Saturday, July 22, 2017

WATERSHED DEVELOPMENT - நீர் மேலாண்மைப்பற்றி பற்றி ஒளவையார்


                நீர் மேலாண்மைப்பற்றி பற்றி ஒளவையார்

நீhவடிப்பகுதி என்பதை  நாம்   சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம்   இல்லை.

.நீர்வடிப்பகுதியை   வாட்டர்ஷெட் ஏரியா (WATERSHED AREA)  என்றும் சொல்லலாம்.   சுருக்கமாக நீர்வடிப்பகுதி  என்றால்  பொதுவான வடிமுனை கொண்ட நிலப்பரப்பு  என்று பொருள்.

ஒரு நதி அல்லது  ஆற்றிற்கு  எந்த  அல்லது எவ்வளவு நிலப்பரப்பில்  இருந்தெல்லாம் நீர் வருகிறதோ  அதுதான்  அந்த நதி அல்லது  ஆற்றின்   நீர்வடிப்பகுதி.  

ஒரு நீர்த்தேக்கத்;திற்கு  எந்த அல்லது எவ்வளவு நீர்ப்பரப்பில்  இருந்தெல்லாம் நீர்  வருகிறதோ ,அதுதான் அந்த நீர்த்தேக்கத்தின்  நீர் வடிப்பகுதி.

ஒரு ஏரி  அல்லது குளத்திற்கு  எந்த அல்லது எவ்வளவு  நிலப்பரப்பில் இருந்தெல்லாம்  நீர் வருகிறதோ  அதுதான்  அந்த ஏரி அல்லது குளத்தின்  நீர்வடிப்;பகுதி.
 
இப்போது உங்களுக்கு வாட்டர்ஷெட்   ஏரியா   என்பது பற்றி புரிந்திருக்கும் என நம்புகிறேன்.  

ஆக்ஸ்போர்ட்   ஆங்கில அகராதியில் இதற்கு  என்ன அர்த்தம் சொல்லுகிறார்கள்;   என்று பார்ப்போம். “எந்தப்பகுதியில்  இருந்தெல்லாம்  மழைநீர், ஒரு ஆறு அல்லது ஏரிக்கு  வருகிறதோ,  அந்தப்பகுதிதான்;  நீர்வடிப்பகுதி.” (THE AREA FROM WHICH RAINS FLOW INTO A PARTICULAR RIVER OR LAKE - OXFORD DICTIONARY)
 
நீர்வடிப்பகுதி  என்பது  நீர்வடியும்பகுதி   என்று அர்த்தம்.   நீர் வடீயும் பகுதி என்றால்  ஒரு உயரமான  பகுதி இருக்கும்.  ஒரு தாழ்வான பகுதி இருக்கும்.  நடுத்தரமான உயரமுடைய  ஒரு பகுதி இருக்கும்.   இவை மூன்றும் சேர்ந்ததுதான் நீர்வடிப்பகுதி.

மீண்டும் நீர்வடிப்பகுதிக்கு  வருவோம்.   நம் தமிழ்  நாட்டினை, இங்கு ஓடும் ஆறுகளை, அடிப்படையாகக்கொண்டு  நீர்வடிப்பகுதிகளாக   பிரித்துள்ளனர்.  இங்குள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள்,  துணையாறுகள், கிளையாறுகள் அத்தனையும்  இந்த நீர்வடிப்பகுதிக்குள் அடங்கும்.
 
.டாக்டர்.  ஆர். கே. எஸ்.  இதனை  நீர்வடிப்பகுதி  என  குறிப்பிடுவார்.  சிலர் இதனை நீர்பிரிமுகடு  என்பார்கள்.  இத்தப் பெயரைக்  கேட்டு  குழம்பிப்போனவர்கள்  நிறைய பேர்.

1980 களில்  வாட்டர்ஷெட்  என்ற ஆங்கில வார்த்தை  பிரயோகம்  இந்தியாவிற்குள்  பிரபலம்  ஆனது.  ஆனால் இதுமாதிரியான வேலைகளை  மண் மற்றும் நீர்வள  பாதுகாப்பு   என்றுதான் குறிப்பிடப்பட்டு  வந்தது;  சிலர் இதனை  நீர் பிரிமுகடு  என்றார்கள்;  சிலர் நீர் பிடிப்புப் பகுதி என்றார்கள்;.

2002  - 03  ஆம் ஆண்டில்  பரவலாக இதற்காக ஒரு திட்டம் வந்தது.  அதற்காக  அரசு ஒரு பயிற்சி ஏற்பாடு  செய்திருந்தது. நிறைய விவசாயிகள்,  நிறைய  விவசாய அதிகாரிகள்  என்னைப் போன்று   தொண்டு நிறுவனங்களில்  வேலை பார்த்தவர்களும்  இருந்தோம்.
 
“கார் ஷெட் தெரியும், மெக்கானிக் ஷெட்  தெரியும் .அது என்ன சார் வாட்டர்ஷெட்  என்று கேட்டார்  ஒரு பயிற்சியாளர்…”  அனைவரும் வேடிக்கையாக சிரிக்க  அந்த  பயிற்சிக்  கூடம்  அதிர்ந்தது .

அதற்கான பொருள் மற்றும்  எளிமை  இதை வைத்து பார்க்கும்போது   நீர்வடிப்பகுதி  என்பதே  பொருத்தமாக  உள்ளது.   அதுசரி இந்த நீர்வடிப்பகுதி  மேம்பாட்டுத் திட்டம் அப்படி என்னதான் செய்யும்  ?  அதையும் சுருக்கமாய் பார்த்துவிடுவோம். 

குறிப்பாக  நீர்வடிப்பகுதியில்  சீர்கேடு அடைந்துள்ள  இயற்கை வளங்களை சரிசெய்து  பாதுகாத்து, பராமரித்து,  மேம்படுத்தி,  அவற்றை அளவாக பயன்படுத்தி,  அப்பகுதியில்   நீடித்த அல்லது நிலைத்த  மேம்பாட்டினை  உருவாக்குவதுதான்  இந்த திட்டத்தின்  நோக்கம். 

இந்த திட்டம் என்ன செய்யும்  ?  மேலே சொன்னபடி  நீடித்த அல்லது நிலைத்த  வளர்ச்சியை  கொண்டு வரும்.  எப்படி  ?  இதைக் கற்றுக் கொள்ள  நான் நிறைய  படித்தேன்.  நிறைய பயிற்சி எடுத்துக் கொண்டேன். 

ஒரு நாள் நான் இரண்டாம் வர்ப்பில் படித்த பாட்டு நினைவுக்கு வந்தது.  அடடா  பழைய  சமாச்சாரம்.  நாமதேயம் தான் புதுசு.   புதிய  மொந்தையில்  பழைய  கள்.   என்ன பாட்டு  ?  என்ன மொந்தை   ?    நாம் எப்போதோ   படித்ததுதான்.

        வரப்புயர   நீர்  உயரும்;
      நீர்உயர     நெல்  உயரும்
      நெல் உயர    குடிஉயரும்
      குடிஉயர     கோல்  உயரும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், நம்ம ஒளவைப் பாட்டி எழுதிய “நீர்வடிப்பகுதி”  விளக்கப்  பாட்டு.  அதற்கு என்ன பொருள்  ?
 
“வரப்பை உயர்த்திப் போடுங்க.  தண்ணி வயலுக்குள்ள  நிறைய  நிக்கும். பயிர் நல்லா வளரும். நல்லா விளையும். நல்லா விளைஞ்சதுன்னா  மக்கள் மகிழ்ச்சியா   இருப்பாங்க.  மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால்  அந்த அரசுக்கு  பிரச்சினை  இருக்காது.  அந்த அரசின்  கொடி   அதிக  உயரத்தில்  பறக்கும்..” 
இதற்கு தொழில்நுட்ப ரீதியாக எப்படிஅர்த்தம்சொல்லலாம்  ?

1..வயலில் வரப்பு  போட்டால்  பெய்யும் இடத்திலேயே  மழைநீரை சேமிக்கலாம். (INSITU CONSERVATION OF WATER) 

2..மழைநீர் அடுத்த நிலத்திற்கு ஓடாமல் வரப்பு தடுக்கும் (CONTROL OF RUNOFF WATER).

3..நீரோட்டம் தடைபடுவதால்  நிலத்தின் மேல் மண் அரித்து  எடுத்துச் செல்லப்படாமல் தடுக்கப்படும்(உழவெசழட  ழக  ளுழடை  நுசழளழைn). 

4..நிலத்தின் மார்க்கண்டத்தில்  மண்ஈரம்  நீடித்து இருப்பதால் அதில்  சாகுபடி செய்யும் பயிரின் வளர்ச்சி  அபரிமிதமாக  இருக்கும்(SOIL MOISTURE IS CONTENTED FOR CROP GROWTH).

5. .பயிர் வளர்ச்சியும்  விளைச்சலும்  நன்றாக இருந்தால்   நாட்டில் பஞ்சமும் , பசி பட்டினியும்  இருக்காது (NO DROUGHT NO FAMINE).
 
6. மக்கள் பிரச்சினையின்றி மகிழ்ச்சியாக இருப்பர்.  அத்துடன் அவர்களின்  சமூக, பொருளாதாரநிலை உயரும் (ENHANCED SOCIO ECONOMIC STATUS OF PEOPLE). 

7. மக்களை பிரச்சனையில்லாமல் பார்த்துக்  கொள்ளும்  அரசின் செங்கோலுக்கு எவ்வித ஆபத்தும்  இருக்காது.  ஆட்சிக்கும் ஆபத்து வராது.
 
8. ஒரு ஆட்சி நீடிக்க வேண்டுமானால்  மண்ணையும், நீரையும், மக்களையும் பாதுகாக்க வேண்டும்.  அதுதான் இந்த பாட்டு சொல்வது.  இதுதான் நீர்வடிப்பகுதி மேம்பாடு.

9. நீர்வடிப்பகுதி, அதனை  மேம்படுத்துதல்,  அதனால்  என்ன கிடைக்கும்  ?
  இதுபற்றி இவர்கள் மனதில்  தோராயமான ஒரு புரிதல்  ஏற்பட்டிருக்கும்.

10. இதுவரை ஏறத்தாழ 9 ஆண்டுகளில்  இதுபற்றி  12,000 பேருக்கும் மேல்  நாங்கள்  பயிற்சி  அளித்துள்ளோம்.  எங்கள் பயிற்சியை  “வரப்புயர  நீர் உயரும்”  என்றுதான்  தொடங்குவோம். 

பூமி ஞானசூயரின், செல்பேசி;+918526195370, மின்னஞ்சல்; gsbahavan@gmail.com



No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...