Sunday, July 23, 2017

தமிழ்நாட்டின் நீர் இருப்பும் நீர் தேவையும் - TAMILNADU WATER REQUIREMENT

                                                   

 தமிழ்நாட்டின்   நீர் இருப்பும் நீர் தேவையும் 


TAMILNADU

WATER REQUIREMENT AND


WATER POTENTIAL 



தமிழ்நாட்டின் மொத்த பூகோளப்பரப்பு    1, 30, 058.  சதுர கி.மீ.  இதன் கிழக்கு  திசையில்  வங்காள விரிகுடாக்கடலும், மேற்கு திசையில், கர்னாடகா மற்றும்  ஆந்திரப் பிரதேச  மாநிலங்களும்,  தென்திசையில்  இந்து  மகாக்கடலும்   உள்ளது. 

தமிழ்நாட்டில்,  32 மாவட்டங்களும், 209  வார்டுகளும்,  385  வட்டாரங்களும்;, 10 மாநகராட்சிகளும்,  150   நகராட்சிகளும்,  559   நகர ஊராட்சிகளும்,  12,620  ஊராட்சிகளும், 93,699   குக்கிராமங்களும்  உள்ளன.

மாநிலத்தை நான்கு முக்கிய பகுதிகளாக பிரித்துள்ளார்கள். ஒன்று கடலோர  சமவெளிப்பகுதி (COASTAL PLAINS)  கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதி  (EASTERN GHATS), மத்திய சமவெளிப்பகுதி  (CENTRAL PLATEAU)  மற்றும்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி  (WESTERN GHATS),  பழவேற்காடு முதல்   கன்னியாகுமரி  வரை  இதன் கடற்கரை  998  கி.மீ.  நீளம் கொண்டது.

தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை   அளவு 950  மி.மீ.  இதில் தென் மேற்கு பருவ மழை மூலம், கிடைப்பது  32.96 %  வடகிழக்கு பருவமழை மூலம் கிடைப்பது  48.10 %  குளிர் பருவத்தில் கிடைக்கும் மழை  4.82  %  கோடைப்பருவமழை  14.12 %.
 
மேற்பரப்பு நீரின் அளவு  (SURFACE WATER POTENTIAL)  தமிழ்நாட்டின் ஆற்றுப்படுகைகளின் மூலம்  கிடைக்கும் மொத்த  நீரின் அளவு  24,120 .  மில்லியன்  கியூபிக்  மீட்டர். (M C M) அல்லது  85,000  மில்லியன் கியூபிக்  பீட்  (MCF).
 
39,000. ஏரிகள்  மூலம் 347  டி.எம்.சி. நீரும், 79 நீர்த் தேக்கங்கள்  மூலம்   243  டி.எம்.சி.  யும், வெளி மாநிலங்களிலிருந்து  கிடைக்கும்  261  டி.எம்.சி.யும்,  இதர ஆதாரங்களின்  மூலம்   2  டி.எம்.சி. யும்  தண்ணீர்  கிடைக்கிறது.

கடலில் கலந்து வீணாகும் நீர் தமிழ்நாட்டின்  17  ஆற்றுப் படுகையிலிருந்து ,பயன்படுத்தியது போக  வீணாகப் போகும் நீரின்  அளவு  177.12 டி. எம் . சி.

தமிழ்நாட்டின் 185  ஒன்றியங்களில்,  நிலத்தடி நீரைப் பொருத்தவரை,  பாதுகாப்பானவை என்பது,  142  மட் டுமே.   70  சதவீதத்திற்கும்,  குறைவான நிலத்தடிநீரை  செலவு செய்பவை என்று பொருள்.  ஆக பாதுகாப்;பான ஒன்றியங்களின்  சதவீதம்  37.66  மட்டுமே.

வரவு எட்டணா   செலவு  பத்தணா  என,  99  சதத்திற்கும்  அதிகமான தண்ணீரை செலவு செய்;;;;து,  ஆபத்தான  நிலையில் இருப்பவை  36.88  சதவீத ஒன்றியங்கள்.   அதாவது 142 ஒன்றியங்கள்.

மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பவை  8.57  சதவீதம்.  அதாவது 33  ஒன்றியங்கள். 

மிதமான நெருக்கடியில் இருப்பவை   14.8  சதவீதம்;  57  ஒன்றியங்கள்.
நிலத்தடியில்    உப்பு நீராக உள்ளவை   2.07  சதவீதம். அதாவது 8  ஒன்றியங்கள்.

தமிழ்நாட்டின் மொத்த  நிலப்பரப்பில்,  46  சதவீத நிலப்பரப்பில்  மானாவாரி  விவசாயம் நடைபெறுகிறது.  மீதமுள்ள 54 சதவீத நிலங்களில்  இறவை  சாகுபடி  செய்யப்படுகிறது.

தமிழ்நாடு  அரசின்  இன்ஸ்டியூட்  ஆப்  வாட்டர்  ஸ்டடிஸ்  என்ற அமைப்பு,  தமிழ்நாட்டின் நீர்த்தேவை பற்றிய  ஆய்வினை  செய்தது.  அந்த ஆய்வுப்படி  ஒரு ஆண்டின்  தேவை   1,894-80   டி.எம்.சி.  தண்ணீர்  என கண்டுபிடித்துள்ளது. 
இதில் குடிநீர்த் தேவை  51.40  டி.எம்;.சி.,  பாசனத்தேவை   1,766 டி.எம்.சி ; தொழிலகங்களின்   தேவை  54.90  டி.எம்.சி., மின்சார உற்பத்தி மாதிரி  பவர் ஜெனரேஷனுக்கு  தேவைப்படும் நீர்   4.20  டி.எம்.சி.,   கால்நடை  வளர்ப்புக்கு  தேவை  18.30 .   டி.எம்.சி.,   ஆக மொத்த  தேவை  1894 . 80   டி.எம்.சி.

பூமி ஞானசூரியன், செல்பேசி; +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com


                                           

       



No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...