Sunday, July 23, 2017

புளோரைட் நைட்ரேட் உப்புக்களால் ஏற்படும் நீர் மாசு - WATER POLLUTED BY FLUORIDE AND NITRATE

புளோரைட்   

 நைட்ரேட் 

உப்புக்களால் 

ஏற்படும் நீர்  மாசு


WATER 

POLLUTED BY

FLUORIDE 

AND NITRATE


நீர் பற்றிய ஒரு விழிப்புணர்வு  நிகழ்ச்சி ஒன்றினை திருப்போரூருக்கு அருகில்  ஒரு கிராமத்தில்   எங்கள் பூமி நிறுவனத்தின் மூலம்  நடத்திக் கொண்டிருந்தோம்.

ஒரு அரசு அதிகாரிக்கு  நன்றி சொல்லி  அவர் அலுவலகத்திற்கு  போய் இருந்தேன்.  நல்ல வேளையாக அவர் அங்கு  இருந்தார்.  அவருக்கு வணக்கம் சொன்னேன்.  அவரும்  பதிலுக்கு வணக்கம்  சொன்னார்.  மூன்று மாதங்களாக அவரைத் தெரியும்.   நல்ல மனிதர்.  நீர்வளம் ஆதாரம்  குறித்து  ஞானம்  உள்ளவர்.  நேர்மையானவரும் கூட.  இன்னும் கூட அவர்  பெயர் எனக்கு நினைவில் உள்ளது. 
 
சென்னையிலிருந்து  மகாபலிபுரம்  செல்லும் சாலையில்  9 கி. மீட்டருக்கு முன்னால்  இருக்கும் ஊர்  திருப்போரூர். அந்தப் பகுதியில்  நீர் பற்றிய  விழிப்புணர்வு  நிகழ்ச்சி  ஒன்றினை  இரண்டு மூன்று கிராமங்களில்  நடத்தினோம். 

அதில் சிறப்பு அழைப்பாளராக  அந்த  அதிகாரி   கலந்து கொண்டார்.  நீர் மாசுபட்டால் மனிதர்கள்  எப்படி பாதிக்கப் படுவார்கள் ?  இதுதான் அந்த நிழ்ச்சியில்  அவர் பேசியது;  அற்புதமாகப் பேசினார்.

அடுத்த ஓரிரு  நாட்களில்  அது பெரிய தவைப்பிட்டு பல பத்திரிகைகள்;;  செய்திகளை வெளியிட்டன.  எங்களுக்குப்  பெருமை பிடிபட வில்லை.  அதனால் பத்திரிகைகளில வந்த செய்திகளை           கத்தரித்து  எடுத்துக்கொண்டு  சென்றிருந்தேன்  அவருக்கு கொடுப்பதற்கு.
 
என்னை  உட்கார  சொன்னார்.    உட்கார்ந்தேன் .அவருக்கு நன்றி சொன்னேன்.  பத்திரிகைச் செய்திகளை எடுத்து அவரிடம்  கொடுப்பதற்கு முன்னால்  முந்திக் கொண்டு அவர் சொன்னதைக் கேட்கவும்,  எனது தலையில்   இடி இறங்கியதைப் போல  இருந்தது.

“உங்களுக்கு ரொம்பப்  புண்ணியமாப் போகும்..  தயவுசெய்து  இனிமே  என்னைப்  பார்க்க   இந்த ஆபிஸ் பக்கம்  வராதீங்க…”

“ஏன் சார்   ?   என்ன நடந்தது   ?  எதுக்காக அப்படி  சொல்றீங்க   ?   நான் ஏதாச்சும்  தப்பா  பேசிட்டனா  ?  தப்பா  நடந்துக் கிட்டேனா ?   என்று பதட்டத்துடன் கேட்டேன்.

நீங்க  எதுவும்  செய்யல.   நான் தான்  தப்பு  பண்ணிட்டேன் .  முதல்ல உங்க நிகழ்ச்சிக்கு வந்தது தப்பு .  அங்க  பேசினது தப்பு  .  தயவுசெய்து   போய்ட்டு வாங்க.  எங்க  தலைக்கு மேல  கத்தி தொங்கிக்கிட்டு  இருக்கு  சார்” – என்று சொல்லிவிட்டு கை எடுத்து  கும்பிட்டுவிட்டு  வேகமாக அங்கிருந்து  புறப்பட்டு  சென்று விட்டார்
.
எனக்கு என்ன செய்வதென்று புரியாமல்  நின்றிருந்தேன்.  அங்கிருந்தவர்கள் யாரும் என்னிடம் பேச லிரும்பவில்லை எனத் தெரிந்தது. அதற்குப்பிறகு என்ன நடந்தது என்று தெரிந்துக் கொண்டேன்.

அவர் என்னிடம் பேசாமல் எழுந்து சென்றதற்கு  என்ன காரணம் என்று பிறகு சொல்கிறேன். அவர் அந்த நிகழ்ச்சியில்  நீர் பற்றி என்னதான் பேசினார்  சுருக்கமாக கீழே கொடுத்துள்ளேன்.  படியுங்கள்.

நாம் குடிக்கும் நீரில் பவவிதமான உப்புகள்  கரைந்துள்ளன. இவற்றின் அளவு அதிகரிக்கும்போது  நமது உடல்நலத்தை பாதிக்கிறது.

நைட்ரேட்  உப்பு அதிகமாக இழுக்கும் தண்ணீரை 6 மாதக் குழந்தைகளுக்கு  கொடுத்தால்  அவை இறந்து போக நேரிடும்.  கர்ப்பிணிப்  பெண்கள்  குடித்தால், கருவில் உள்ள குழந்தையின்  உயிருக்குக் கூட   எமனாகிவிடும்.

 ‘புளோரைட்’  உப்பும்  மோசமானது.  குடிநீரில் புளோரைடு அதிகரித்தால் மெல்ல நமது பற்கள் சிதைந்து போய் விடும். கைகால்  மூட்டுகள் அசைக்க முடியாமல் கெட்டிப்படும். எலும்புகள் உறுதி இழக்கும்.  வேலைகள்எதுவும் செய்ய முடியாது.

இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் ஏற்படுத்தும். 20 வயது  இளைஞன்  40  வயது மனிதரை ஒத்திருக்கும்.  இப்படிப்பட்ட  உப்பின் பாதிப்பு   தமிழ்நாட்டில்  22  மாவட்டங்களில்  உள்ளது. 
மேற்கண்ட செய்தியைத்தான் கட்டம் கட்டி  வெளியிட  மேலதிகாரிகள்  மற்றும்  சம்மந்தப்பட்ட துறை  அமைச்சர் உட்பட, செய்திகளை  படித்துவிட்;டு, “யாரையா  அவர்  ?  வரச் சொல்லுங்கய்யா அந்த ஆளை”  என்று அவரை அழைத்து  காய்ச்சு  காய்ச்சு   என  காய்ச்சி விட்டார்கள். அதுதான்   நடந்தது.

 அதற்குப் பிறகு அவரை  பலமுறை பார்க்க விரும்பினேன்.  முடியவில்லை.  நல்வ வேளை  தற்காலிக  பதவி நீக்;;கம் அளிக்க  இருந்தது  என்றும், ஆனால்   எச்சரிக்கையுடன் விட்டுவிட்டார்கள்  என்றும் அவர் நண்பர் மூலம் தெரிந்துக்கொண்;டு  நிம்மதி பெருமூச்சுவிட்டேன்.

“விழாவுக்கு நீங்க கூட்டிகிட்டு போனது தப்பில்ல. அவர் அங்க பேசினதும் தப்பு இல்ல….புளோரைடு பாதிப்பு 22 மாவட்டங்கள்ல இருக்குன்னு பத்திரிக்கையில போட்டதுதான் தப்பு…” என்றார் அவர். “தப்புதான் சார்..” என்று அவரிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com















No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...