வன்னி மரம்
பாலைவன மக்களின்
வாழ்வாதாரம்
VANNI LIVELIHOOD
TREE OF
DESERT PEOPLE
தாவரவியல் பெயர்; புரசாபிஸ் சினரேரியா (PROSOPIS CINERARIA)
தாவரக் குடும்பம்: ஃபேபேசியே (FABACEAE)
பொதுப் பெயர்: லூன் ட்ரீ (LOON TREE)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உலகிலேயே 363 பேர் உயிர் தந்து காப்பாற்றிய மரம் இந்த வன்னிமரம். அஞ்சல்தலை வெளியிட்டு பெருமைப் படுத்தப்பட்ட வன்னி மரம்(1988 ல்)
ராவணனுடன் போர்புரியச் சென்றபோது, ராமன் தொட்டு வணங்கி ஆசிபெற்று சென்ற மரம் வன்னி மரம்.
மகாபாரதத்தில், பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தில், தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த மரப்பொந்து, வன்னி மரத்திற்;கு சொந்தமானது. மஹாபாரதத்தில் இதன் பெயர் 'ஷாமி விருட்சம்".
இப்படி ஒரு நம்பிக்கை உண்டு; அரச மரத்தை விட பிள்ளை பாக்கியத்திற்கு, மகத்துவமானது வன்னி மரம்.
ராஜா ராணி காலத்தில், அரச குடும்பத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது; போருக்கு செல்லும் அரசர்கள் தங்கள் வாளை அடிமரத்தில் வைத்து வணங்கிச் சென்றால், ஆத வெற்றியை உறுதிப்படுத்தும்..!
இது தமிழகத்தின் நம்பிக்கை; பிள்ளையார் சிலை வைக்க வேண்டுமென்றால், முன்னதாக அங்கு நட வேண்டியது வன்னி மரம்; வன்னி மரத்தடி பிள்ளையார் வாரித் தருவதில் வள்ளல்!
தமிழகத்தின் கோர்ட்டுக் கூண்டில் ஏற்றப்பட்ட சீமைக் கருவைக்கு ஒன்று விட்ட சித்தப்பா வன்னி மரம்; சீமைக் கருவைக்கு தாவரவியல் பெயர் புரொசாபிஸ் ஜூலிஃபுளோரா வன்னிமரத்துக்கு புரசாபிஸ் சினரேரியா.
ராஜஸ்தான் பாலைவனங்களில், பசுமைமாறாமல் இருக்கும் ஒரே மரம்; ஆடுகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தீவனம் தரும் மரம்; மனிதர்களுக்கு ரொட்டி சுட்டு சாப்பிட மாவு தரும் மரம் இது.
பாலைவனத்தில் வசிக்கும் மக்கள் வசிக்கத் தோதான சோலைவனமாவது வன்னி மரத்தோப்புகள்தான்.
“வன்னிமர கொட்டைமாவு, தட்;டுப்பாடு என்றால் கூட, கவலை இல்லை; அதன் பட்டைகளே போதும்; பஞ்சக் கால சாப்பாடு அதுதானே” என்கிறார்கள் ராஜஸ்தான் மாநில மக்கள். பட்டைகளையம் உலர்த்தி மாவாக்கி பணியாரம் சுடலாம்;;.
கட்டிடம் கட்ட மரம் வேண்டுமா ..?
விறகு வேண்டுமா ..?
தேரி (மணல்) நிலத்தை சீராக்க வேண்டுமா ..?
வன்னி மரத்தை நடுங்கள்; அல்லது நாடுங்;கள்; அல்லது தேடுங்கள் ..!
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு அற்புதமான மருந்து இது; வன்னிப் பூக்களை இடித்து, சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுங்கள்; கருச்சிதைவு என்பது கனவில் கூட நேராது !
தரிசாக கிடக்கும் நிலங்களில் எல்லாம், நடவு செய்ய, பரிசாக கிடைத்த நம்மஊர் மரம் வன்னி; மேட் இன் இண்டியா"
இந்த வகை மண்ணில் மட்டும்தான் வளருவேன் என்று அடம் பிடிக்காது; நட்ட இடத்தில் வளரும்; ஆனாலும் மணல் பூமிதான் இதற்கு சொர்க்க பூமி !
சிறு முள் உடைய மரம் இது; ஓங்கி வளராது; சுமார் 30 அடி உயரத்திலேயே 30 கிளைவிட்டு வளரும்; அதனால் விஸ்தாரமான இடங்களில் நடலாம்; கோவில்களில் நட்டு வளர்த்தால், பிள்ளையாரின் முழுக்கண் கடாட்சமும் கண்டிப்பாய் சித்தி ஆகும் !
தொழிற்சாலைகள் வைத்திருப்போர் வன்னியை நட்டால் புண்ணியம் கிடைக்கும்; புகையை வடிகட்டும்; இதர தீ வளிகளின் தீநாக்கு (பசுமை இல்ல வாயுக்கள்) நம்மைத் தீண்டாமல் பாதுகாக்கும் !
கால்நடை வளர்க்க தீவனம் இல்லை என கவலைப் படுவோர் கவனியுங்கள்; வன்னியை வைத்து தீவன வங்கியை நிலம் இருக்கும் அத்தனை கிராமத்திலும் உருவாக்கலாம். தீவன வங்கி என்றால் தீவனத் தோப்பு .
புதற்காடுகளாக நலிந்து மெலிந்து போன காடுகளை மீட்டெடுக்க கண்கண்ட மரம் இது; அற்புதமான மரம் மட்டுமல்ல இது; கிடைப்பதற்கு அரிய வரம் இது!
-பூமி ஞானசூரியன், செல்பேசி:+918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
TO READ FURTHER MORE
1.
பாட்டில் மரம் – ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND – Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
2.
மங்கிபஸ்சில் - தென் அமெரிக்காவின் அதிசய
மரம் - MONKEY PUZZLE -
TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
3.
டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான
அழகுமரம் - TRAVELLER’S PALM
- IS A DIFFERENTLY BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020
/ https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
4.
செக்கோயா உலகின்
உயரமான மரம் - KING SEQUOIA WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020
/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
5.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE PET TREE OF ROOSEVELT - Date of Posting:
08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
6.
மரூலா மரம் - ஆப்ரிக்காவின் சிறுதொழில் மரம் - MARULA - ENTREPRENEUR FRIENDLY AFRICAN TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
7.
பேவோபாப் - கல்லறையாகக்கூட பயன்பட்ட மரம் BAO BAB - ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019
/ https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
8.
டிராகன் பிளட் ட்ரீ - சாக்ரடிஸ் பயன்படுத்திய மருத்துவ மரம் - DRAGON BLOOD RARE HERB USED BY
SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
9.
கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு
பாத்திரம் தரும் மரம் CALABASH - BLESS BOWELS TO SAINTS - Date of Posting:
29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
10.
முருங்கை - பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம் MURUNGAI - GOOD FOR MAL- NUTRITIONED BABIES - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
11.
வேப்ப மரம் கிராமத்து
மருந்து கடை - VEPPA MARAM
- VILLAGE PHARMACY OF THE
WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
12.
பாலைவன மக்களின் வாழ்வாதாரம் - VANNI
LIVELIHOOD TREE OF DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017
- https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
13.
அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம் SENCHANTHANAM ONLY CAN BLOCK
ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html
No comments:
Post a Comment