வேங்கை
தமிழ்நாட்டின்
பாரம்பரிய மரம்
VENGAI
TRADITIONAL
TREE OF
TAMILNADU
(PTEROCARPUS MARSUPIUM)
தாவரக் குடும்பம்: ஃபேபேசியே (FABACEAE)
பொதுப்பெயர்: இந்திய கினோ (INDIAN KINO)
-------------------------------------------------------------------------------------------------------------
தாவரக் குடும்பம்: ஃபேபேசியே (FABACEAE)
பொதுப்பெயர்: இந்திய கினோ (INDIAN KINO)
-------------------------------------------------------------------------------------------------------------
இருபத்தியைந்து வருஷம் இருக்கும்: இளையராஜாவின் ஊர் பண்ணைப்புரத்துக்குப் பக்கத்தில் தான் நான் முதன்முதலில் வேங்கை மரத்தைப் பார்த்தேன்.
ஒரு கிராமத்து சகோதரர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்; ‘இதுதான் வேங்கை மரம்; சந்தேகம் இருந்தா வெட்டிப் பாருங்க் வெட்டியும் காட்டினார் ரத்தம் மாதிரி வடிஞ்சது; இப்படி ரத்தம் மாதிரி வடிஞ்சாதான் அது வேங்கை மரம் என்றார்.
வேங்கை என்று சொன்னால் பாயும்புலி; வங்காளப் புலி என்று அர்த்தம்; பத்தாம் நூற்றாண்டு வாக்கில், கோதாவரி கிருஷ்ணாவில் கொடிகட்டிப் பறந்த சோழ ராஜ்ஜியத்தின் பெயரும் வேங்கைதான்; வேங்கை என்ற பெயரில் ஒரு மலையும் இருந்தது; வேங்கை மலை.
அழகான பூவுக்கு உதாரணம் சரக்கொன்றையும் பூ மருதும்; மரவேலைகளுக்கு என்றால், தேக்கும் தோதகத்தியும் உதாரணம்; பிசின் என்றால் வேலமரமும், வேங்கை மரமும்.
வெளிநாட்டு வியாபாரிகளிடமும் வேங்கைப் பிசின் ரொம்பப் பிரபலம்.; அங்கு இதன் ஆங்கிலப் பெயர் இந்திய 'கினோ கம்;".
ரப்பர் மரத்தை சீவினால் பால்; வடியும்; பனையின் பாலையை சீவினால் பதனீர் வடியும்;வேங்கை மரத்தை சீவினால் ரத்தம் மாதிரி பிசின் வடியும்; கினோ பிசின்.
தோல் பதனிடும் தொழில், சாயத்;தொழில், காகிதம் செய்யும் தொழில், அத்தனைக்கும் அடித்தளம் ஆவது 'கினோ பிசின். "
வேங்கை மரத்தில் மெல்லச் செல்லும் மாட்டு வண்டிகளுக்கு சக்கரம் செய்யலாம்; பறந்து போகும் ரயில்களுக்கும், பக்குவமான பெட்டிகள் செய்யலாம்; ராக்கெட்டுகளுக்குக்கூட ஜாக்கெட்டு செய்ய முடியுமா ..? என்று ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கலாம்.
வீடு கட்ட தூண்கள் வேண்டுமா ..? உத்திரங்கள், விட்டங்கள், மேஜை, நாற்காலி என்ன செய்ய வேண்டும்..? அத்தனையும் செய்யலாம்; தேக்குக்கும் ரோஸ்வுட்டுக்கும் அடுத்த அற்புதமானமரம் வேங்கைதான்.
தென்மேற்கு பருவமழையின் கண் ஜாடைக்கு காத்திருந்ததைப் போல, அது தொடங்கவும் வேங்கை பூக்க ஆரம்பிக்கும்; பழுப்பும் மஞ்சளும் கலந்த பக்குவமான ஒரு நிறத்தில் பூ பூக்கும்.
'நான் பூத்து விட்டேன் பார்த்தீர்களா ..? " என்று நம்மை தூரத்திலிருந்தே நம்மை கேட்கும் வேங்கை மரத்தின் நுனிக்கிளைப் பூக்கள் !
சங்க இலக்கிய கவிஞர்களுக்கு வேங்கைப் பூக்கள் என்றால் வெகுபிரியம்;; கலித்தொகை’யில், பல இடங்களில் வேங்கைப் பூக்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன; மாதிரிக்கு ஒரு கலித்தொகையின் பாட்டு பார்க்கலாம்.
"எஃகுஇடை தொட்ட, கார்க் கவின்; பெற்ற ஐம்பால் போல் -
மையற - விளங்கிய, துவர்மண லது ; அது
ஐதாக நெறித்தன்ன அறல்அவிர் நீள்ஐம்பால்
அணிநகை இடையிட்ட ஈகையாம் கண்ணிபோல்,
பிணிநெகிழ் அலர் வேங்கை விரித்த பூ நெறிகொளத்
துணிநீரால் தூமதி நாளால் அணி பெற ..."
இதற்கு பொருள் ; நீர் ஓடி ஓய்ந்த ஓடையில் படிந்திருக்கும் கருமணல் அவள் கூந்தலை ஒத்துள்ளது; அதன்மீது உதிர்ந்து கிடக்கும் வேங்கைப்; பூக்கள் அந்தக் கூந்தலில் சூடிய தங்க நகைபோல ஜொலிக்கின்றன !
மையற - விளங்கிய, துவர்மண லது ; அது
ஐதாக நெறித்தன்ன அறல்அவிர் நீள்ஐம்பால்
அணிநகை இடையிட்ட ஈகையாம் கண்ணிபோல்,
பிணிநெகிழ் அலர் வேங்கை விரித்த பூ நெறிகொளத்
துணிநீரால் தூமதி நாளால் அணி பெற ..."
இதற்கு பொருள் ; நீர் ஓடி ஓய்ந்த ஓடையில் படிந்திருக்கும் கருமணல் அவள் கூந்தலை ஒத்துள்ளது; அதன்மீது உதிர்ந்து கிடக்கும் வேங்கைப்; பூக்கள் அந்தக் கூந்தலில் சூடிய தங்க நகைபோல ஜொலிக்கின்றன !
இந்த பாடலைப் பாடியவர் பெருங்கடுங்கோ ; பாலைக்கலி பாடல்களைப் பாடியவர்.
வேங்கை மரம் புத்திசாலி மரம்; ஈரமில்லா கோடையில் இலைகளை உதிர்த்துவிடும்; ஆண்டு முழுவதும் தலை நிறைய தழையை வைத்துக் கொண்டு தண்ணீருக்காக தடுமாறாத மரம்; மழை வந்தால் மட்டுமே, மறுபடியும் தழை பற்றி யோசிக்கும் !
வனங்களில் வசிக்கும் மான்களுக்கும், மாடுகளுக்கும், வேங்கை மரத்தழை, வாணியம்பாடி பிரியாணி மாதிரி.
இன்றைக்கு நாட்டில் வசிக்கும் 40 சதவீத மக்களுக்கு, வேங்கை மரக்குவளை
அவசியம் ஆகிவிட்டது; காரணம் தினமும் வேங்கை மரக்குவளையில் ஒரு குவளை நீர்
அருந்தி வந்தால், சர்க்கரை நோய் பணால்.
இலைகள், கட்டிகள், புண்கள் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். சீதக்கழிச்சல் , சிவந்த சிறுநீர் போக்கு, பல்வலி அத்தனைக்கும் கைகண்ட மருந்து வேங்கை மரப்பட்டை. குருதிப்போக்கு, இருமல், வெள்ளைப்படுதல் அத்தனைக்கும் அருமையான மருந்து கினோ பிசின்.
புஞ்சையில் நடலாம்; நஞ்சையில் நடலாம்; ஓடைக்கரை, குளக்கரை, ஆற்றங்கரை
அத்தனையிலும் நடலாம் கடற்கரை தவிர; மணல் மட்டும் வேங்கைக்கு ஆகாது.
விதைகளை விதைக்கலாம்; நாற்றுக்களை மற்றும் வேர்க் குச்சிகளையும் நடலாம்.வேங்கை நெடுநெடுவென உயர்ந்தும் வளரும்; குறுக்கு பருத்தும் வளரும் ரெட்டை நாடி மரம்.
பெரு நகரங்களில் நட்டால் மாசு நீக்கும்; தூசு நீக்கும்; சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்கக் கொடுக்கும்; கனத்த அளவு, கரியமில வாயுவை அமுக்கிப் பிடிக்கும்; சுற்றுச்சூழலை சுத்திகரிக்கும் மரம்; தேக்கைப் போல ஏக்கர் கணக்கில் நட்டுப் பயிரிட ஏற்;ற மரம்.
பூமி ஞானசூரியன்.
1 comment:
Good job
Post a Comment