நீரின் காலடித் தடம் -
ஒரு பொருள் உற்பத்திக்கு
ஆகும் நீரின் அளவு
WATER FOOT PRINT
WATER REQUIREMENT
ஒரு டன் தானியம் உற்பத்திசெய்ய எத்தனை கியூபிக் மீட்டர் (அ) கன மீட்டர் தண்ணீரை பயன்படுத்தினோம் என்பதுதான் அதன் காலடித்தடம்.
சாம்பல்நீரை சுத்தம்செய்து குடிக்கவும் செய்கிறார்கள் என்பது நம்பமுடியாத செய்தி. ஆனாலும் உண்;மை .
மழைநீர் மாதிரி வருமா ?
“அது ஒன்றும் பெரிய சமாச்சாரம் இல்லை. நாங்கள் 1929 லிருந்து சாம்பல்நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்துகிறோம்..எங்கள் பார்க்குகளுக்கும் கோல்ஃப் மைதானங்களுக்கும் இதைத்தான் பாய்ச்சுகிறோம்…. பாய்ச்சுவது இந்தத்தண்ணீர்தான்” என்கிறது லாஸ்ஏஞ்சல்ஸ்.
“நாங்கள் கொஞ்சம் லேட்… ஆனால் 1932 ஆம் ஆண்டிலிருந்தே பயன்படுத்துகிறோம்… ஆனால் நாங்கள் குடிப்பதில்லை” ;இது கல்போர்னியா.
சிங்கப்பூரில் அதிநவீன தொழில் நுட்பத்தினால், சாம்பல்நீரை அற்புதமான தண்ணீராக மாற்றிவிடுகிறார்கள். மறைமுகமாக (INDIRECTLY) நாங்கள் குடிக்கவும் பயன்படுத்துகிறோம் என்கிறார்கள்.
“என்னதான் ஆர்.வோ. என்றாலும், அறுவடை செய்த மழைநீர் மாதிரி வருமா”, விஷயம் தெரிந்த விஞ்ஞானிகள்.
யு.எஸ்.ஏ., யூ.கே. போன்ற நாடுகளில், பெரிய ஹோட்டல்கள், தங்கும் வீடுதிகள், (LIESURE INDUSRY) சாம்பல்நீரை மறுசுழற்சி செய்கிறார்கள்.
டாய்லெட்'களில் பிளஷ் செய்ய பயன்படுத்துகிறார்கள். இதற்கு ஆகும் செலவுகள் அதிகம். காரணம், ஆனாலும் வாட்டர்பில் பாதியாக குறைகிறது. இன்னும்கூட வீடுகளில் பயன்படுத்த தயக்கம் இருக்கிறது.
மிகக்குறைவான செலவில் மறுசுழற்சி கருவிகளை வெள்ளோட்டம் விட்டிருக்கிறது, ‘ரீ அக்குவா” (REAQUA). இதை வாங்கிப் போட்டால், உங்கள் வாட்டர் பட்ஜெட் 30 சதம் கட் என்கிறது.
ஒரு வீட்டில்பொருத்த எவ்வளவு செலவாகும் என்று கேட்டால், அதிகமில்லை ஜென்டில்;மேன், ஒரேஒரு லகரம்தான்;. இன்ஸ்ட்டாலேஷன் சார்ஜ் 30,000. மெய்ண்ட்டனன்ஸ் ஒரு 3,000 என்கிறார்கள் (இந்திய ரூபாயில்தான்).
இன்னும் இரண்டே வருஷம்தான். இதன்விலை 300 அல்லது 400 பவுண்டுக்கு வந்துவிடும் என்கிறார்கள். (1 பவுண்டு ஸ்ரீ 100 இந்திய ரூபாய்)
நீரின் காலடித்தடம் (WATER FOOT PRINT) குளிக்க, சமைக்க, துவைக்க, நெல் பயிரிட, கோதுமை பயிரிட, கார் செய்ய, கமப்யூட்டர் செய்ய, எல்லாவற்றிற்கும் வேண்டும் தண்ணீர்.
ஒரு பொருள் செய்ய அல்லது காரியம் ஆற்ற எவ்வளவு நீரை பயன்படுத்துகிறோம்; அல்லது மாசுபடுத்துகிறோம்; இப்படி கணக்கிடுவதுதான் நீரின் காலடித்தடம்; ஒரு டன் தானியம் உற்பத்திசெய்ய எத்தனை கியூபிக் மீட்டர் (அ) கன மீட்டர் தண்ணீரை பயன்படுத்தினோம் என்பதுதான் அதன் காலடித்தடம்.
ஒரு பட்டுப்புடவை தயார் செய்ய 28,000. லிட்டர் நீரை செலவு செய்ய வேண்டும். ஆக ஒரு பட்டுப்புடவையின் காலடித்தடம் அது.
ஒரு வேஷ்டியை தயார் செய்ய 3,000 மி.லி. லிட்டர் நீரை தேவை என்கிறார்கள். ஆக பட்டுப் புடவைக்கு நீரின் காலடித் தடம், வேஷ்டியைவிட அதிகம்.
பசுமைநீர் (GREEN WATER), நீலநீர் (BLUE WATER), சாம்பல்நீர் (GREY WATER), என மூவகை நீர்பற்றி முன்னரே பார்த்தோம்.
நேரடியாக பயன்படுத்தும் மழைநீர் பசுமைநீர். ஏரி, குளம், குட்டை , ஆறுகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், இவற்றில் சேகரம் ஆவது நீலநீர். குளியலறைநீர், துவைக்கும் நீர், சமைக்கும் நீர், ஆகியவை சாம்பல்நீர்.
விவசாயம், வன வளர்ப்பு, காரியங்களுக்;கு பயன்படுத்தப்படும் மழைநீரினை அளப்பது பசுமைகாலடித்தடம்.
இயற்கை விவசாயம், தொழிற் கூடங்கள், வீட்டு உபயோகம் ஆகியவற்றால் செலவழிக்கப்படும், மாசுசெய்யப்படும் நீரை அளப்பது நீலநீர் காலடித்தடம் (BLUE WATER FOOT PRINT)
சாம்பல்நீரில் உள்ள மாசுவினை சரிசெய்து உபயோகிக்கும் அளவுக்கு, தரமாக மாற்றுவதற்கு ஆகும் நீரின் அளவை அளப்பது ,சாம்பல்நீர் காலடித்தடம் (GREY WATER FOOT PRINT)
நீர் காலடித்தடங்களுக்கு சில உதாரணங்கள்:
1.ஒரு கிலோ மாட்டு இறைச்சி உ ற்பத்தி செய்ய ஆகும் நீர்ச்செலவு 15,000 லிட்டர்.
2. 150 கிராம் சோயா பர்கர் செய்ய ஆகும் நீர் 160 லிட்டர்.
3. 150 கிராம் மாட்டிறைச்சி பர்கர் செய்ய ஆகும் நீரின் காலடித்;தடம் 1,000 லிட்டர்.
4. ஒரு ஜப்பானியரின் ஓராண்டு நீர்காலடித்தடம் -- 1380 கன மீட்டர்.
5. ஒரு அமெரிக்கரின் ஓராண்டு நீர்காலடித்தடம் 2840 கன மீட்டர்.
(The
water Foot Print
is a measure
of Humanity and it’s appropriation
of Fresh Water in volumes of water consumes and
not polluted .)
வாட்டர் புட் பிரிண்ட் அல்லது அல்லது நீரின் காலடித்தடம் என்னும் கொள்கையை முதன்முதலாக உருவாக்கியவர் ஆர்ஜென் ஓல் ஹோக்ஸ்ட்ரா என்பவர் யுனெஸ்கோவைச் சேர்ந்த நீரியல் நிபுணர், 2002 ஆம் ஆண்டு இதனை உருவாக்கினார் .
சில முக்கிய பொருட்களின் நீரின் காலடித்தடம் எவ்வளவு என எவ்வளவு என கணக்கிட்டுள்ளார்கள். அவை உற்பத்திசெய்யும் நாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வேறுபடும்.
மாட்டிறைச்சி 1 கிலோ உற்பத்திக்கு ஆகும் நீர் 15415 லிட்டர்.
சாக்;லெட் 1 கிலோ உற்பத்திக்கு ஆகும் நீர் 17896 லிட்டர்.
பால் 1 லிட்டர் உற்பத்திக்கு ஆகும் நீர் 1021 லிட்டர்.
கோதுமை ரொட்டி 1 கிலோ உற்பத்திக்கு ஆகும் நீர் 1608லிட்டர்.
அகில உலக அளவில் ஒரு தனிநபர், ஓர் ஆண்டில் சராசரியான நீரின் காலடித்தடம் 1385 கன மீட்டர்.
ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் ஒரு நபரின் ஓராண்டின் நீரின் காலடித்தடத்தை கீழ்க்கண்டவாறு கண்டறிந்துள்ளனர்.
சீனா -- 1 071 கனமீட்டர். .
பின்லாந்து -- 1733 கனமீட்டர்.
இந்தியா -- 1089 கனமீட்டர்.
யுனைட்டட் கிங்டம் -- 1695 கனமீட்டர்.
யூ.எஸ்.ஏ. -- 2842 கனமீட்டர்.
பூமி ஞானசூரியன் - செல்பேசி; +91 8526195370 ,மின்னஞ்சல் ; gsbahavan@gmail.com
No comments:
Post a Comment