Wednesday, July 19, 2017

ISRAEL'S SECRET OF SURPLUS WATER - இஸ்ரேலின் நாட்டின் தண்ணீர் ரகசியங்கள்

                                  

இஸ்ரேலின் நாட்டின் 
தண்ணீர் ரகசியங்கள் 

“தேவையைவிட  எங்களிடம் அதிகமான தண்ணீர்  இருக்;கு… அதுக்கு முக்கியமான காரணம்  இரண்டு….  ஒன்று  சாம்பல் நீரை  சுத்திகரிச்சி  பயன்படுத்தறது…இரண்டாவது  கடல்  நீரை  நன்னீராக  மாற்றுவது உலகத்திலேயே  பெரிய  நன்னீராக்கும்  பிளாண்ட்  எங்ககிட்டதான்  இருக்கு, தெரியுமா உங்களுக்கு….? ”  என்கிறார்கள்  இஸ்ரேல்காரர்கள். 
 
‘ரிவெர்ஸ்   ஆஸ்மாசிஸ்  டீசல்  பெசிலிட்டி’  (REVERSE OSMOSIS DIESEL FACILITY) என்னும் தொழில் நுட்பத்தைப்   பயன்படுத்துகிறார்கள். இஸ்ரேல் வீடுகளுக்குத் தேவையான மொத்த நீரில்   55 சதம் கடல்நீரை  சுத்திகரிப்பு செய்வதனால் கிடைக்கிறது.
  
உலகின் வறண்ட பிரதேசமாக இருந்த  இஸ்ரேல்  நாடு  இன்று ‘வாட்டர் ஜெய்ண்ட்’ (WATER GIANT). 

‘ஜூக்கர்பர்க்  டீசலைனேஷன்  பிளாண்ட்’தான்   கடல்நீரை நன்னீராக்கும் உலகின் மிகப் பெரிய  ஆலை.  மிகக்குறைவாக  தண்ணீர் பயன்படுத்தும்  முறைகள் பற்றிய ஆராய்ச்;சிகள் இங்கு நடக்கின்றன.  முக்கியமாக   சொட்டுநீர்ப்  பாசனம்,  நீர் சுத்திகரிப்பு, மற்றும்  நன்னீராக்கும்  தொழில்நுட்பம் (DESALINATION TECHNOLOGY) 
 
எங்கள் ஆராய்ச்;சி நிலையத்தின் நோக்கம்,  நெகேவ்  பாலைவனத்தை  மேம்படுத்துவதுதான். ஆனால் அதற்கான கண்டுபிடிப்புக்கள், பலநாடுகளுக்கும் பொருத்தமாக உள்ளன என்று சொல்லும் ஜூக்கர் பர்க்  டீசலைனேஷன்  ஆராய்ச்சி  நிலையத்தின் விஞ்ஞானி  ஆஸ்நாட்  ஜில்லர் (OSNAT GILLER)  இன்று கடுமையான வறட்சியினால் பாதிக்கப்படாத  ஒரே  நாடு  இஸ்ரேல் என்கிறார். 
 
ஆப்பிரிக்க  கிராம மக்களின்    தண்ணீர்  பஞ்சத்தையும்  போக்குவதற்;கு    ரீசைலண்ட்  வெல் சிஸ்டம் (RESILENT WELL SYSTEM)  மற்றும் பயாலஜிக்கல்  டைஜஸ்டர்ஸ் (BIOLOGICAL DIGESTERS)   என்பவற்றை   உருவாக்கி  உள்ளனர்  ஜூக்கர்பர்க்  விஞ்ஞானிகள்.

2008  ஆம் ஆண்டு கடுமையான வறட்சியில் சிக்கியது இஸ்ரேல்.  நீரைப்பொருத்தவரை  ‘சீ  ஆப்;   கலிலீ’ (SEA OF GALILEE) என்பதுதான்  இஸ்ரேலின்  சொர்க்க பூமி.  அதன் நீர்  மட்டுமே  அபாயகரமான  குறியைத் தொட்டு பயமுறுத்தியது.  நிறைய தடை உத்தரவுகள்  போடப்பட்டன. விவசாயிகளின் வயல்களில் விளைந்தது எதுவும் வீடுவந்து சேரவில்லை. 

இஸ்ரேலின் அண்டை தேசமான  சிரியாவை  வறட்சி வாட்டி எடுத்து  விட்டது. 

நிலத்தடி நீர்மட்டம கைக்கு எட்டாத ஆழத்தில்,  ஒளிந்து கொண்டது. 1600 அடிகள் துளையிட்டாலும்,  தண்ணீருக்கு பதிலாக காற்று மட்டுமே  வீசியது.  கிணறுகள் அனைத்தும் வறண்டு போயின. வயல்களில் புழுதிப்புயல் சுழன்று வீசியது .
 
விவசாயிகள்;  பஞ்சம் பிழைக்க  பட்டினம் போனார்கள்.  விதிகள்மீறிய குடியிருப்புக்கள்            காளான்களாய்   முளைத்தன.  வேலையில்லா திண்டாட்டம்  அதிகரித்தன.  குற்றங்கள்  மலிந்தன.  சிரியா அரசு செய்வதறியாது  தவித்தது.
  
இஸ்ரேலின் அருகமைந்த மிடில் ஈஸ்ட்  ஈரான்,  ஈராக் ஜோர்டான்  ஆகிய நாடுகளும் தப்பவில்லை.  வறட்சி  வறுத்தெடுத்தது.  இதில்   ஆச்சர்யமாக  தப்பிப்  பிழைத்தது  இஸ்ரேல் மட்டும்தான். 

இஸ்ரேலின்  தேவையைவிட இப்போது  கை வசம் இருக்கும்       தண்ணீர்  அதிகம்.
 
நீருக்காக போராடுவது  என்பது  இஸ்ரேலில் போர்க்கால நடவடிக்கை என்று  வார்த்தையில் இல்லாமல்,  செயல்வடிவம் பெற்றது.  

இஸ்ரேல் நாடு முழுவதிலும் பயன்படுத்தும்   கழிப்பறை மற்றும்  குளியலறைகளில் பயன்படுத்தும்  தண்ணீரின்  அளவைக்.           ;குறைக்க வேண்டும்.

அதற்கு என்னசெய்யலாம் யோசித்தார்கள்.  நாடு முழுவதும் ஒரே மாதிரியான அமைப்புக்களைப் பொருத்தினார்கள்.  அதில் வெளியேறும் நீரை  சுத்திகரித்தார்கள்;  86 சதவீதநீர் கிடைத்தது. அப்படியே அதனை பயிர்களுக்கு பாய்ச்சினார்கள்.

இன்று    உலகத்திலேயே அதிக அளவு  கழிவுநீரை  சுத்திகரித்து  பயன்படுத்தும் நாடுகளில் முதல் நிலையில்  உள்ள இஸ்ரேல் 86 சதவீதம்.  அதற்கு அடுத்து ஸ்பெயின் நாடு. இரண்டாம் நிலையில் இருக்கும் ஸ்பெயின்நாடு உபயோகிப்பதே வெறும் 19 சதம்தான். 

ஆயினும்  ஆண்டுக்கு  இஸ்ரேலுக்குத்  தேவைப்படும்  சுத்தமான நீர்  (POTTABLE WATER) 1.9  பில்லியன்  கன  மீட்டர்; (BILLION CUBIC METER).;  கைவசம்   உள்ள 1.4  பில்லியன்;   கன மீட்டர்; நீரை, இயற்கையான நீர் வளங்கள் தருகின்றன.  இன்னும் 500 மில்லியன்;  கன மீட்டர்; நீர்  தேவை.
இதுவரை,  இஸ்ரேல் அமைந்துள்ள  கடல்நீரிலிருந்;து  நன்னீர்   உற்பத்தி  கேந்திரங்கள்   (க.ந.உ.கே.)   600  க. மீ. நீரை ஓராண்டில்  சுத்திகரித்துத் தருகின்றன.  

இந்த  க.ந.உ.கே.  அனைத்தும் முழுமையாக இயங்கும்போது, அவர்கள் தேவைக்கும்   அதிக  நீரை கைவசம் வைத்திருப்பார்கள்.   அப்படி உபரியாக  இருக்கும்  தண்ணீரை  என்ன செய்யலாம் என்று  அப்போதே தலையை  பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் இஸ்ரேல்காரர்கள்.

1990 ஆண்டிலிருந்தே  டீசலைனேஷன்  தொழில் நுட்பத்தை  கையாளுகிறார்கள். ஆனால் அப்போதைய உற்பத்தி செலவைவிட,  இப்போது  கணிசமாக  குறைந்துள்ளதாம்.  ஜோரக் ‘டீசலைனேஷன்  பிளாண்ட்’  ஆயிரம்  லிட்டர் தண்ணீர்  உற்பத்தி  செய்ய  ஆவது  வெறும் 58  செண்ட்  தான்.  

இஸ்ரேலியர்கள் ஒரு குடும்பத்திற்கு, தண்ணீர் விநியோகத்திற்கு  அரசு  30  யூ.எஸ்.  டாலர்  வசூல்  செய்கிறது.  இது   லாஸ்வேகாஸ் நகரத்தைவிட  குறைவு.  லாஸ்ஏஞ்சல்ஸ்  நகரத்தைவிட குறைவு.  எங்கள் ஊரில் தண்ணீர்  ரொம்ப சீப் என்கிறார்கள் இஸ்ரேலியர்கள். 

இன்று நாங்கள் தண்;ணீர் என்றால் தலைநிமிர்ந்து  நிற்கிறோம்; அதற்கு காரணம்   டீசலைனேஷன் பிளாண;டஸ்  என்று மார்தட்டுகிறார்கள்  இஸ்ரேல்காரர்கள்.

பூமி ஞானசூரியன் - 8626195370



No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...