Tuesday, July 25, 2017

SEMBARAMPAKKAM LAKE BIG ONE OF PWD - செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் வடிகால் வாரியத்தின் பெரியஏரி -

செம்பரம்பாக்கம்   ஏரி 


செம்பரம்பாக்கம்   ஏரி
குடிநீர் வடிகால் 
வாரியத்தின்   
பெரியஏரி  

SEMBARAMPAKKAM LAKE

BIG ONE OF PWD


2015 ஆம் ஆண்டு  செம்பரம்பாக்கம் ஏரி  சென்னை மக்களை கதிகலங்க வைத்தது. அப்போது பெய்த பேய் மழையில்,  சென்னை பெருநகரமே  தண்ணீரில்  மிதந்தது.  செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது.  தண்ணீரும் திறந்து விடப்பட்டது,  பெய்யும் மழையினால்,  நீர்   வரத்து   கூடுதலானது.  எப்போதும்   உடையலாம்  சென்னை  மூழ்கடிக்கப்படலாம் என்ற நிலை  ஏற்பட்டது.

செம்பரம்பக்கம் ஏரி உடைந்தால்  என்னஆகும்  ?  ஃபேஸ்புக்,; வாட்ஸ்அப்,  என பலவிதமாக செய்திகள்; பறந்தன.  சிலர்  உடையும்  என்றார்கள்.   சிலர்  உடையாது  என்றார்;கள்.  கரையோரத்து நகர்ப்புறம்  ஜாக்கிரதை என்றது  அரசு.  

காஞ்சிபுரம் மாவட்ட  ஏரி  செம்பரம்பாக்கம் ஏரி.  சென்னையிலிருந்து  40 கி.மீ.  தொலைவில்   உள்ளது.   அடையாறும்  இங்கிருந்துதான்  உற்பத்தியாகிறது.   செம்பரம்பாக்கத்தின   உபரியான நீர்  அடையாற்றின் மூலமாக பாயும்.  மணப்பாக்கம், திருநீர்மலை,  நந்தம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல்,  சைதாப்பேட்டை,  கோட்டூர், அடையாறு அனைத்து பகுதிவாழ்  மக்களும்,  வயிற்றில் நெருப்பாக  பயத்தைக்   கட்டிக்  கொண்டிருந்தார்கள்.
  
செம்பரம்பக்கம்  ஏரி   குடிநீர் வடிகால் வாரியத்தின்  கட்டுப்பாட்டில உ;ள்ள  ஏரிகளில்,  மிகவும் பெரியது.  இதன்முழு கொள்ளளவு  3645  மில்லியன் கனஅடி.  

அப்போது  டிசம்பர் மாதம்.  2015  முதல்தேதி மட்டும் மழை  670மி.மீ.  பெய்தது. ஏராளமான தண்ணீர் நுங்கும்  நுரையுமாக பாய்ந்தது. ஏரி சுலபமரக  அபாயகரமான எல்லையைத் தொட்டது.  “இப்பவும்   ஷட்டரை திறக்கலேன்னா , ஏரி உடைஞ்சிடும்.  அப்புறம் எதுவும் செய்யமுடியாது”  என்று சொல்லியபடி ஷட்டரை திறந்து விட்டனர். சென்னையை   மரண பயத்தில் ஆழ்த்தியபடி அடையாற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்தது.  

அதேசமயம்  தாம்பரம் பகுதியில்,  அதைவிட  அதிகமழை பெய்து,  அச்;சுறுத்திக்  கொண்டிருந்தது அத்தனை தண்ணீரும் புரண்டு அடையாற்றில்புகுந்தது.  அது  ஏற்கெனவே  அடையாற்றில் ஓடுவதைப்போல  நான்குமடங்கு நீர் .  அடையாற்றுக்கு மூச்சு முட்டியது. 

“அடையாற்றின் கரையோரத்தில்  வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக  தங்கள் வீடுகளை  விடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு  செல்லும் படியாக கேட்டுக்கொள்கிறோம்.”  இப்படி  ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை தொலைக்காட்சி செய்திகள் வயிற்றில்  புளியை  கரைத்துக் கொண்டிருந்தன. 
மின் வெட்டு காரணமாக கதவணைகளை  இயக்கமுடியாமல்கூட போனது.  அதனால் அணைஉடையும் வாய்ப;பு  அதிகம்.   இப்படி  ஒரு வதந்தியும்,  வெள்ளத்தை விட வேகமாக மக்களிடையே பாய்ந்து  கொண்டிருந்தன.  ஏராளமான செய்திகளும்,  புகைப்படங்களும்,  வாட்ஸ்ஆப்’ல்  நிரம்;பி  வழிந்துக் கொண்டிருந்தன.   

செம்பரம்பக்கம்  ஏரியுடன், சென்னை மாவட்டம்,  திருவள்ளுர்  மாவட்டம், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின்  ஆறு மற்றும்  ஏரிகள்  அனைத்தும்  இணைக்கப் பட்டுள்ளன.  இவை தமிழர்களின் நீர் மேளாண்மை  அறிவதற்கான அத்தாட்சி. பாலாறு, கூவம்,  ஆரணி, மற்றும் கொற்றலை   ஆறுகளும்   திருவள்ளுர்,  காஞ்சிபுரம்,  மாவட்டங்;களின்  3,700    ஏரிகளும்  வலைப்பின்னலாய்   இணைக்கப்பட்டுள்ளன.  காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளின்; நீர் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஏரிகளின்மூலம், இணைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர்  மாவட்ட ஏரிகள்   நேமம் ஏரிவழியாகவும்  இணைக்கப்பட்டுள்ளது என எழுதுகிறார’ செம்பரம்பக்கம்  ஏரி வரலாறும் ,  தி.மு.க.   அ.தி.மு.க.  கட்சிகள் ஆட்சியும்,”  என்ற  தனது கட்டுரையில்  எழுத்தாளர்  கி நடராஜன்.
 
இந்த இணைப்புக்கள் உருப்படியாக உள்ளனவா என்பது  கேள்விக்குறி .ஆனால் ஆறுகள் இணைப்பு பற்றி  பேசி வரும் தருணத்தில் ஏரிகளை இணைப்புகளை சீர்படுத்துவது அவசியம்.  பழைய இணைப்புகளை  சீரமைக்க  வேண்டும். புதிய இணைப்புகளை    உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள மொத்த ஏரிகள் 39,202 என்று சொல்லுகிறது அரசாங்கம்.  இதில்  100 ஏக்கருக்கும்  அதிக பாசனம் அளிக்கும்  ஏரிகள் மட்டும் 18,789.  இவை பொதுப் பணித்துறை யின்   கட்டுப்பாட்டில்   உள்ளவை.   100 ஏக்கருக்கும்  குறைவான  ஆயக்க்ட்டை  உடையவை   20,413.   இவை அனைத்தும், ஊராட்சிகளின் கைகளில்  உள்ளன .இவை தவிர,   கிராமத்திற்கு கிராமம்  இருக்கும் கிராமக்குளங்கள்,  ஊருணிகள் கோயில் குளங்கள் என பல ஆயிரக் கணக்கில்;   உள்ளன.

திருவள்ளுர், காஞ்சிபுரம்,  ஆகிய  மாவட்டங்களில்; மட்டும் 3,700 ஏரிகள்  உள்ளன.

தமிழ்நாட்டின்  ஏரிகள்  குளங்கள் மூலமாக மட்டுமே நமக்கு கிடைக்கும்  நீரின் மொத்த  அளவு 340  டி.எம்;. சி.  தண்ணீர். ஒரு  டி.எம்;. சி.  100 கோடி  கன அடி  தண்ணீர்.  இது  தமிழ்நாட்டின்  அணைக்கட்டுக்கள்   மூலமாக  நமக்கு கிடைக்கும்  நீரின்  அளவைவிட  அதிகம். அணைக்கட்டுக்களின்     மூலம்;; கிடைக்கும்நீரின்   அளவு  243  டி.எம்;.சி. மட்டுமே.

இவற்றையெல்லாம்  கூட்டிக்கழித்துப்  பார்த்தால்  நாம் மிகவும்  கவனிக்க வேண்டியது   ஏரிகள்  இணைப்பு. அத்துடன் முக்கியமாக  நீரை கொணரும் வரத்துக் கால்வாய்கள்;  நீரை எடுத்துச்செல்லும்  போக்கு  கால்வாய்கள்;  இவை எல்லாம்  சீராக இருக்கும் என்று சொவ்ல முடியாது;  ஆக ஏரிகள் மேளாண்மை  என்பது  தூர் எடுத்தல், கரைகளை பலப்படுத்துதல்  ,ஆகியவற்றை  உள்ளடக்கியது. 

இவை எல்லாவற்றையும் விட    நீர் ஆதாரங்களை ஆக்கிரமிப்புக்களிலிருந்து  விடுவிப்பதுதான்   முக்கியமான காரியம்.  நீர்  தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும் ஆணி வேராக               இருப்பது   இந்த  ஆக்கிரமிப்புகள்தான்.

நீர் ஆதாரங்களை முழுமையாக  ஆக்கிரமிப்புக்களிலிருந்து  விடுவித்து  நீர்  மேலாண்மையை  செய்ய  அரசு மட்டும் போதாது.  சோழ மன்னர்களின்  காலத்தில் இருந்ததைப் போன்ற  ஏரி வாரியங்கள் வேண்டும்.  மக்களைக் கொண்டு  மக்களால் அமைக்கப்பட்டு  மக்களுக்காகவே  சேவை புரியும் மக்கள் அமைப்புக்கள் வேண்டும். நீர் வள ஆதாரங்கள்    மேளாண்மையில்  மக்களின் பங்களிப்பு இருந்தால் போதும்.  மக்களை ஒதுக்கிவிட்டு எத்தனை மந்திரம் போட்டாலும்,  ஒரு மாங்காயையும் அடிக்க  முடியாது  என்கிறார்கள்  நீரியல் வல்லுநர்கள்.  இதையெல்லாம் முறையாகச் செய்தால்,  நாம் அண்டை மாநிலங்களிடம்  தண்ணீருக்காக  மடிப்பிச்சை ஏந்தி நிற்க வேண்டாம்.  

சோழப் பேரரசில்  இருந்த  ஏரி வாரியங்களை மீண்டும்  ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கலாம்.  அதன்மூலமாக  நீர்  ஆதாரங்களை  மேளாண்மை செய்யலாம்.    நீர்  அறுவடை செய்யலாம்.    வீணாக ஓடி கடலைச்சேரும்,    நீருக்கு மூக்கணாங்கயிறு  போடலாம்.  போகிற போக்கில் சில ஆண்டுகளில்  நம்முடைய தண்ணீர்  பிச்சனைகளுக்கும்  முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

தனது நாட்டில் மூன்றில் ஒருபங்கு  பரப்பை பாலைவனமாகக்கொண்ட  இஸ்ரேல் தன்னுடைய தண்ணீர்  பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது.  நம்மால் முடியாதா ?  "எங்கக்கிட்ட இப்போ  தேவைக்;கு  அதிகமா  தண்ணீர் இருக்கு.  என்ன செய்யலாம்  என்று யோசிக்கிறோம்"  என்று பகரும்  இஸ்ரேலைப் பார்த்தால்,  பச்சை மிளகாயைக்   கிள்ளி  பச்சைப் புண்ணில்   பரக்கத்  தேய்ப்பது  மாதிரி,  இருக்கிறது .   என்ன சொல்கிறீர்கள்  ?  

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்; gsbahavan@gmail.com

 
                                       
   



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...