சிங்காநல்லூர் ஏரி
கோவை மாவட்டத்தின்
முக்கிய நீர் ஆதாரம்
SINGANALLUR
LAKE A
PRIMARY
WATER-BODY OF
COIMBATORE
DISTRICT
சிங்காநல்லூர் ஏரி கோவை மாவட்டத்திலுள்ள பிரதான ஏரிகளுள் ஒன்று. இதன் பரப்பளவு 1.153 சதுர கி.மீ. ஏரியின் சராசரி ஆழம் 4.2 மீட்டர்.
இந்த ஏரிக்கு தண்ணீர் உபயம் தருவது நொய்யல் ஆறு. இதனுடன் சங்கனூரிலிருந்து வடியும் மிகையான நீரும், கழிவு நீரும் கூட கலக்கிறது.
வாலாங்குளம் ஏரி நிரம்பினால், அதன் அதிகப்படியான தண்ணீர் சிங்காநல்லூர் ஏரியை அடையும் வழி செய்யப்பட்டது. இதற்காக 2010 ஆம் ஆண்டு பிரத்தியோகமாக குழாய்கள் அமைக்கப் பட்டன. இதன் நீர் அதிகப்படியான காரத்தன்மை (ALKALINITY) உடையது என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது . ஒரு லிட்டர் நீரில் கலந்துள்ள வுப்பின் அளவு 386.61 மில்லி கிராம்
.
உள்ளுர் மீனவர்கள் இந்த ஏரியில் மீன் பிடிக்கிறார்கள். ஹாபியாகவும் சிலர் தூண்டில் போடுகிறார்கள். ஆனால் மீன்கள் பாதிக்கப்படும் அளவிற்கு, ஏரித்தண்ணீர் மாசடைந்துள்ளது. தண்ணீரில் உலோகங்களும் (METALS) நோய்பரப்பும் கிருமிகளும் கலந்துள்ளன .
உள்ளுர் மீனவர்கள் இந்த ஏரியில் மீன் பிடிக்கிறார்கள். ஹாபியாகவும் சிலர் தூண்டில் போடுகிறார்கள். ஆனால் மீன்கள் பாதிக்கப்படும் அளவிற்கு, ஏரித்தண்ணீர் மாசடைந்துள்ளது. தண்ணீரில் உலோகங்களும் (METALS) நோய்பரப்பும் கிருமிகளும் கலந்துள்ளன .
நீர் வழித் தடங்களில் தடங்கலை உருவாக்கும், நீலப்பேய் என்பது ஒருவகையான செடி. ஆகாயத்தாமரை என்பது அதன் உள்ளுர் பெயர். வாட்டர் ஹியாசின்த் (WATER HYACINTH) என்பது அதன் ஆங்கிலப் பெயர்.
ஒருமுறை இந்த நீலப்பேய் ஏரி அல்லது குளங்களில் நுழைந்து விட்டால், அதோ கதிதான். குறைவாக இருக்கும் போது சுலபமாக நீக்கி விடலாம். பரவி விட்டால், பிறகு அதனை ஒழித்துக்கட்டுவது அவ்லளவு சுலபமல்ல. 2006 ஆம் ஆண்டு, சிங்காநல்லூர் ஏரியை நீலப் பேய் பிடித்துக் கொண்டது. 2015 ஆம் ஆண்டு ஒருவழியாய் அதனை அப்புறப்படுத்திவிட்டார்கள்.
இப்போது சிங்காநல்லூர் ஏரி சுற்றுலாத் தலமாக மாறுவதற்கு தயாராகிவிட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சி அதற்கான ஏற்பாடுகளைத் தொடர்கிறது.
சிங்காநல்லூர் ஏரியில் 2005 ஆம் ஆண்டு ஒரு ‘போட் ஹவுஸ் வெள்ளோட்டம் விடப்பட்டது. ஆனாலும் மேலாண்மையை சரிவர செய்ய முடியாததால், 2009 ஆம் ஆண்டு அதை இழுத்து மூடினர்.
மீண்டும் 2014 ல் கோயம்புத்தூர் கார்ப்ரேஷன் தனது முயற்சியை கைவிடாத வேதாளம் போல ஏரியை தூர் எடுத்து சுத்தப் படுத்தியது. மீண்டும் போட் ஹவுஸ் முளைத்தது. சுற்றுலாப் பயணிகள் ஈக்களாக மொய்க்க ஆரம்பித்தனர். போதுமான படகுகளை ஏற்பாடு செய்யுங்கள் என கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இன்னும் கூட நமக்கு சுற்றுலாத் தலங்களை பராமரிப்பதில் கூடுதலான கவனம் வேண்டும். முக்கியமாக அவற்றை சுத்தமாக சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். வந்து செல்லும் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற விடுதிகள் மற்றும் உணவகங்கள் மற்றும் எளிமையாக இருந்தாலும் அவை அவை சுகாதாரமானவைகளாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமானவை கழிப்பறைகள். நூற்றுக்கு நூறு சதவீதம் திறந்தவெளி மலங்கழிப்பை தடை செய்ய வேண்டும். சுற்றுலாப்பயணிகள் கொண்டு வரும், வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகளை ஏற்பாடு செய்துத்தர வேண்டும்.
மேலை நாடுகளிலெல்லாம் சுற்றுலாவை பணங் கறக்கும் காமதேனுவாக மாற்றிவிட்டார்கள். அதைத்தான் நாங்கள் செய்யத் தொடங்கி விட்டோம் என்கிறார்கள் கோயம்புத்தூர் காரர்கள்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
1 comment:
நன்றி! மிகவும் அருமையான பதிவு, சிங்காநல்லூர் தொகுதி சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
Singai g ramachandran
Singanallur Constituency
Singanallur
Post a Comment