கங்கை
ஐந்து மாநிலங்களுக்கு
சொந்தமான ஆறு
RIVER GANGES
OF FIVE STATES
பூமி ஞானசூரியன்,
செல்பேசி: +918526195370,
மின்னஞ்சல்: gsbahavan@gmail.com)
உத்திரகாண்டு, உத்திரப்பிரதேசம்,
பீஹார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம்
ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு
சொந்தமான நதி கங்கை.
ராம்கங்கா (RAMGANGA), கோமதி
(GOMTI), கஹாரா (GHAGHARA)
கண்டக்கி (GANDAKI) பக்மத்தி
(BAKMATHI) கோஷி (KOSHI)
மஹாநந்தா (MAHANANDHA)
யமுனா (YAMUNA) தம்சா (TAMSA)
சான் (SON) பன்பன் (PUNPUN) ஆகிய
11 நதிகள் கங்கைன் பிரதான உப நதிகள்.
கங்கோத்ரி கிளேசியர் (GANGOTHRI
GLACIER) சடோபந்த் கிளேசியர்
(SATOPANTH GLACIER) காட்லிங்
கிளேசியர் (KHATLING GLACIER)
ஆகியவற்றிலிருந்து பெருக்கெடுக்கும்
நீர் நந்தா தேவி (NANDA DEVI) திரிசூலம்
(TRI SUL) கேதார் நாத் (KEDARNATH)
நந்தா காட் (NANDHA GHAT) காமேட்
(KAMET) ஆகிய மலைச் சிகரங்களின்
பனிப்பாறைகள் உருகியும்
கங்கை நதிக்கு வற்றாத நீர்
உபயம் செய்கின்றன.
இந்தியாவின் மிக நீளமான நதி
என்னும் பெருமையுடைய இதன் நீளம்
5425.கி.மீ. இதன் நீர்வடிப்பகுதி
(WATERSHED AREA) 10,80,000. எக்டர்.
இந்தியா மற்றும் வங்காளா தேசம்
ஆகிய இரு நாடுகளுக்கும் நீர்வளம்
சேர்க்கும் இருநாட்டு பொது நதி கங்கை.
இமயமலையின் மேற்கு எல்லையில்
பிறக்கும் கங்கை உத்தரகாண்ட் வழியாக
ஓடி கங்கைச் சமவெளியில் பாய்ந்து,
வங்காள தேசத்தில் நுழைந்து அங்கு
வங்கக் கடலில் தனது நீரையெல்லாம்
காலிசெய்கிறது.
அதிக நீரேந்திச் செல்லும் ஆறுகளில்
உலகின் 3 வது இடத்தைப் பிடிக்கிறது
கங்கை. ஒரு வினாடிக்கு 38,120.
கனமீட்டர் நீரை ஏந்திச் செல்கிறது.
உலகின் அதிக நீரேந்திச்செல்லும்
ஆறுகள், என்ற பட்டியலில் கங்கை
நதிக்கு முன்னால் இருப்பவை ஒன்று
தென் அமெரிக்காவின் அமேசான்,
இரண்டு ஆப்பிரிக்காவின் காங்கோ நதி.
உலகில் அதிக நீர் எடுத்துச்செல்லும்
முதல் 10 பணக்கார ஆறுகள்
என கீழ்க்கண்டவற்றை பட்டியல்
இட்டுள்ளார்கள்.
1.அமேசான் (AMAZON – 6692 KM) -- தென் அமெரிக்கா.
2.காங்கோ (CONGO - 4371- KM) -- ஆப்பிரிக்கா.
3.கங்கை (GANGES – 5425 KM) -- ஆசியா
4.ஒரினோகோ (ORINACO – 2140 முஆ) -- தென் அமெரிக்கா.
5.மேடிரா (MADIERA – 3380 KM) -- தென் அமெரிக்கா.
6. யாங்ட்சி (YANGTZE – 6418 KM) -- கிழக்கு சைனா.
7..நீக்ரோ (NEGRO – 2230 KM) -- தென் அமெரிக்கா.
8.ரியோ டி லா பிளாட்டா (RIO DE LA PLATA – 290 KM ) -- தென் அமெரிக்கா.
9.என்சி (YENSIE – 5550 KM) -- யுரேசியா
10.பிரம்மபுத்திரா (BRAMMAPUTRA – 3848 KM) -- ஆசியா
இதில் முதல் 10 ஆறுகள் என்ற பட்டியலில் 5 இடங்களை தென் அமெரிக்காவும், 2 இடங்களை இந்தியாவும், ஆப்பிரிக்கா மற்றும் சைனா மற்றும் யுரேசியா தலா ஒரு இடத்தையும் பிடிக்கின்றன.
மஹாநதி, கிருஷ்ணா, யமுனா, கோதாவரி, இண்டஸ், பிரம்மபுத்திரா, கங்கை ஆகிய 7 இந்திய நதிகள் வினாடிக்கு 2,000. கனமீட்டர் நீரை எடுத்துச்செல்லும் ஆறுகள் என பட்டியல் போட்டிருக்கிறார்கள்.
தென் அமெரிக்காவில் மட்டும் 55 ஆறுகள் ஒரு வினாடிக்கு 2,000. கனமீட்டருக்கும் அதிகமான நீரை சேந்திச் செல்லும் ஆறுகள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
கங்கை என்றால் அதன் புனிதம் பற்றித்தான் பேசுவார்கள் கங்கை நதிக் கரைகளில் கங்கை நீரை பாட்டில்களிலும். செப்புக் குப்பிகளிலும் அடைத்து விற்பனை செய்கிறார்கள்; பழனி என்றால் பஞ்சாமிர்தம் வாங்கி வர வேண்டும். திருப்பதி சென்றால் லட்டு வாங்கி வர வேண்டும். அதுபோல ஹரித்துவார், ரிஷிகேஷ் போனால் கண்டிப்பாய் “கங்கா தீர்த்தம்” வாங்கிவர வேண்டும். சிலர் “கங்கா தீர்த்தம்” என்று பூஜை அறையில் அப்படியே வைத்திருப்பார்கள். சிலர் வீடு முழுக்கத் தெளிபபார்கள். அப்படித் தெளிப்பதால் வீடு வாசல் புனிதமடையும் என்பது நம்பிக்கை.
நான்கூட ஒருமுறை பத்ரிநாத் போய்வந்தேன். அங்கு போனபோது மறக்காமல் கங்கா தீர்;த்தம் வாங்கி வந்து எல்லோர்க்கும் விநியோகம் செய்தேன்.
கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் சுர்னா மேக்னா (SURNA MAGNA) ஆகிய மொத்த நீர்ஓட்டத்தை விட அமேசான் மற்றும் காங்கோ ஆறுகளின் நீரோட்டம் அதிகம். கங்கை வங்கக் கடலில் சங்கமமாவதற்கு முன் பிரம்மபுத்திரா மற்றும் மேக்னாவுடன் சேர்வது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு பருவ மழைதான் கங்கைக்கு அதக நீர் வரத்தை வழங்குகிறது. பருவநிலைக்கு ஏற்ப அதன் நீரோட்டம் (STREAM FLOW) வேறுபடுகிறது. வறட்சியான பருவங்களில் ஒருபங்கு எனில், பருவ மழைக் காலங்களில் 6 மடங்காக அதிகரிக்கும்.
ரிக் வேதத்திற்கு முற்பட்ட காலத்தில் இண்டஸ் மற்றும் சரஸ்வதி ஆறுகள் கங்கையை விட முக்கியமான ஆறுகளாக கருதப்பட்டது. அதன்பின்னர் மூன்று வேதங்களுமே கங்கை நதிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தன.
கங்கை பீடபூமி மட்டும்தான் மிகவும் சக்திவாய்;ந்த மவுரிய மொகலாய பேரரசுகளின் பீடமாக பட்டொளி வீசியது. மவுரிய பேரரசின் தலைமையிடமாக விளங்கியது இன்றைய பாட்னா என்னும் அன்றைய பாடலிபுத்திரம்.
இந்தியாவிடமிருந்து கிரேக்க தேசம் 4000 மைல், அல்லது 600 யோசனை தூரம் உள்ளது. ஒரு யோசனை என்பது தோராயமாக 7 மைல். இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்; பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது அன்றைய முகலாயப் பேரரசு. ஆக்ரா, பத்தேபூர் சிக்ரி, லாகூர், ஹாஜதனாபாத், ஆகிய இடங்கள் முகலாயப் பேரரசின் தலைநகர்களாக விளங்கின.
(குறிப்பு: கட்டுரை பற்றிய தங்கள் கருத்தினைத் தெரிவியுங்கள் )
No comments:
Post a Comment