தமிழ்நாட்டின்
மாவட்டவாரியான
மழை நிலவரம்
RAINFALL STATUS OF
TAMILNADU
DISTRICTWISE
‘தகடு தகடு’ என்ற ஓருவசனம் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் சினிமா நடிகர் சத்யராஜ். தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதில் கொடி கட்டி பறப்பவர். அவருக்கு நான் விசிறி.
உங்க முன்னேற்றத்திற்கு உந்து சக்தியா இருந்தது எது என்று நான் மதுரையில் இருந்த சமயம் ஒரு ரேடியோ பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் இன்னும் பசுமையாக என் மனதில் உள்ளது.
அதுக்கு காரணமாக இருந்தது. ஒரு சினிமா பாட்டுங்க என்று சொல்லி அந்த பாடலை பாடியும் காட்டினார்.
‘உன்னை அறிந்தால் -- நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்’
நம்மகிட்ட என்ன சரக்கு இருக்கு ? அதோட குறை என்ன ? நிறை என்ன ? அது தெரியாம முன்னுக்கு வர முடியாதுங்க என்று சொன்னார் சத்யராஜ்.
இப்போ நம்ம சப்ஜெக்ட்டுக்கு வருவோம். சத்யராஜ் சார் சொன்னது மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஒரு நாட்டிற்கும் பொருந்தும்.
நம்ம தமிழ்நாட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு மழை கிடைக்கிறது ? இதை தெரிந்துக் கொள்ளாமல் இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க இயலாது.
வறட்சி, வெள்ளம், குடிநீர்ப் பஞ்சம், இவைதான் ஒரு நாட்டின் பிரதானப் பிரச்சனைகள். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியுமா ? முடியும்.
இவை வராமல் தடுக்க முடியுமா ? முடியும். இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா ? முடியும். இவற்றால் ஏற்படும் சேதங்களை குறைக்க முடியுமா ? முடியும்.
இவற்றை செய்ய வேண்டுமென்றால்,மழையின் பண்புகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது தமிழ்நாட்டின் மழை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்; இந்தியாவின் ஆண்டு சராசரி மழை 1250 மில்லி மீட்டர். இதனை இயல்பு மழை (ழேசஅயட சுயin குயடட) என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஒரு ஆண்டில் இயல்பு மழையைவிட அதிகம் பெய்யும். அடுத்த ஆண்டு குறைவாக பெய்யும். இன்னும் சில ஆண்டில் நடுத்தரமான அளவு பெய்யும். 10 அல்லது 15 ஆண்டுகளில் இதன் சராசரியை கணக்கிட்டுப் பார்த்தால், ஏறத்தாழ இயல்பான மழைக்கு சமமாக இருக்கும்.
ஓர் ஆண்டில் நமக்கு கிடைத்த மழை குறைவா ? நிறைவா ? அதிகமா ? என்பதை தெரிந்துக் கொள்ள நாம் இயல்பு மழை எவ்வளவு என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை (அ) இயல்பு மழை 945 முதல் 950 மில்லி மீட்டர் வரை.
தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 11 ல் அதிக மழையும், 14 ல் நடுத்தரமான அளவும், 7 ல் குறைவான அளவும், மழை பெய்கிறது.
அதிகபட்சமான மழை என்பது 1000 மில்லி மீட்டருக்குமேல். நடுத்தரம் என்பது 800 மில்லி மீட்டருக்கும்மேல். குறைந்தபட்சமான மழை என்பது 800 மில்லி மீட்டருக்கும் கீழ்.
கடலோர மாவட்டங்களில் அதிக மழையும், பிற மாவட்டங்களில் குறைவான மற்றும் நடுத்தரமான அளவு மழையும் தமிழ்நாட்டில் கிடைக்கிறது.
இப்போது எந்தெந்த மாவட்டங்களில் அதக மழை பெய்கிறது என்று பார்க்கலாம்.
அவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், மற்றும் திருவாருர்;
நடுத்தரமான அளவு மழைபெறும் 14 மாவட்டங்கள், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் அரியலூர்.
தமழ்நாட்டில் குறைவாக மழை பெறும் 7 மாவட்டங்கள் நாமக்கல் கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி.
1695.7 மில்லி மீடடர் ஒரு ஆண்டின் இயல்பு மழையாக பெறும் நீலகிரி மாவட்டம்தான் தமிழ்நாட்டில் அதிகமாக மழை பெறும மாவட்டம்.
655.7 மில்லி மீட்டர் ஓர் ஆண்டின் இயல்பு மழையாக பெறும் தூத்துக்குடி மாவட்டம் தான் தமிழ்நாட்டில் குறைவான மழைபெறும் மாவட்டம்.
இயல்பு மழை என்று நாம் தீர்மானம் செய்தவாறு பெய்யவில்லை என்பதற்காக மழையை யாரும் கண்டிக்கவும் முடியாது. தண்டிக்கவும் முடியாது.
இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்லித் தரும் பாடம் ஒன்றுதான். தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு நீரை சேமிப்பதுதான்.
நமக்கு கிடைக்கும் மழையை சேமித்தால் மட்டுமே போதும்; அண்டை மாநிலத்தில நாம் பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டிய அவசியம் இல்லை.
- பூமி ஞானசூரியன்
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று – குறள் 523
அதிகாரம்: 53 சுற்றந்தழால்
No comments:
Post a Comment