Saturday, July 22, 2017

DR.R.K.SIVANAPPAN - மறந்துபோன பூமியில் டாக்டர் ஆர்.கே. சிவனப்பன்

                      

மறந்துபோன பூமியில் 
டாக்டர் ஆர்.கே. சிவனப்பன்

“நீர்பிடிப்புப் பகுதி  என்பது  ஒரு ஓடை,  ஒரு ஆறு,  ஒரு நதி அல்லது ஒரு  குட்டை, குளம்  மற்றும்  பெரிய நீர் தேக்கங்களுக்கும்,  மழைத்தண்ணீர்  எங்கிருந்தெல்லாம் வருகின்றதோ அந்த நிலத்தின் பரப்பேயாகும். அந்த நிலத்தின் பரப்பளவு  10 ஹெக்டேராகவும்  இருக்கலாம்  அல்லது 10 மில்லியன் ஹெக்டேராகவும் இருக்கலாம்” 

இது நீரியல் நிபுணர்  டாக்டர். ஆர்.கே.  சிவனப்பன் (ஆர்;. கே. எஸ்) .அவர்கள், மண்மற்றும் நீர்வள  பாதுகாப்பும்,  நீர் சேமிப்பு முறைகளும்,  என்ற தன் கையேட்டில்  கொடுத்துள்ள விளக்கம்.

இங்கு பேராசிரியர். டாக்டர். ஆர்;. கே. எஸ்.  பற்றி  குறிப்பிட வேண்டும். சர்வதேச காடு வளர்ப்பு தொடர்பான  நிறுவனம்  “சிடா”  என்பதன்  ஆலோசகராக   இருந்தவர்.  மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு,  நீர்வடிப்பகுதி  திட்டம்,  சொட்டுநீர்பாசனம் பற்றியெல்லாம், இந்திய துணைக் கண்டத்திற்கு  “ஆனா  ஆவன்னா”  என்று சொல்லித் தந்தவர் என்கிறார்கள்.
 
அவர் மேலை நாடுகளில் பிறந்திருந்தால்  பெரிய அங்கீகாரம்  கிடைத்திருக்கும்  என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது  மட்டுமல்ல  அவர் தமிழ்நாடு  வேளாண்மை பல்கலை கழகத்தின்  பேராசிரியராக வேலை பார்த்தவர்.

டாக்டர்.  ஆர் . கே. எஸ்.  பற்றி  குறிப்பிடும்போது    நான் அவரிடம் படித்த மாணவன்  என்று சொல்லி பல  நார்கள்   பூவோடு சேர்ந்து மணம்பெற  முயற்சி செய்வர்.  அப்படிப்பட்ட  நார்களின் பட்டியலில்   நானும் ஒருவன். 
“தமிழகத்தின் நீர்வளம் ” என்ற நூலை 1990 ம் ஆண்டு பி. எஸ். மணி அவர்கள் எழுதினார். நியு செஞ்சரி புக் ஹவுஸ் அதனை வெளியிட்டது.

அநேகமாய் தமிழகத்தின் நீர்வளம், அதன் பிரச்சினைகள், நீர்வளம் பெருக்கும் வழிமுறைகள் பற்றி வந்த முதல் நூல் எனலாம். பி.எஸ் மணி அவர்கள் ஒரு வேளாண்மை பட்டதாரி. 38 ஆண்டுகள் வேளாண்மைத் துறையில் பணியாற்றியவர்; அவர் தனது நூலினை டாக்டர் ஆர்.கே. சிவனப்பன் அவர்களுக்கு கீழ்கண்டவாறு சமர்ப்பணம் செய்திருந்தார்.

“தமிழகத்தின் பெருகிவரும் பாசன நீர்த்தேவையைச் சுட்டிக்காட்டி, சொட்டுநீர்ப்பாசனத்திற்கு உருவகம் கொடுத்து, பாசனச் சிக்கனமே, நீர்வளம் மற்றும் பயிர்வளம் எனத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, வெளியிட்ட, டாக்டர் ஆர்.கே. சிவனப்பன் அவர்களுக்கு சமர்ப்பணம்”

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்;gsbahavan@gmail.com



No comments:

தசரத் மஞ்சி ஃபல்குனிதேவி - CELEBRATED BIHAR LOVERS THASARATH MANJI AND FALCUNI DEVI

  தசரத் மஞ்சி ஃபல்குனிதேவி தொடர்ந்து ஒரு காரியத்தில் கவனம் செலுத்தினால் எவ்வளவு பெரிய சாதனையும் செய்து முடிக்கலாம் இதுக்கு அடையாளமான பெயர்...