAN RAINWATER  BY BLEACHING POWDER / Date of Posting: 19.12.2019/

9999999999999999999999999999999

ஒரு தேன்கூடு ஐம்பதாயிரம் தேனீக்களின் மாளிகை A HONEY COMB IS THE APARTMENT OF 50000 BEES


ஒரு தேன்கூடு

      ஐம்பதாயிரம் 

தேனீக்களின்

மாளிகை


A  HONEY COMB  IS THE
APARTMENT OF
50000 BEES


எங்கள் தோட்டம் சிறியதுதான். ஓண்ணரை ஏக்கருக்கும் கொஞ்சம் குறைவு. மா, சப்போட்டா, ஜம்புநாவல், ஆரஞ்சு என கிட்டத்தட்ட 150 பழமரங்கள், அது போக இதர ஜாதி காட்டு மரங்கள் என மினி தோப்பாக இருக்கும். அதில் கட்டிய தேன்கூடுதான் இது. ஈக்களோடு அதை பார்த்தபோது அது எங்கள் தோட்டத்திற்கு இயற்கை தந்த அங்கீகாரம் என்று நினைத்தேன். பெருமையாக இருந்தது.

மலைத்தேனீக்கள் கூடுகட்டும் பெருமைக்கு உரியது எங்கள் தோட்டம்.
“இப்போ அழிச்சா கூட ரெண்டு மூணுகிலோ தேன் எடுக்கலாம் சார் ” என்றார் குமார்; அதை முதன்முதலில் பார்த்தபோது.“இது மலைத்தேனி.  சாதா தேனி மாதிரி அழிச்சுட முடியாது” என்றார்; வெங்கடேசன். கடைசியாக “நீங்க சரின்னு சொல்லுங்க தேன்அழிக்க எங்க ஊர்ல ஆட்கள் இருக்காங்க” என்றார் கவுரி.

குமார், வெங்கடேசன், கவுரி  மூவரும் எங்களுடன் வேலை பார்ப்பவர்கள்.
 “முகம் தலை உடம்பு எல்லாம் துணிசுற்றிக்கொண்டு கையில் பந்தத்துடன் போனால் எப்படிப்பட்ட தேனீக்களும் பறந்துடும்;” இது என் தம்பி.
“அவ்ளோ சுலபமா பறந்துடாது. துரத்தி துரத்தி கொட்டும். மலைத்தேனிக்கு விஷம் ஜாஸ்தி. கொட்டினா பிழைக்கறது கஷ்டம். இந்த கூட்டை கலைக்க வேண்டாம்” இப்படி தீர்மானமாய் முடிவெடுத்தாள் என் மனைவி. வழக்கம்போல “ஆமென்” என்று சொல்ல தேன்கூடு தப்பியது. நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். 

நாங்கள் எல்லோருமே மரியாதைக்குரிய தொலைவில் பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தோம்.

ரொம்ப வருசத்துக்கு முன்னாடி என் நண்பர் ஒருத்தர் மலைத்தேனி கொட்டி ஒரு மாசம் மூச்சுப்பேச்சு இல்லாம ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்தார். உயிர் பிழைச்சி வர்றதுக்குள்ள ரெண்டு பெரிய நோட்டு செலவாச்சி.

கொடைக்கானல் போகும் சாலையில் மலைப்பகுதியில் பைக்கில் செல்லும்போது இது நடந்தது. லட்சக்கணக்கான ஈக்கள் ஒரே சமயத்தில் அவரைக்கொட்டி சாய்த்தது. ரோடு வேலை செய்த ஜனங்கள் பந்தத்தைக் கொளுத்தி தேனீக்களை விரட்டினார்கள். இல்லையென்றால் அவர் அங்கேயே பிணமாகி இருப்பார்.

இந்த சம்பவம் வருமாறு குறுநாவல் ஒன்று எழுதினேன். அந்த ஆண்டின் சிறந்த குறுநாவல் என்று பரிசு தந்து பாராட்டியது கணையாழி பத்திரிக்கை. அதற்கும்  முன்னதாகவே எனக்கு தேனீக்கள் மீது ரொம்ப மரியாதை. காரணம் உலகமே தேனீக்களை உழைப்பின் அடையாளமாக பகர்கிறது.

எங்கள் தோட்டத்தில் ஒரு ஜம்புநாவல் மரத்தில் கட்டி இருந்தது அந்த மெகா சைஸ் தேன்கூடு. வெறும் அய்ந்தடி உசரத்தில் தாழ்வான கிளைகளை இணைத்து கட்டி இருந்தது. ரொம்பப் பக்கத்தில் இருந்து பார்த்தால்கூட தெரியவில்லை. மண்டி இருந்த இலைகளும் கிளைகளும் அதை மறைத்திருந்தது.

ஓங்கி உயர்ந்த மரங்களில்தான் நான் தேன்கூடுகளைப் பார்த்திருக்கிறேன்.
குறுநாவல் எழுதும்போது தேனீக்கள் பற்றி திரட்டிய தகவல்கள் என் நினைவுக்கு வந்தது. அவற்றை எல்லாம் உதறி எடுத்து சுத்தப்படுத்தினேன்.
அவற்றை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி.

சிட்டுக்களின் கூட்டினைப்போல தேன்கூடும் என்னை எப்போதும் சுண்டி இழுக்கும். அருங்கோண வீடுகளைக்கொண்ட தேன்கூடு குருவிக்கூட்டைவிட ஹைடெக். ஆனால் குருவிக்கூடு குடிசைவீடு மாதிரி. தேன்கூடு அப்பார்ட்மெண்ட் வீடு. 

சுமாராக 50000 தேனீக்கள் குடியிருக்கும் தொகுப்புவீடுதான் ஒரு தேன்கூடு. வீடுகட்ட நாம் பயன்படுத்துவது சிமெண்ட். தேனீக்கள் உபயோகப்படுத்துவது ஒருவகை மெழுகு. வேலைக்கார தேனீக்கள் இந்த மெழுகை தன் வயிற்றிலிருந்து சுரக்கின்றன. இந்த மெழுகில்தான் இவை தங்களின் அழகான அறுங்கோண வீடுகளைக் கட்டுகின்றன.

நம்மைப்போலவே தேனீக்களும் பேஸ்மண்ட் போட்டு வீடு கட்டுகின்றன. இதற்கு விசேஷமான ஒரு பொருளை பயன்படுத்துகின்றன. அதன் பெயர் புரோபோலிஸ். இந்த புரபோலிஸ் பேஸ் போட்டு அதன் மீதுதான் தேனீக்கள் தன் வீடுகளை கட்டுகின்றன. தேனி வீடுகளை ஈரமும் பாக்டீரியாக்களும் தாக்காமல் தாங்கிப் பிடிக்கின்றன இந்த புரோபோலிஸ்.

இப்போதெல்லாம் ஒரே வீட்டிற்கு இரண்டு வாசல் வைத்துக்கட்டுவது வாடிக்கை. ஆம்பதாயிரம் வீடுகளைக் கொண்ட தேன்கூட்டிற்கு ஒரே ஒரு வாசல்தான். நம்பமுடியவில்லையா ? நம்பித்தான் ஆகவேண்டும். அம்பதாயிரம் ஈக்களும்  அந்த ஒரு வாசலில்தான் வந்துபோக வேண்டும்.
தனது எடையைப்போல 30 மடங்கு எடையை ஒரு தேன்கூடு தாங்கும்.

தேன்கூட்டில்  தேனீக்கள் என்னென்ன வைத்திருக்கும். அதுல தேன்குடங்கள் இருக்கும். அதில் தேன் இருக்கும். தண்ணீர் குடங்கள் இருக்கும். அதில் தண்ணீர் இருக்கும். அடுத்து மகரந்தப்பெட்டிகள் இருக்கும். அதில் மகரந்தத்தூள் அடைத்து வைத்திருக்கும்.  

அடுத்து முட்டைகள் வார்ட் ஒண்ணு. இளம்புழுக்களுக்கான வார்ட்  இன்னொண்ணு.  அடுத்து வேலைக்கார தேனீக்களின் குவாட்டர்ஸ்; அடுத்து ராணித் தேனியின் அந்தப்புறம்.

ஒரு கூட்டின் மேற்புறம் தேன் இருக்கும். அடிப்பக்கம் ராணி வசிக்கும்.
“வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்ன்னு சொல்லுவாங்க. தேனீக்களுக்கும் தேன்கூடு காஸ்ட்லி சமாச்சாரம். ஒரு அவுன்ஸ் மெழுகு தயாரிக்க எட்டு அவுன்ஸ் தேன்  செலவாகும். இரண்டு முதல் மூன்று வார வயது தேனீக்கள்தான் தரமான மெழுகினை சுரக்கும். வயசாளி தேனீக்கள் சுரக்கும் மெழுகு தரமானதாக இருக்காது.

சுமார் மூன்றுமாத காலம் எங்கள் தோட்டத்தில் இருந்தது அந்த ராட்சச தேன்கூடு. அதற்குப்பிறகு எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த தண்ணீர் குழாயில் சொட்டும் தண்ணீர்  குடித்துவிட்டு போகும். தேனடையில் தண்ணீரைக் கூட சேமிக்கின்றன என்று தெரிந்ததும்  அவை அதை எடுத்துக்கொண்டும் போகும் என தெரிந்தது. 

தேன்கூட்டிலிருந்து இரண்டு மீட்டர் தொலைவில் இருக்கிறது ஒரு சிறிய தண்ணீர் தொட்டி. ஒரு பிளாஸ்டிக் தட்டில் தண்ணீர் பிடித்து கொஞ்சம் கூட்டுக்குப் பக்கத்தில் வைத்தோம். அவை தட்டில்வைத்த தண்ணீரை சட்டை செய்யவில்லை. குழாய் தண்ணீரை குடிக்கவே படையெடுத்து வந்தன எங்கள் வீட்டுக்கு.

மூன்று மாதம் போனது. இந்த வருஷம் ஜனவரியே மார்ச் மாதம் மாதிரி ஆனது.  வெயில் நெருப்பாய் கொளுத்தியது. மரங்கள்; இலைகளை
உதிர்த்தன. சிறுசெடிகளும் புற்களும் பொசுங்கிப்போக ஆரம்பித்தது.

“இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்கும் இந்த தேனீக்கள் இங்கு ?” என்று நினைத்துக் கொண்டே தோட்டத்துக்குப் போனேன். மருந்துக்குக்கூட ஒரு தேனி இல்லை. அந்தக் கூடு காலியாக இருந்தது.

(எங்கள் அபிராஜ் தோட்டத்தில் கட்டிய மலைத்தேனி கூடுதான் என் கையில் இருப்பது. எவ்வளவு பெரியது ?)

   பூமி ஞான சூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்:gsbahavan@gmail.com

HARVEST RAIN CLEAN AND DRINK மழைநீரை சேகரித்து சுத்தம் செய்து குடிக்கலாம் -



RAIN  HARVESTING POTS OF PAZHAVERKADU


  மழைநீரை சேகரித்து     சுத்தம் செய்து     குடிக்கலாம் 


RAINWATER - HARVEST - CLEAN - DRINK




எத்தiனை குடிநீர் திட்டங்கள் வந்தாலும், உடனடியாக நமது குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.  இதற்கு முக்கியமான காரணம், மழை பொய்த்துப் போனதுதான் என்பது எல்லோருக்கும் தெரியும். நாளை காலையே நதி நீர் இணைப்பையும் செய்ய முடியாது.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையில், ஆரம்பக்கட்டம்  பொய்த்துப் போனாலும், ஆகஸ்ட் மாதம் திருப்திகரமாக உள்ளது;   செப்டம்பர் மாதமும் அப்படியே இருக்கும் என்று நம்பலாம்; அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும் வடகிழக்கு பருவ மழையும், சாதகமாக இருக்கும் என நம்பலாம்.

மழை நீர் பற்றி பலரும் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை கீழே தொகுத்து அளித்துள்ளேன். 

கேள்வி 1. மழைநீரை குடிக்கலாமா.. ?  கூடாதா ..?  குடிக்கலாம். பயம் வேண்டாம். உலகம் முழுக்க பல நாடுகளில் மழை நீரைத்தான் குடிக்கிறார்கள். மழை நீருக்கு சமமான, சுத்தமான நீர் எதுவும் இல்லை. 

2. மழைநீர் சுத்தமானதா ..? 
மழைநீர் சுத்தமானதுதான்; சுத்தமாக சேமித்தால், சுத்தமான மழைநீர் கிடைக்கும். 

3. மழைநீர் குடிப்பதற்கு ஏற்ற தரமான குடிநீரா ..? 
குடிப்பதற்கு ஏற்ற தரமான குடிநீர் என்று பார்த்தால், கிணற்று நீர், குழாய் நீர், பாட்டில் தண்ணீர், இவை எல்லாவற்றையும் விட தரமானது மழைநீர்.

4. மழை நீரில் தாது உப்புக்கள் இல்லை என்று சொல்லுகிறார்களே, அதைக் குடிப்பதால் சத்துக் குறைபாடு ஏற்படாதா ?
நாம் சாப்பிடும் உணவுப்  பொருட்களிலிருந்து அவை கிடைக்கிறது அதனால், நாம் குடிக்கும் நீர் சுத்தமாக இருந்தால் போதும்.

5. தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா,  அல்லது நோய்க் கிருமிகளை அழிக்க என்ன செய்ய வேண்டும் ..?
பத்து காலன் தண்ணீருக்கு, ஒரு டீஸ்பூன் பிளீச்சிங்; பவுடர் கரைத்து விடுங்கள்; அதன்பின்னர் 30 நிமிடம் கழித்து அந்த தண்ணீரைப்  பயன்படுத்தலாம்.


6. பிளீச்சிங் பவுடர் என்பது  என்ன ரசாயனம் ..? 
சோடியம் ஹைப்போ குளோரைட்(SODIUM HYPO CHLORITE) என்பதுதான் அந்த ரசாயனம்.  தண்ணீரை சுத்தப்படுத்தும் சோடியம் ஹைப்போ குளோரைட்  5 முதல் 6 சதம்   திறன் கொண்டதாக இருக்கும். 

7. குடிநீரில்  அதிகபட்சமாக எவ்வளவு   குளோரின் இருக்கலாம் ..? 
அதிகபட்சமாக குளோரின் 4 பி பி எம் வரை இருக்கலாம்.  பி பி எம்;  என்றால் பார்ட்ஸ் பெர் மில்லியன் என்பர். (PPM - PARTS PER MILLION).அப்படி என்றால் பத்து லட்சத்தில் 4 பங்கு என்று  அர்த்தம்.

8. குடிநீரில் பிளீச்சிங்; பவுடர் கலந்த பிறகு, எவ்வளவு நேரம் கழித்து அதனைப் பயன்படுத்தலாம் ..?  
இதனைக் கலந்த பிறகு அரைமணி நேரம் கழித்து, குடிக்கவோ, சமைக்கவோ, பயன்படுத்தலாம். 

9. மழைநீரை சுத்தப்படுத்துவது ரொம்பவும் கடினமான வேலையா ..?  
சேமித்த மழைநீரை வடிகட்டி, கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது கடினமான காரியமா ..?  அதில் கிருமிகள் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டால், பிளீச்சிங்; பவுடர் கலக்க வேண்டும்;   கலந்த பிறகு 30 நிமிடம் கழித்துக்  குடிக்கலாம். மழை நீரை சேமித்து குடித்தால் மட்டுமே குடிநீர் பஞ்சத்துக்கு தீ;வு காண முடியும்.

10. சேமிக்கும்போதே சுத்தமான மழைநீரை சேகரிக்க முடியுமா ..? 
கண்டிப்பாக முடியும்; மழைநீர் சேகரிக்கும் கட்டிடக் கூரையிலிருந்து  சேமிக்கும் பாத்திரம் அல்லது தொட்டிக்கு எடுத்து செல்லும் குழாய், அடுத்;து சேமிக்கும் பாத்திரம், அல்லது தொட்டி,  இந்த மூன்றையும் சுத்தமாக வைத்துக் கொண்டால், சுத்தமான மழைநீரை சேமிக்கலாம். சேமித்துக் குடிக்கலாம், குளிக்கலாம், சமைக்கலாம், துவைக்கலாம்; கழிவறையை சுத்தம் செய்யலாம்; சைக்கிள், டுவீலர் கார் அத்தனையும் கழுவலாம்; தொட்டிச் செடிகளுக்கு உயிர் கொடுக்கலாம்; அத்தனைக்கும் மழை நீர் மட்டும்தான் கைகொடுக்கும்.

11.மழைக்காலத்தில் முதன்முதலாக பெய்யும் நீரை சேகரிக்கக் கூடாது என்கிறார்களே, அது ஏன் ..? 
மழை பெய்ய ஆரம்பித்ததும், முதல் 10 அல்லது 20 நிமிடங்களுக்கு சேமிக்காமல் விட்டுவிடலாம்;    இதனால் கூரையில் ஏதாவது அசுத்தம் சேர்ந்திருந்தால், அது தானாகக் கழுவிக்கொண்டு போய்விடும் அல்லவா ..?

12. கூரைநீர் அறுவடை எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கடைபிடிக்கலாம் ..?   உலகின் அதிக மழை பெறும் பெருமை உடைய சிரபுஞ்சியில் கூட மக்கள் கோடைக்  காலத்தில் ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். இப்போது நீங்களே சொல்லுங்கள், ‘கூரைநீர் அறுவடை எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கடைபிடிக்கலாம் ..?’

13. மழை அறுவடையில் எத்தனை முறைகள் உள்ளன...?   
இன்று இயற்கையான நீர் ஆதாரங்களில், செயற்கையான தொட்டிகளில், நிலத்தடியில் உள்ள மண் கண்டத்;தில்,  வீடுகள் அல்லது இதர கட்டிடங்களின் கூரைகளின் மூலம்,  என நான்கு முறைகளில் மழை அறுவடை செய்யலாம்.

14. பயன்படும் வகையில் மழைநீர் அறுவடையை எத்தனை  வகைகளில் பிரிக்கலாம் ..?  
இரண்டு வகைகளில்;   ஒன்று உடனடியான உபயோகத்திற்கு   (பயிர்களுக்கு, தோட்டத்திற்கு மற்றும்  கழிவறைகளுக்கு),  இரண்டு நிலத்தடியில் சேகரித்து  எதிர்காலத்தில் பயன்படுத்து வதற்கு. 

15. நீரை அறுவடை செய்வதால் கிடைக்கும் பயன்கள் யாவை ..?  
1.தண்ணீருக்காக செலவு செய்யும் பணம் மிச்சம்.
2.உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உப்புக்களோடு,  நைட்ரேட் உப்புக்களின்  அடர் தன்மையை நிலத்தடியில் குறைத்துவிடும்.
3. பெரும்பாலான மக்கள் கூரை நீர் அறுவடை செய்யும்போது  குடிநீர் வடிகால் வாரியத்தின்  வேலைப்பளுவும், பிரச்சனைகளும் வெகுவாகக் குறைந்துவிடும்.  

16. அறுவடை செய்ததண்ணீரை அப்படியே பயன்படுத்தலாமா ...? 
அதன் கார அமிலத்தன்மை எப்படி இருக்கும்  ..?   
அறுவடை செய்த நீர்  காரத்தன்மை இல்லாமல், (ZERO HARDNESS) நடுநிலையான கார அமிலத் தன்மையுடன் (NATURAL PH) இருக்கும். இதனை வீடுகளில், தொழிற்சாலைகளில்;, இதர நிறுவனங்களில் அப்படியே பயன்படுத்தலாம்.

18. கூரைநீர் அறுவடையை நகர்ப்புறத்தில் செய்வதால் என்ன மாற்றம் நிகழும் ..?   
வெள்ள அபாயம் குறையும். குடிநீர் பிரச்சனை தீரும். குடிநீருக்காக செய்யும் செலவு மிச்சப்படும்; நீர் எடுப்பது, விநியோகம் செய்வது, ஆகியவற்றிற்கு செலவுசெய்யும் மின்சாரம்  மற்றும் எரிபொருள் மிச்சமாகும்.  பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வேலைப் பளு மிச்சமாகும்.    
 பூமி ஞான சூரியன், செல்பேசி: +8526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com

FOR FURTHER READING LIST
FROM VIVASAYA PANCHANGAM


1. பழவேற்காடு பகுதியில் பாரம்பரிய கூரைநீர் அறுவடை  -  TRADITIONAL ROOF WATER HARVESTING IN PAZHAVERKADU – Date: 21.12.2019 

2. பள்ளிக்கூடங்களில்   மழைநீர் சேகரிப்பு - RAINWATER HARVESTING IN SCHOOLS  - Date: 19.12.2019/

3. மழைநீர்   சேகரிக்க  சில வழிமுறைகள்    - RAINWATER   HARVESTING  - TEN GUIDELINES – Date:19.12.2019 / 

4. தண்ணீரினால்  பரவும்  நோய்கள் -  WATERBORNE  DISEASES – Date of Posting: 19.12.2019/ 

5. மழைநீரை சுத்தம் செய்வது      எப்படி ?    HOW TO CLEAN  RAINWATER TO DRINK ? Date of Posting: 18.12.2019/

6. இன்று ஒரு  குறுஞ்செய்தி - கூரைநீர்  அறுவடை - NEWS TODAY - ROOFWATER  HARVESTING / Date of Posting: 13.08.2019/ 

7. சென்னையில் மழை அறுவடை  விழிப்புணர்வு - ROOFWATER HARVESTING AWARENESS PROGRAMME IN CHENNAI - Date of Posting: 07.07.2019/ 


8. 38000 கோவில்களில்   மழை அறுவடை செய்ய   அரசுக்கு கோரிக்கை !    38000 TEMPLES  NEED    RAINWATER HARVEST / Date of Posting: 12.08.2017/ 

9. இஸ்ரேல்  நாட்டின்  மழை அறுவடை   வாத்தியார்  -   RAIN MAN OF ISRAEL/ Date of Posting: 07.07.2019/ 

10. உங்கள் வீட்டு  கூரை மூலம்  30000 லிட்டர் நீரை அறுவடை செய்யலாம்  - ROOF WATER HARVEST  YOU  CAN DO IT / Date of Posting: 27.02.2020/ 

11. மழைநீரை  சுத்தப்படுத்த பிளீச்சிங் பவுடர்  CLEAN RAINWATER  BY BLEACHING POWDER / Date of Posting: 19.12.2019/ 

12. கூரை நீர்   அறுவடை  சில கேள்விகளும்   பதில்களும்     ROOFWATER  HARVESTING QUESTIONS  & ANSWERS / Date of Posting: 19.12.2019/ 


Saturday, August 19, 2017

35 பல்வகை இந்திய மரங்களின் பட்டியல் - LEARN 35 MULTI-USE INDIAN TREES



                                                         

35 பல்வகை 

இந்திய மரங்களின் 

பட்டியல் 

LEARN 35 MULTI-USE 

INDIAN TREES 

                                                        

அன்புச் சகோதரர்களே ! சகோதரிகளே !
இந்திய மரங்களை நடுங்கள் !

நம்மிடையே உள்ள மரங்களில் இந்திய மரங்கள் மிகவும் குறைவு என்கிறார்கள். இனி நடவுள்ள மரங்களை இந்திய மரமா என்று தெரிந்து கொண்டு நடவு செய்யுங்கள். உங்களுக்கு உதவும் விதத்தில் இரண்டாம் பட்டியலாக 35 இந்திய மரங்களின் பட்டியலை இங்கு தந்துள்ளேன்.

இது பற்றிய மேலும் விவரங்கள் வேண்டுமானால், அன்புகூர்ந்து,  எனது தொலைபேசி அல்லது எனது மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(வ.எண்;.    தமிழ்ப் பெயர்    ஆங்கிலப் பெயர்      பயன்கள்)

  1    வெள்வேல் மரம் -   WHITE BABUL -   தீவனம்

  2    பரம்பை  -  FERRUGINEA  -  மரவேலை

  3    தேற்றான்கொட்டை மரம்   CLEARING NUT TREE  மரவேலை

  4    தோதகத்தி   - ROSE WOOD-   மரவேலை

  5    சடச்சி மரம்  -  DHAMAM -   மரவேலை

  6    சாரப்பருப்பு மரம்  -  CUDAPPA ALMOND-  உணவு

  7    சிறுநாகப்பூ  -  CEYLON IRON WOOD TREE -   சோப்பு, எண்ணெய்

  8     சோழ வேங்கை  - BISHOP WOOD  -  கட்டிடவேலை, காகிதம்

 10       தானிக்காய்  -  BELLARIC MYROBALAN -   மரவேலை, மருந்து

 11    கடுக்காய்  -  YELLOW MYROBALAN -   மரவேலை, காகிதம்

 12    கண்டல்  -  TRUE MANGROVE  -  மீன்கள், இறால்,தீவனம்

 13    கத்தக்காம்பு  -  KUTCH TREE -   கோயில் கட்டுமானம், தீவனம்

 14    கமேலா  -  MONKEY FACE TREE -   சாயம், வார்னீஷ், தீப்பெட்டி

 15 குங்கிலிய மரம்  -  SAL TREE -   ஓட்டுப் பலகை, வார்னீஷ், தீவனம், எண்ணெய், சோப்பு

 16    கறிவேம்பு  -  KAKED TREE  -  யனைத் தீவனம், காகிதம், மரவேலை

 17    ஆலோசிரீசியா கருவை -  HOLOSERECEA -   விறகு, தீவனம், காகிதம், உலக்கை

 18    கருப்புக் குங்கிலியம் -  BLACK DAMMAR -   வார்னீஷ், மரவேலை, மருந்து

 19    கரும்பொரசு   -   -   மரவேலை, சிற்பம், சாயம், எண்ணெய், சோப்பு

 20    கும்பி  -  புயசனநnயை -   அழகு மரம், கடைசல் வேலை, தழை உரம்

 21    குடசப்பாலை  -  நுயளவநச  வுசநந -   கடைசல், சிற்பம், தீவனம்,

 22    நரிவிளா    - GARDINIA -   தழை, டானின், கடைசல், மரவேலை, எலிமிச்சை தாய்ச்செடி,

 23    நரிவேங்கை -   SANDAN -   தீவனம், டேனின், மரவேலை, அழகு மரம்

 24    நறுவிலி -   NARUVILI  -  மரவேலை, கட்டுமானம், தீவனம், டேனின்

 25    நாவல் -   JAMUN  -  பழம், தீவனம், மரவேலை, மருந்து

 26    பறங்கிச் சாம்பிராணி -   INDIAN FRANCENCE  -  சாம்பிராணி, வார்னீஷ், காகிதம், சென்ட்

 27    நீர்க்கடம்பை  -  KAIM -   கட்டுமானம், கடைசல், தீப்பெட்டி, தீவனம்,
 
 28    நுணா  -  TAGARI WOOD  -   மரவேலை, கடைசல், தழை உரம்

 29    பலா  -  JACK TREE  -  பழம், தீவனம், காய்கறி

 30    நெல்லி  -  GOOSE BERRY -   கனி, தீவனம், தழை உரம்

 31    முருங்கை -   DRUMSTICK -   காய், மருந்து,

 32    முள்ளுவேங்கை -   ASNA -  கட்டுமானம், தீவனம், கனி, காகிதம்

 33    மோதகவல்லி  -  MOTHAGAVALLI  -  மரவேலை, காகிதம், விறகு, அழகு மரம்

 34    வக்கனி    MOUNTAIN PARSIMON    தீவனம், மரவேலை,

 35    வட்டப்பொலவு -   KARNIKAR  -  மரவேலை, தீவனம், காகிதம், தீக்குச்சி

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail,com

Thursday, August 17, 2017

பலபயன் தரும் 27 இந்திய மரங்கள் = TWENTY SEVEN MULTI-USE TREES OF INDIA



பலபயன் தரும்  
27 இந்திய மரங்கள் 

TWENTY SEVEN 

MULTI-USE      

TREES OF INDIA                             

அன்புச் சகோதரர்களே ! சகோதரிகளே ! இந்திய மரங்களை நடுங்கள் !

இப்போது தமிழ்நாடு முழுவதும் மரம்; நடுவது, மரங்களுக்கு நீர் ஊற்றுவது, மரங்களுக்கு வேலி போடுவது, மர விதைகளை சேகரிப்பது, விதைப் பந்துகள் தயாரிப்பது, விதைப்பந்துகளை புதர்க்காடுகளில் விதைப்பது, ஆகியவற்றை  சிறந்த முறையில், பள்ளி  மற்றும் கல்லுர்ரி மாணவர்கள், இதர இளைஞர்கள், அரசு, தனியார், பொது அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் என அனைவரும், செய்து வருகிறீர்கள்.

நம்மிடையே உள்ள மரங்களில் இந்திய மரங்கள் மிகவும் குறைவு என்கிறார்கள். இனி நடவுள்ள மரங்களை இந்திய மரமா என்று தெரிந்து கொண்டு நடவு செய்யுங்கள். 

உங்களுக்கு உதவும் விதத்தில் முதல் பட்டியலாக 27 இந்திய மரங்களின் பட்டியலை இங்கு தந்துள்ளேன்.

இது பற்றிய மேலும் விவரங்கள் வேண்டுமானால், அன்புகூர்ந்து,  எனது தொலைபேசி அல்லது எனது மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வ.எண்.    தமிழ்ப் பெயர்    ஆங்கிலப் பெயர்      மரவகை

  1    மகிழ மரம்  -  BULLET WOOD TREE -   பூ மரம்
  2    மந்தாரை (அ) ஆத்தி -   CAMEL FOOT TREE -   பூ மரம்
  3    மரமல்லி -   INDIAN CORK TREE  -  பூ மரம்
  4    மாவிலங்கு  -  SACRED BARNA -   பூ மரம்
  5    மூங்கில்  -  BAMBOO -  அழகு மரம்
  6    பாதாம் கொட்டை -   INDIAN ALMOND TREE  -  அழகு மரம்
  7    வெப்பாலை  -  SWEET INDRAJAO TREE  -  பூ மரம்
  8     வேங்கை மரம்  -  INDIAN KINO TREE  -  அழகு மரம்
 10    வேம்பு -   NEEM TREE -   அழகு மரம்
 11    சரக் கொன்றை -   GOLDEN SHOWER TREE -   பூ மரம்
 12    கோங்கு -   SILK COTTON TREE -   அழகு மரம்
 13    ஷெண்பகம் -   CHAMPAK  -  பூ மரம்
 14    சவுக்கு -   CASUARINA -  அழகு மரம்
 15    மலை வேம்பு -   MALABAR NEEM  -  அழகு மரம்
 16    நந்தியாவட்டம்  -  PIN WHEEL FLOWER TREE -   பூ மரம்
 17    நெட்டிலிங்கம் -   MAST TREE  -  அழகு மரம்
 18    பாரிஜாதம் / பவழ மல்லி -   TREE OF SORROW -   பூ மரம்
 19    பாதிரி மரம்  -  PATHIRI TREE  -   பூ மரம்
 20    பீநாறி மரம் -   WILD ALMOND TREE  -  அழகு மரம்
 21    புங்கன் -   INDIAN BEECH TREE -  அழகு மரம்
 22    புன்னை மரம்  -  ALEXANDRIAN LAUREL TREE  -  அழகு மரம்
 23    கடலிப்பூ / பூமருது    QUEEN'S FLOWER -    பூ மரம்
 24    பூவரசு    THESPESIA TREE -    பூ மரம்
 25    கல்யாண முருங்கை -   INDIAN CORAL TREE -   பூ மரம்
 26    குமிழ மரம்  -  KUMIZH TREE  -  அழகு மரம்
 27    மீன் வால் மரம் / ஜவ்வரிசி மரம் -   FISH TAIL PALM  - அழகு மரம்

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com


Wednesday, August 16, 2017

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1100 மரங்கள் - மியாவாக்கி அடர்வனம் - 1100 TREES MIYAWAKI MODEL FOREST



திருப்பத்தூர் மாவட்டத்தில் 
1100 மரங்கள் -
மியாவாக்கி 
அடர்வனம்

(திருப்பத்தூர்  
மாவட்டம், தமிழ்நாடு)

1100 TREES 

MIYAWAKI

MODEL FOREST 



அன்பிற்குறிய சகோதரர்களே !   சகோதரிகளே !
தெக்குப்பட்டு அடர் வனம்

இப்போது உங்களுக்கு மியாவாக்கி முறையில், காடுவளர்ப்பது எப்படி என்று சொல்லப்போகிறேன்;  காடு வளர்ப்பது புரிகிறது; அது என்ன மியோவாக்கி ..?   மியோவாக்கி ஜப்பான் நாட்டு இயற்கை விஞ்ஞானி; உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் காடுகளை உருவாக்கியவர்; மரங்களை உருவாக்கியவர்; அவற்றை செயற்கை காடுகள் என்கிறார்கள்; ஆதாவது ஆங்கிலத்தில்  மேன் மேட் பாரஸ்ட் (MAN MADE FOREST)

நோபல் பரிசுக்கு சமமான, 'புளு பிளானட்  அவார்ட்" என்ற பரிசினைப் பெற்றவர்; இவரைப்பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்;  இப்போதைக்கு இதுபோதும் என்று நினைக்கிறேன்.

மியாவாக்கி சொல்லிக் கொடுத்த வழி இது;  நாங்களும் ஒரு சிறு மாதிரி அடர்வனத்தை உருவாக்கியுள்ளோம்; அதன் பரப்பளவு 220 சதுர மீட்டர்;  அதில் நடவுசெய்துள்ள மொத்த மரங்கள் 1100. 

அதிலுள்ள மர வகைகள் 100;  இந்த மியேவாக்கி முறையின் சிறப்பே  இதுதான்; குறைவான நிலப்பரப்பே போதுமானது ;அதிகமான எண்ணிக்கையில் மரங்கள் நடலாம்; அதிகமான மர வகைகளையும் இதில் நட முடியும்; ஒரு சதுர மீட்டரில் 5 மரங்கள் தோராயமாக  ஒரு மீட்டர் நீள, அகலமுள்ள நிலப்பரப்பில், 5 மரங்களை நடவு செய்யலாம்.

இப்போது எங்கள் அடர் சிறு வனத்தில், 1100 மரங்கள் உள்ளன.  100 வேறு வேறு வகையான மரங்கள்; இயற்கையான ஒரு காட்டிற்கு போனால்கூட, ஒரே இடத்தில் 100வகையான மரங்களை பார்த்தல் இயலாது. 

இன்னொன்று உலகத்திலுள்ள இயற்கையான எந்த வனத்திலும், ஒரு ஹெக்டேர் நிலபரப்பில்  1,000 மரங்கள் என்பதுதான் சராசரி மர எண்ணிக்கை;  ஆனால் இந்த அடர் நடவு முறையில், 50,000 மரங்களை உருவாக்க முடியும்.  

ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பு என்பது 10000 சதுர மீட்டர்; ஒரு சதுர மீட்டருக்கு 5 மரக்கன்றுகள்;  அப்படியானால்;  10,000 சதுர மீட்டருக்கு  50,000  மரக்கன்றுகள்;.
மியாவாக்கி அவர்களுக்கு  வயது  85 க்கும் மேல்;  பல நாடுகளில், பல ஆண்டுகளாக, 3000 க்கும் மேற்பட்ட செயற்கை வனங்களில் 40 மில்லியன் மரங்களை  வளர்த்து, வெற்றியும் பெற்றுள்ளார்.

ஆகையால், நாங்கள், நம்பிக்கையோடு, 2016 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 24 ம் தேதி, இந்தப் பணியைத் தொடங்கினோம்; ஆனால் 100 மர வகைகளை தெரிந்தெடுத்து, நட்டு முடிக்க, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டது.

 பூமியின் அடர் வனத்திற்கு இன்னும் ஒரு வயது முடியவில்லை;  ஆனால் மலைவேம்பு, மந்தாரை, நீர்மத்தி, தேக்கு, பூவரசு, பெருங்கொன்றை, பொன்னாவரை, போன்றவை, 10 முதல் 15 அடிவரை வளர்ந்துள்ளன.  

நொச்சி, ஆடாதொடை, ஆச்சா, சீயக்காய், ருத்ராட்சை, வில்வம், கருமருது, மருதாணி, மூங்கில், போன்றவை 5 முதல் 10 அடி வரை வளர்ந்துள்ளன; செஞ்சந்தனம், சந்தனம் ,ரப்பர், தோதகத்தி, போன்றவை நன்கு வளர்கின்றன. 

இப்படி ஒரு அடர்வனம், என்னும் இந்த சிறு காட்டினை, ஏன் நாம் உருவாக்க வேண்டும் ..?  

இதுபோன்ற சிறு அடர் வனங்களை, யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம்; வெறும் 20 சதுர மீட்டர் நிலம்கூட போதுமானது; அதில் 100 மரங்கள நடலாம்;  இந்த 20 சதுர மீட்டரில் கூட 100 வகை மரங்களை நட முடியும்; நமது  தோட்டத்தில் ஒரு சதுர மீட்டர் நிலம் இருந்தால் போதும்; 5 மரங்கள் கொண்ட மிகச் சிறு வனத்தை, உருவாக்கலாம்;   மனம் இருந்தால் போதும், மரங்களை நடலாம்;   மரவனம் உருவாக்கலாம்.
        

மியாவாக்கி செயற்கை காடுகளின் தந்தை - MIYAWAKI FATHER OF 40 MILLION TREES

















                                             



மியாவாக்கி 
செயற்கை 
காடுகளின் 
தந்தை 

MIYAWAKI FATHER OF40 MILLION TREES


 உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில், பல நாடுகளில் அதிசயமான மரங்களை நட்டவர் மியோவாக்கி; இதுவரை 40 மில்லியன் மரங்களை,  கன்றுகளாக நட்டு காடுகளாக மாற்றியுள்ளார்;   இவற்றில் முக்கியமானது சீர்கேடடைந்த வனங்களை சீரமைத்ததுதான்; ஜப்பான், போர்னியோ, அட்டசோனியா, மற்றும் சீனாவில் மட்டும் 1400 இடங்களில் வனங்களை அமைத்துள்ளார்.


தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள உள்ளுர் தாவர வகைகளை ஆய்வு செய்யும் பணியை 1908 ஆம் ஆண்டுவாக்கில் எடுத்துக்கொண்டார்.

மியோவாக்கி மாடல் என்று சொல்லும்போது முக்கியமான மூன்று அம்சங்களை முன் வைக்கிறார்;    ஒன்று உள்ளுர் மர வகைகள்   (LOCAL TREE SPECIES);   இரண்டாவது அடர் நடவு முறை (HIGH DENSITY PLANTATION); அதாவது ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பில், 5 மரக்கன்றுகள் நடவு செய்வது;    மூன்றாவது முக்கியமாக, பிரச்சனை உள்ள இடங்களில் ஏற்ற மர வகைகளை தெரிந்தெடுப்;பது; உதாரணம் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடம், சீர்கேடடைந்த வனம், மற்றும் மேல்மண் இழந்த நிலப்பகுதிகள்.

1990 ஆண்டு வாக்கில் மிக மோசமாக சீர் கேடடைந்த காடுகளை, வெப்பமண்டலக் காடுகளை, சீரமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.

 2013 வாக்கில், இந்தியாவில் வடகிழக்கு பகுதியில், பாராபாணி தொழிற்சாலைப்பகுதியில், முதன்முதலாக, 'மியோவாக்கி மாடல்" ல்  அடர்வனம் ஒன்று உருவாக்கப் பட்டது.

      மியோவாக்கி மாடலில் முழுக்க முழுக்க ஒரு அடர் வனத்தை,  100 சதவீதம் மாற்றம் இல்லாமல் உருவாக்குவது எப்படி ..?

1. அடர்வனம் அமையும் பகுதியில் உள்ள உள்ளுர் மரவகைகள் என்னென்ன என்று ஆய்வு செய்வது.
2. மரவகைகளை தெரிந்தெடுத்தபின், உள்ளுர் மரவகைகளின், விதைகளைச்  சேகரம் செய்வது.
3. விரைந்து முளைப்பதற்கான விதைநேர்த்தி முறைகளை செய்வது.
4. மரங்கள் நடவு செய்வதற்கான நிலப்பரப்பினைத்  தயார் செய்வது.
5. மரக்கன்றுகளை நடவுசெய்வது.

மியாவாக்கி தனது மாடலை, தாய்லாந்து, பிரேசில், சைல் ஆகிய நாடுகளில் வெற்நிகரமாக நிரூபித்தார்.

1998 ல்  சீனப்பெருஞ்சுவரின்  ஊடாக 4 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கினார்;   அவை 2004 ஆம் ஆண்டு வாக்கில், 3 மீட்டர் உயரம் வளர்ந்து சாதனை நிகழ்த்தியது;   2006 ஆம் ஆண்டு இயற்கையை பாதுகாத்த சிறந்த மனிதர்  என்பதற்கான சர்வதேச விருதான  ' புளு பிளாண்ட் அவார்ட்"  வழங்கப்பட்டது .

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com    

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...