இரு ஆறுகளின் கதை
பூமி ஞானசூரியன், போன் : - 8526195370
பல ஆண்டுகளுக்கு முன்னால்பழங்குடிமக்கள்; வசிக்கும் கிராமத்திற்கு
போயிருந்தேன். நான் மதுரை வானொலியில்
பணியாற்றிய சமயம் அது.
பழங்குடி மக்களின் வாழ்க்கை பற்றிய
வானொலி நிகழ்ச்சி தயாரிக்க போயிருந்தேன்.
ஒலிப்பதிவை முடித்துவிட்டு கண்ணகி
கோட்டம் போவதாக உத்தேசம்.
அந்த மலையின் உச்சியில்தான்
கண்ணகி கோட்டம் உள்ளது. அது
இருப்பது கேரள மாநில எல்லையில்,
மலையின் அந்தப் பக்கம் கேரளா.
இந்தப் பக்கம் தமிழ்நாடு.
ஒருவழியாய் ஒலிப்பதிவு
முடிந்ததுவிட்டு கண்ணகி
கோட்டம் கிளம்பினோம்.
அப்போது நாங்கள் கேரள
மாநிலத்தின் வனப் பகுதியில்,
நடந்துக் கொண்டிருந்தோம்.
பழங்குடி இனச்சிறுவன் ஒருவன்தான்;;,
எங்களுக்கு வழி காட்டினான்.
நாங்கள் ஐந்தாறுபேர் பேர்
அந்தக் குழுவில் இருந்தோம்.
வழி நெடுக கதைமாதிரி அவர்களைப்பற்றி,
அந்த மலையைப்பற்றி ,
மலையில்இருக்கும் காட்டைப்பற்றி,
மரங்களைப்பற்றி, அங்கு நடமாடும்
செந்நாய்கள் பற்றி, கரடிகள் பற்றியெல்லாம்
சொல்லிக்கொண்டே வந்தான் அந்த சிறுவன்.
“அங்கப்பாருங்க போன வாரம்..
ஒரு காட்டுப்பன்றி இவரை கொம்பால
குத்திடுச்சி.. தொடை எலும்பு முறிஞ்சி
போச்சி.. ஆஸ்பத்திரியிலருந்து
நேற்றுதான் வந்தார்.. எழுந்து நடக்க
ஆறுமாசம் ஆகுமாம்.... இங்க தெனமும்
காட்டுபன்றிய பாக்கலாம்..
சூதானமா இருக்கணும்”
ஒரு காட்டுப்பன்றி இவரை கொம்பால
குத்திடுச்சி.. தொடை எலும்பு முறிஞ்சி
போச்சி.. ஆஸ்பத்திரியிலருந்து
நேற்றுதான் வந்தார்.. எழுந்து நடக்க
ஆறுமாசம் ஆகுமாம்.... இங்க தெனமும்
காட்டுபன்றிய பாக்கலாம்..
சூதானமா இருக்கணும்”
சூதானமா இருக்கணும்னா ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
பையன் காட்டிய திசையில்
ஒருத்தர் கட்டுப்பேட்ட காலுடன்
உட்கார்ந்திருந்தார். ஆஸ்பத்திரி
மாவுக்கட்டு போட்டிருந்தார்.
அவர் அருகே போனதும், நின்று
அவரைப்பார்த்தோம். கேட்காமல்
அவரே சொன்னார் . “பன்னி தந்தத்தால
குத்திடுத்து சார். எங்க பொழப்பு
இப்படிதான் சார்” என்று சொல்லிவிட்டு
எங்களையும் எச்சரித்தார்.
“ பாத்து போங்க. காட்டுப்பண்ணி
நெறைய கெடக்கு..”
அவரைத்தாண்டி மலைக்காட்டுக்குள்
இறங்கி நடந்தோம். வாய் ஓயாமல்
பேசிக்கொண்டே வந்த சிறுவனை
எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது.
தம்பி; உன்னோடபேரு ? அவன்
நிறுத்தி நிதானமாக சொன்னான்.
ஜான் பென்னி குயிக்; என்று சொன்னான்.
அந்த பெயரைக் கெட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெளிஉ;லகத்தின் வாசனைபடாத பகுதி . உத்தமபாளையம், கம்பம், கூடலூர் தாண்டி, குமுளி போகும் வழியில் உள்ள மலைப்பகுதி அது அந்த கிராமத்துப்பையன் அநேகமாய் ஒரு 10 வயசுப்பையன்.
“யாருடா இந்தப்பேரை உனக்கு வச்சாங்க ?..” என்று நான்கேட்டதும், பளிச்சென்று என்னிடம் அவன் ஒரு கேள்வி; கேட்டான்;. “அவர்தான் சார் முல்லைப் பெரியார் அணையை கட்டியவர் சார் . உங்களுக்கு தெரியாதா ?..”
என்னோடுவந்த இன்னொரு ஊர்க்காரரிடம் அதுபற்றி விசாரித்தேன் ஜான்பென்னி குயிக் பற்றி விளாவாரியாக எடுத்துச் சொன்னார்.
இன்றைக்கு கேரளாவிற்கும்; தமிழ்நாட்டிற்கும், பிரச்சனையான, முல்லைப் பெரியார் அணைக்கட்டை ; கட்டியவர்; ஜான்பென்னி குயிக். இவர் ஒரு வெள்ளைக்கார என்ஜினியர்.
தென்மாவட்டமக்கள் இவரை, இங்கு தெய்வமாக வணங்கு கிறார்கள். மதுரை தேனி மாவட்ட கிராமங்களில், ஆண்டுதோறும் இவருக்கு பொங்கல்வைத்து வழிபடுகிறார்கள்.
நிறைய வீடுகளில் அவருடைய புகைப்படத்தை மாட்டி வைத்திருப்பார்கள். ஒன்றிரண்டு சிமைண்ட் சிலைகளைக்கூட இங்கு நான் பார்த்திருக்கிறேன். பென்னிகுயிக் பெயர்வைத்த ஒரு டீக்கடையில் நான் தேநீர் கூட குடித்தேன். அன்றிலிருந்து நான் பென்னி குயிக் விசிறியாகி விட்டேன்.
கிழக்கிந்திய கம்பெனி நம்மை ஆட்சி செய்த சமயம், இவர் பொறியாளராக இருந்தார். எம்.எல்.சி. ஆகக்கூட இருந்துள்ளார்;. நல்லவேளை அந்தப் பதவி அவருக்கு எவ்விதமான கெடுதலும் செய்யவில்லை.
அப்போது தென் மாவட்டங்களான இன்றைய மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் ஆகியவை, கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு வந்தன. அதனைப் பார்த்து மனம் பொறாத பென்னி குயிக் முல்லைப் பெரியார் அணையை தன் சொந்த பணத்தில் கட்டினார்.
அந்த மலையின் வீசும் புயல், மழை, வெள்ளம், விஷப்பூச்சிகள், பாம்புகள், யானைகளின் அழிச்சாட்டியம், காட்டுப்பன்றிகளின் அட்டகாசங்கள், அத்தனையும் சகித்துக் கொண்டார். மூன்று ஆண்டுகள், முயன்று அணையைக்கட்டி முடித்தார்.
அணைக்கட்டி முடிந்தது, “ விடுவேனா பார்” எனறபடி அடுத்து வந்த வெள்ளம் அணையை துப்புறவாக துடைத்து எறிந்தது. அணை இருந்த இடம், மாசு மரு இன்றி சுத்தமாக இருந்தது.
பென்னி குயிக்கின் மனசும், அணையைப்போல, நொருங்கிப்போனது. அரசிடம் நிதி மறுபடியும் கை கூப்பினார். “ சாரி பென்னி குயிக் . வெரி சாரி..” என்றுசொல்லி கையை விரித்து விட்டார்கள்.
என்னசெய்வது என்று யோசித்தார். மனிதன் என்று பிறந்தால் அவன்தான் பெயரை நிலைக்கச்செய்யுமாறு ஏதாவது செய்ய வேண்டும். மின்னல் போன்ற ஓர் எண்ணம், மனதில் தோன்றியது துள்ளி எழுந்தார். தன் கனவை நனவாக்கப் புறப்பட்டார்.
தனது சொந்த நாடான இங்கிலாந்துக்குப் போனார். தனது வீடு ,வாசல், நிலம், புலம் அனைத்தையும் விற்று, காசாக்கினார். கையில் எடுத்துக் கொண்டு வந்து, முல்லைப் பெரியாறு அணையில் கொட்டினார். வேலைகள் தொடங்கின. தொடங்கின வேகத்தில், அதனைச் செய்து முடித்தார்.
சொந்த நாட்டில் அவருக்கு “இளிச்சவாயன்” என்ற பட்டம் தந்து பாராட்டினார்கள்.
இந்தியாவில் ஓடும் ஆறுகளில், பெரும்பாலானவை, கிழக்கில் ஓடி, வங்கக்கடலில் சங்கமம் ஆகும் ஆறுகள். முல்லைப் பெரியாறு மேற்குப் பக்கம் ஓடி, அரபிக்கடலில் தண்ணீரைக்கொட்டி ,உருப்படாத வேலையை செய்து கொண்டிருந்தது.
முல்லைப் பெரியாற்றில் அணைக்கட்டும்போது, அதிலிருந்து அதிகப்படியான தண்ணீரை, கேரள மாநிலத்தில் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை. அதனால் வீணாகப்போகும் நீரை தென் மாவட்டங்களுக்கு எப்படி திருப்புவது ? அதற்கு என்ன செய்ய வேண்டும் ? இந்தக் கேள்வி அவர் மண்டையை நெடு நாட்களாய், மாம்பழ வண்டாய் குடைந்துக் கொண்டே இருந்தது.
அப்படி தென் மாவட்டங்களுக்கு திருப்ப, மேற்கே ஓடும் நதிiயை, கிழக்கே திருப்பவேண்டும். இதெல்லாம் நடக்கற காரியமா ? உலகத்துல எங்க நடந்நிருக்கு ? விளையாட்டா இது ? என்று எல்லோரும் அவரை, கிறுக்கு என்று சொல்லி முதுகுக்குப் பின்னால் சிரித்தனர்.
ஆனால் அவர் நினைத்ததை முடித்துக் காட்டினார். 1895 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அணை எழும்பி நின்;;றதை அகம்மகிழ கண்ணாரக் கண்டார்.
பெரிய பெரிய டர்பன் குழாய்கள் வாயிலாக , மலைச்சரிவுகளை எல்லாம் கடந்து தண்ணீரைக் கொண்டுவந்து வைகை ஆற்றுடன் சேர்த்தார். பென்னிகுயிக் கொண்டுவந்த முல்லைப்பெரியார் தண்ணீர் ,தென் மாநில விவசாயிகளின் வீடுகளில் விளக்கேற்றி வைத்தது.
முல்லைப் பெரியாற்றை வைகையுடன் இணைத்ததனால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாத புரம், ஆகிய ஐந்து மாவட்டங்கள் நீர்வளம் பெற்றன. 2.23 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, பாசன வசதி அளித்தது. இந்த மாவட்டத்து மக்கள், தங்கள் மனதில் தங்கள் மாவட்டங்களில் ‘ பென்னி குயிக்' க்கு சிம்மாசனமிட்டு அமர வைத்தனர்.
சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி பசை (SURKY PASTE) இவற்றைப் பயன்படுத்தியே இந்த அணையைக் கட்டி முடித்தார்.
இந்த உலகில் ஒரே ஒரு முறைதான் வாழப்போகிறேன். அதனால் குறிப்பிடும்படியான நல்ல காரியத்தை செய்ய விரும்புகிறேன் என்று அடிக்கடிசொல்லும் அவர் வார்த்தையை, சொல்லில் மட்டுமல்ல ,செயலிலும் அதனை செய்துக் காட்டினார். தேனீ மாவட்;டத்தில் வீரபாண்டி பாலர் பட்டி, குச்சனூர், குழியானூர் போன்ற பல கிராமங்களில், பொங்கல் என்றால் அது ஜான பென்னி குயிக் பொங்கல்தான்.
நான் வேற்று நாட்டுக்காரன், இந்த ஜனங்கள் எல்லாம் என் நாட்டு மக்களல்ல. இவர்கள் எனக்கு சொந்தமல்ல. இவர்களுக்காக நான் என் வியர்வை சிந்த வேண்டும் ? இதனால் எனக்கென்ன லாபம் ? என்று நினைக்கவில்லை அவர்.
பென்னியின் ஆளுயர வெண்கலச்சிலை மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை அலங்கரிக்கிறது. மேலும் தனது எல்லையில் நான்கு மார்பு வரை சிலைகளை நிறுவியுள்ளது. அதில் ஒன்று பெரியார் அணைக்கட்டில் அமைக்கப்பட்டுள்ளது இவைதவிர தேக்கடி மற்றும் உத்தம பாளையத்திலும், இரண்டு சிலைகள் உள்ளன.
தேனீ புதிய பஸ் நிலையத்திற்கு, அவர் பெயரை சூட்டியுள்ளனர். நிறைய விவசாயிகள்அவர்கள் குழந்தைகளுக்கு ‘ஜான்பென்னி குயிக் “என பெயரிட்டுள்ளனர்.
தேனீ மதுரை மாவட்டத்தில் சில விவசாயிகள் குடும்பங்களில் பென்னிகுயிக் ன் படத்தை மாட்டி வெற்றிலை , பாக்கு . பூ , பழம், வைத்து வத்தியும் சூடமும் காட்டி வணங்குகிறார்கள்.
No comments:
Post a Comment