Tuesday, July 18, 2017

RAIN HARVEST IS THE ONLY SOLUTION - மழையை சேமிக்கலைன்னா பஞ்சம் வரும்

                                                         
                  மழையை சேமிக்கலைன்னா 
             பஞ்சம் வரும்

“மழை எவ்ளோ பேஞ்சாலும், அதை சேமிக்கலன்னா குடிநீர்ப் பஞ்சமும் வரும். வறட்சியும் வரும்னு தெரிஞ்சிக்கிட்டோம். இது நாங்க கத்துக்கிட்ட பாடம்”
இது இன்றைய சிரபுஞ்சிக் காரர்களின் ஒட்டு மொத்தக் குரல்.

      இதுபற்றி உண்மையா என்று கேட்டால், “எங்க ஊர் மலைக்கு மேல இருக்கு. அதனால மழை பேஞ்ச அஞ்சி நிமிஷத்துல தண்ணி, எல்லாம் அடிவாரத்துக்கு எறங்கிடுது. விவசாயம் கூட பாக்க முடியல, விதைவிதைக்க அடுத்த நிமிஷம் மழையில அடிச்சிட்டு பொயிடுத்து. அக்டோபர் மாதத்தில் அடிக்கும் மழைக்குப்பின்னும்  தாய்மார்களும், சிறுவர் சிறுமிகளும், எங்களுடன் குடிநீர் தேடி அலைவது கொடூரமானக் காட்சி.” என்று புலம்புகிறது சிரபுஞ்சி.
'ட்ரக்' லோடுகளில் தண்ணீர் கொண்டு வருபவர்கள்தான் சிரபுஞ்சிக் காரர்களின் நவம்பர் – டிசம்பர் மாதக் கடவுள்கள். ஒரு வாளித்தண்ணீரை எட்டு ரூபாய் விலைக் கொடுத்து வாங்குகிறார்கள். 

சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் நாட்களில் இங்கு தண்ணீர் வியாபாரம் சூடு பிடிக்கிறது. ஓர் ஆண்டில் சராசரியாக 20000 பேர் வந்து போகிறார்கள்.

மலையின் மடியில் இருக்கும், இக்த மழை மாநகரத்தின் காலடியில் புறப்படும் ஆறுகளில், ஓடும் நீரும், அருந்துவதற்கு லாயக்கில்லாதவை.

இங்கு அமைந்துள்ள நிலக்கரி மற்றும் சுண்ணாம்பு வெட்டி எடுக்கும் சுரங்கங்கள், இந்த ஆறுகளின் தண்ணீரை மாசுபடுத்தும்  அசுப காரியங்களை அன்றாடம் செய்து வருகின்றன.

மிக அதிகமான அமிலத்தன்மையும் மிகக்குறைவான கார அமிலத் தன்மையும் உடைய தண்ணீர் இது. தாவரங்களும் நீர் வாழ் பிராணிகளும் இதில் வாழமுடியாது.

அந்த அளவுக்கு மோசமான தண்ணீர். ஆயினும் சுரங்க வேலைகள்  நின்றபாடில்லை. இந்த ஆறுகளின் தண்ணீரை வில்லங்கப்படுத்தும், சுரங்கங்களின் உரிமையாளர்கள் ஷில்லாங்கில் வசிக்கிறார்கள் என்று எழுதியுள்ளார் இப்பகுதியை நேரடியாக ஆய்வு செய்த சைலேந்திரா யஷ்வந்த்.
சிரபுஞ்சியின் மழை குறைவிற்கு இன்னொரு முக்கியக் காரணம், இந்த மலைச்சாரலில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டதுதான்.

1972 ஆம் ஆண்டு மேகாலயா தனி மாநிலம் ஆனது. தனி மாநிலம் ஆனதனால் அடைந்த ஆதாயம் ‘அதிகபட்சமான காடுகளை வெட்டி காலிபண்ணியதுதான்’ என்கிறார்கள் சிரபுஞ்சியின் மண் ஆய்வு சங்கத்தின் அமைப்பாளர்.

சிரபுஞ்சியின் பிரச்சனைக்கு ஒரே ஒரு தீர்வை சிபாரிசு செய்கிறார்கள்  விஞ்ஞானிகள். ‘உலகின் மிக ஈரமான பகுதியாக இருந்த சிரபுஞ்சியாக இருந்தாலும், பாலைவன பூமி ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ஆக இருந்;தாலும், வறட்சி, குடிநீர்ப் பஞ்சம் எல்லாவற்றிற்கும் ஒரே வைத்தியம் “ நீர் அறுவடை”

ஓர் ஆண்டின் சராசரி மiழையாக 100 மில்லி மீட்டர் பெறும் வறண்ட பாலைவனம் ஜெயசால்மர். ஆனால் அங்கு குடிநீர்ப் பஞ்சம் “நஹி ஜீ”  என்கிறார்கள் சேட்டுக்கள்.

இந்த மகிமைக்குக் காரணம் ‘நீர் அறுவடைதான்‘ என்று காலர்  இல்லா ஜிப்பாவை உயர்த்திக் கொள்கிறார்கள்.

ஓர் ஆண்டில் 100 மில்லி லிட்டர் ஆண்டு சராசரி மழை பெறும் ஜெய்சால்மரில் ஒரு எக்டர் நிலப்பரப்பில் ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரை அறுவடை செய்து ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.

100 எக்டர் வீடுகளின் கூரைப் பரப்பையுடைய சிரபுஞ்சியில் ஓர் ஆண்டில் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் அறுவடை செய்ய முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். 

பூமி ஞானசூரியன் - 8526195370

************************************************************************************
வெள்ளத்  தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு – குறள் 595
அதிகாரம்: 60, ஊக்கமுடைமை

நெடுநிர் மறவி மடிதுயி னான்குங்
கெடுநீரார் காமக் கலன் - குறள் 605
அதிகாரம்: 61, மடியின்மை

வெள்ளத்  தனைய திடும்பை அறிவுடையான்
உள்ளத்தி னுள்ளக் கெடும் - குறள் 622
அதிகாரம்: 63, இடுக்கண் அழியாமை

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியு ணீர்சோர்ந் தற்று – குறள் 718
அதிகாரம்: 72, அவையறிதல்

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு – குறள் 737
அதிகாரம்: 74, அரணியல்



     

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...