கோதாவரி
இரண்டாவது
பெரிய ஆறு
RIVER GODAVARI
SECOND
LARGEST RIVER
பூமி ஞானசூரியன்,
செல்பேசி: +918526195370,
மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
இந்தியாவின் கங்கைக்கு அடுத்தபடியாக
இரண்டாவது பெரிய ஆறு. மகாராஷ்ட்ரா,
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம்,
ஏனாம், புதுச்சேரி, மாநிலங்களுக்கு
நீர்க்கொடை தரும் ஆறு, நாசிக்கின்
பிரம்மகிரி மலையில் (BRAMMAGIRI
MOUNTAIN ) உற்பத்தியாகி 1465 கி.மீ.
பாய்ந்து அஞ்சர்வேடி (ANJERVEDI)
என்னுமிடத்தில் வங்காள
விரிகுடாவில் சங்கமமாகிறது.
இதன் நீர்வடிப்பகுதி 3,12.812 ச.கி.மீ.
கோதாவரியின் கிளை ஆறுகள்
மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா,
ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர்,
மத்தியப் பிரதேசம், ஒடிசா ம்ற்றும்
கர்னாடகா ஆகிய ஆறு மாநிலங்களின்
வழியாக ஓடி வங்கக்கடலில் சேர்கின்றன.
இந்திய நதிகளிலேயே கங்கை மற்றும்
இண்டஸ் நதிகளை விடவும் கூடுதலான
நீர்வடிப் பகுதியைக் (WATERSHED AREA)
கொண்டது கோதாவரி ஆறு.
இதன் நீளம், நீர்பிடிப்பரப்பு (CATCHMENT AREA)
மற்றும் வடிமுனை (DRAINAGE POINT)
போன்றவற்றின் அடிப்படையில்
கோதாவரியின் செல்லப் பெயர்
தட்சிணகங்கை அல்லது தென் கங்கை.
கோதாவரி மத்திய இந்தியாவில்;
‘நாசிக்’ என்னும் இடத்திற்கு அருகாமையில்
அரேபியன் கடலிலிருந்து 60 கி.மீ.
தொலைவில் உற்பத்தியாகிறது.
கோதாவரி நதியில், ஆந்திராவில்
உள்ள அணைக்கட்டு – தெனலேஸ்வரம்
வேர்ரேஜ், ராஜமுந்திரிக்கு அருகில் உள்ளது.
கோதாவரியின்
துணை நதிகள்
கங்கங்கா (GANGANGA) கடவா (KADAVA)
ஷிவானா (SHIVANA) புர்னா (PURNA)
கடம் (KADAM) பிராணஹிட்டா
(PRANAHITTA) இந்திராவதி ( INDRAVATHI)
தளிப்பேறு (TALIPERU) சபரி (SABARI)
ஆகியவை இடப்புறம் சேரும்
ஷிவானா (SHIVANA) புர்னா (PURNA)
கடம் (KADAM) பிராணஹிட்டா
(PRANAHITTA) இந்திராவதி ( INDRAVATHI)
தளிப்பேறு (TALIPERU) சபரி (SABARI)
ஆகியவை இடப்புறம் சேரும்
துணைநதிகள்
வலப்புறம் நசார்டி (NASARDI) தர்ணா
(DHARNA) மஞ்சிரா (MANJIRA) மனாயிர்
(MANAYIR) கின்னேரசானி
(KINNERASANI) ஆகியவை ஏழு
நதிகள் வலப்;புறம் கிளை நதிகளாய்
சேருகின்றன.
கோதாவரியின்
அணைக்கட்டுகள்
மஹாராஷ்ட்டிரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர், கர்னாடகா, உத்திரப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் கோதாவரியின் குறுக்கே மடக்கி தடுப்பணைகளை கட்டியிருக்கிறார்கள். எத்தனைதான் கட்டியிருக்கிறார்கள் என்று கணக்கிட்ட போது எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. நம்ம ஊர்க்காரர்களை சும்மா சொல்லக் கூடாது. கோதாவரியின் குறுக்கே மட்டும் இந்த ஏழு மாநிலங்களில் கட்டியிருக்கும் அணைகள்மட்டும் 921.
No comments:
Post a Comment