Wednesday, July 26, 2017

மேற்குத் தொடர்ச்சி மலை ஆறுகள் - RIVERS OF WESTERN GHATS




மேற்குத்  தொடர்ச்சி மலை   
ஆறுகள்

RIVERS OF

WESTERN GHATS

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com


இந்தியாவின்  நான்கு  நீர்வடிப்பகுதிகளுள்
ஒன்று  மேற்கு மலைத்தொடர்ச்சி  நீர்வடிப்பகுதி.

கோதாவரி, காவேரி,  கிருஷ்ணா,
தாமிரபரணி  மற்றும்  துங்கபத்திரை
ஆகிய ஐந்து  பிரதான நதிகள்
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து
உற்பத்தியாகின்றன. பருவ காலங்களில்
நீரோட்டம்  அதிகம் இருக்;கும் இந்த
அனைத்தும்  கிழக்கு சரிவில் ஓடி
வங்கக் கடலில்  கலக்கின்றன. 

தபதி நதிக்கு தெற்கிலும்,   குஜராத்
மற்றும்  மகாராஷ்ட்ரா  மாநிலங்களின்
இடைப்பட்ட எல்லையில் தொடங்குகிறது
மேற்கு தொடர்ச்சி  மலைத்தொடர்.  
இது மகாராஷ்ட்ராவில்  கோவா,
கர்னாடகா,  கேரளா  மற்றும் 
தமிழ்நாடு  வரை  தொடர்ந்து
கன்னியாகுமரியில்  முடிவடையும்.

இதன் மொத்த  நீள்ம்  1600  கி.மீ. 
இதன்  பரப்பளவு 1,60,000  ச.கி.மீ. 
இந்த தொடரின்  சராசரி  உயரம் 
1200 மீ. உலகின்  10  மித
வெப்பப் பகுதிகளுள்  ஒன்று. 7402
பூக்கும் தாவரங்களையும்,  1814
பூவா  தாவரங்களையும்,
139 பாலூட்டிகளையும், 600 வகை
பூச்சி  இனங்களையும்,    
290  நன்னீர் மீன் வகைகளையும்      
 உள்ளடக்கியது.

முக்கிய துணை நதிகளாவன
(TRIBUTORIES)   பத்ரா  (BHATHRA)
பவானி  (BHAVANI)  பீமா  (BHEEMA)
மலப்பிரபா  (MALAPRABA) கட்டப்பிரபா
(GHATAPRABA)    ஹேமாவதி  (ர்யஅயஎயவாi) 
மற்றும்   கபிணி (முயடிini) .
மேற்கு தொடர்ச்சி மலையை
நோக்கி  மேற்கு முகமாக ஓடும்
ஆறுகள், பெரியார் (PERIAR)
பாரத்புழா (BHARATHPUZHA) 
நேத்ராவதி  (NETHRAVATHY) 
ஷாராவதி  (SHARAVATHY ) மண்டோவி
(MANTOVI)   ஜூவாரி  (ZUVARI)
இவை அரபிக்கடலில்  நீரை
வடிக்கின்றன.  ஆழமான சரிவில்
பயணம்  செய்யும இந்த ஆறுகள்
மிக வேகமாக  ஓடும் ஆறுகளாக உள்ளன.

அணைக்கட்டுகள்:  மேற்கு மலைத்
தொடர்ச்சி ஆறுகளின்  குறுக்காக 
50 பெரிய  அணைகள்  கட்டப்பட்டுள்ளன.
இவற்றுள்  முக்கியமானவை
மஹாராஷ்ட்ராவின்  கொய்னா
KOYNA) கர்னாடகாவின்  லிங்கன்
மாக்கி  (LINKAN MAKI)மற்றும்
சிவசமுத்திரம்         (SIVASAMUTHRAM)
தமிழ்நாட்டின்  மேட்டூர் (METTUR),
பைக்காரா (PYKARAA),  மற்றும்
கேரளாவின்   பரம்பிக்குளம
(PARAMBIKULAM)  ஆகியன.

மேற்கு மலைத்தொடரின்   அழகுப்
பெட்டகங்களாக  நம்மை  மெய்சிவிர்க்க
வைக்கும்  நீர்வீழ்ச்சிகள்  பல.   வித்சாகர்
(VITHSAHAR) ஹொகேனக்கல் ( HOGENAKKAL), 
ஜோக் (JOK), குஞ்சிக்கல்  (KUNJIKKAL)
சிவசமுத்ரம்,                     உன்ச்சள்ளி
(UNCHALLI)  ஆகியன.

மேற்கு மலைத்தொடர் பகுதியில்
அமைக்கப்பட்டுள்ள   செயற்கையான
ஏரிகள்  (ARTIFICIAL LAKES) நான்கு.
அவை  34 எக்டர் பரப்புடைய
ஊட்டி ஏரி,  86 எக்டர் பரப்புடைய
 கொடைக்கானல்  ஏரி,  பேரி ஜம் ஏரி
(BERIJAM LAKE) பழனி
மலைப்பகுதியின்  பூக்கோட் ஏரி,
தேவகுளம் ஏரி 6 எக்டரிலும்,
2 எக்டர் பரப்பில்  உள்ள லட்சுமி
ஏரியும்  கேரளாவில் உள்ளன.

மேற்கு  மலைத்
தொடரில்  மழை


இடைவெளியே இல்லாமல் இணைந்திருக்கும் இந்த மலைத் தொடர்,  நீர்  சுமந்து வரும் மேகங்களை,  வேலியாக நின்று கடந்து செல்லாமல்  தடுத்து  விடுகின்றன.  இதனால்  காற்று வீசும் திசையிலேயே  (WIND WARD)  பெரும்பகுதியை உதிர்த்து  விடுகின்றன.  இதனால் இப்பகுதியின் மழை  300 மி.மீ முதல்  4,000  மி.மீ.  வரை பெய்கிறது.

சில சமயம் இது  900  மி.மீ.  ஐக்கூட எட்டிப் பிடிப்பதில்லை.  மலையின் அந்தப்புறம்  மழை மறைவுப் பிரதேசம்  துரதிஷ்டம் உடையது.  120 மி.மீ  முதல்  250 மி.மீ  என்று மழை குறைந்த அளவே பெய்கிறந்து.  இதன் விளைவாக வட மஹாராஷ்ட்ரா அந்தப் பருவத்தில் அதிகமான மழையையும், அதனைத் தொடர்ந்து மிக நீண்ட வறட்சியான  காலக் கட்டத்தையும்  சந்திக்க  நேருகிறது.

அதே சமயம்  ஈக்குவேட்டருக்கு  மிக அருகில் இருக்கும்  பகுதிகள்,  குறைவான ஆண்டு சராசரி  மழையைப் பெற்றாலும்,  ஒரு ஆண்டில் பல பகுதிகளில்  பரவலாகப் பெய்கிறது.






No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...