Tuesday, July 18, 2017

WATER - HIGH RAINFALL PLACES OF INDIA

                                              
இந்தியாவின் 
மழைமா நகரங்கள்

மழை வரும்போதே பிடித்துக்கொள். உலகின் மழைமா நகரமாக தற்போது விளங்கும் மாசின்ரோம்’ஐ உள்ளடக்கிய  இந்தியாவின் ஆண்டு சராசரி மழை 1250 மில்லி மீட்டர்.

கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். யூனியன் பிரதேசங்களை சேர்த்து மொத்தம் 36 மாநிலங்களைக் கொண்ட நம்  இந்தியாவில் குறைவான மழை பெறும் மாநிலம் ராஜஸ்தான்  என்று.  ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி அதிர்ஷ்டம் செய்தது. அதன் ஆண்டு சராசரி மழை 675 மில்லி மீட்டர். மேற்குப் பகுதி பெறுவது 313 மில்லி மீட்டர். கிழக்கு மேற்கு பகுதிகளின் சராசரி 494 மில்லி மீட்டர். 

     ராஜஸ்தானின் ஆண்டு சராசரி மழை கூட இஸ்ரேவின் மழையை விட அதிகம்.

மழையை பொருத்தவரை 36 மாநிலங்களை கொண்ட இந்தியாவில் தமிழ்நாட்டின் இடம் 34 வது இடம். பாண்டிச்சேரிக்கும் சம அந்தஸ்த்து, 

நமக்கும் கீழே அதிர்ஷ்டக் கட்டையாக 5 மாநிலங்கள் அணிவகுத்து நிற்கின்றன (மழையின் அடிப்படையில்). அவை ஹரியானா, பஞ்சாப், தெலுங்கானா,ஹிமாச்சலபிரதேஷ்,மற்றும்  ராஜஸ்தான்.

ஆனால் இந்திய மழை புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 998 மில்லி மீட்டர்;.

இந்தியாவின் தலைநகரம் டெல்லியுடன் ஹரியானா சண்டிகர் ஆகியவற்றில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 617 மல்லி மீட்டர். 

ஐந்து நதிகள் பாய்ந்து வளம் சுரக்கும் மாநிலம் பஞசாப். இதன் ஆண்டு சராசரி மழை ஆச்சர்யப்படும் அளவு. டெல்லியைவிட கொஞ்சம் ஜாஸ்தி. வெறும் 649 மில்லி மீட்டர்தான். 

மீதமுள்ள அனைத்து 23 மாநிலங்களிலும் கிடைக்கும் ஆண்டு சராசரி  மழை 1000 மில்லி மீட்டருக்கும் மேல்.

லட்சத்தீவுகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால் கேரள மாநிலம்தான் அதிகபட்ச ஆண்டு சராசரி மழை பெறுகிறது. மழை அளவு 3005 மில்லி மீட்டர்.

மாசின்ரோம் மற்றும் சிரபுஞ்சியை உள்ளடக்கிய மேகாலயாவின் ஆண்டு சராசரி மழை அளவு 2818 மில்லி மீட்டர்தான். 

கர்நாடகாவின் வடக்கு உட்பகுதியின் ஆண்டு சராசரிமழை 3456 மில்லி மீட்டர் பெற்றாலும், இதர இரண்டு பகுதிகளிலும் 731 மில்லி மீட்டரும் 1,126. மில்லி மீட்டரும் கிடைக்கின்றன. 

தென் மாநிலங்கள் என்று பார்த்தால், கடைசியிலிருந்து நாம் இரண்டாம் இடத்திலும், நமக்குத்துணையாக பாண்டிச்சேரியும் உள்ளது. 

 961 மில்லி மீட்டர் மழை பெறும் தெலுங்கானா நம்மைவிட குறைவான மழை பெறும் தென் மாநிலம்.

 அப்படிப் பார்த்தால் எங்களைவிட ராஜஸ்தானில் மழைஅளவு குறைவு என்று தெலுங்கானா சந்தோஷப்படலாம்.

உலகத்திலே  விவசாயத்தில் அதிக வருமானம் பெறும் இஸ்ரேல் நாட்டின் ஆண்டு சராசரி மழைஅளவை விட, நாங்கள் அதிக மழை பெறுகிறோம் என்று ராஜஸ்தான்காரர்கள் சந்தோஷப்படலாம்.
      
இந்த விஷயத்தில் நாம் எல்லோருமே சந்தோஷப்படலாம். 

இந்தப் பிரபஞ்சத்தில் எந்தப் பகுதியாக இருப்பினும், இயற்கை எல்லையில்லா தன் கருணையை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கருணைமழை இந்தியாவின் பக்கம் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. கீழ்க்கண்ட பட்டியலைப் பாருங்கள். இவை எல்லாமே இந்தியாவில் மழை அதிகம்பெறும் மழைப்பிரதேசங்கள்.

1.    மாசின்ரோம்.      மேகாலயா.
2.    சிரபுஞ்சி         மேகாலயா
3.    சின்ன கல்லார்.    தமிழ்நாடு.
4.    நேரிய மங்கலம்.   கேரளா.
5.    ஆம்போலி       மகாராஷ்ட்ரா.
6.    தித்தார் கஞ்ச்    உத்ரகாண்ட்
7.    சந்த்பால்       ஓரிசா.
8.    ஆடும்பே        கர்நாடகா.

மழை அளவை பொருத்தவரை இந்தியா பெரும்புள்ளிதான் என்று இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்லுகின்றன..

அது இல்லாதபோது நாம் தூற்றிக் கொண்டிருப்பதால், நம்மால் மறக்கமுடியாத பழமொழி காற்றுள்ள போதே தூற்றிக் கொள். ஆனால் மழை நமக்குச் சொல்லும் புது மொழி  மழை வரும்போதே பிடித்துக்கொள்.

      மழை பிடிக்க பாத்திரம் செய்வதும், பத்திரம்  செய்வதும்தான் :நமது பணி !

- பூமி ஞானசூரியன் - 8526195370
==========================================================================
வானோர்க்கு வாழு முலகெலாம் மன்னவன்
கோனோக்கி வாழுங்குடி – குறள் 542
அதிகாரம்: 55, செங்கோன்மை

இயல்புளிக் கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு – குறள் 557
அதிகாரம்: 55, செங்கோன்மை



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...