Thursday, July 20, 2017

RAIN MAN OF ISRAEL இஸ்ரேல் நாட்டின் மழை அறுவடை வாத்தியார்

                                                                  

RAIN  HARVESTING POTS OF PAZHAVERKADU

இஸ்ரேல்
நாட்டின்
மழை அறுவடை 
வாத்தியார்

RAIN MAN OF ISRAEL

நீ மனிதனாக பிறந்தால் புகழ் 

பெறும்படியான காரியங்களைச் செய். 
இல்லையென்றால் நீ பிறக்காமல் 
இருப்பது உத்தமம் என்றும் 
சொல்லும் திருக்குறள்.

தோன்றிற் புகழொடு தோன்றுக: அஃதிலார்,                                                  தோன்றலிற் தோன்றாமை நன்று

“நீயே உன்னைப்பற்றி பேசறதில 

அர்த்தம் இல்ல. நீ செய்த காரியங்கள் 
உன்னைப் பற்றி பேசணும்” 
இந்த அர்த்தத்தில் ஒர்  
ஆங்கிலப்பழமொழி. எங்கோ 
படித்த ஞாபகம். இதற்கு 
பொருத்தமான ஒரு பெயரை 
ஐந்து எண்ணுவதற்குள் 
என்னைச் சொல்லச் சொன்னால், 
யோசிக்காமல் சொல்லுவேன்  
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

என்வீடு, என்குடும்பம், என்மனைவி, 

என் மக்கள் என்ற எல்லையைத்  
தாண்டி, பிறருக்காக சுவாசிப்பவர்களைத் 
தேடிச் செல்லும் புகழ். அப்படிப்பட்ட 
ஒரு சராசரி மனிதர்தான், 
அமீர் எச்சிலி.

அமீர் எச்சிலி அடிப்படையில் 

ஒரு பளளிக்கூட வாத்தியார். 
இஸ்ரேல் நாட்டைச்சேர்ந்தவர்.

பள்ளிக்கூட கட்டிடங்களில், 

மழைக்காலத்தில் வீணாகப் 
போகும் மழை நீரை அறுவடை 
செய்வதை அறிமுகம் செய்ததால் 
 உலகம் முழக்க ‘மழை மனிதர்  
அமீர் எச்சிலி’ என்ற அடைமொழியுடன் 
பிரபலமானவர்.

இஸ்ரேல் நாட்டில் மழைநீர் 

அறுவடையை திட்டமிடும் 
உயர் மட்ட நிபுணர் குழுவில் 
நமது மழை மனிதர் 
அமீர் எச்சிலி ஒரு முக்கிய புள்ளி.

சிறு புள்ளியாய் இருந்த 

அமீர் எச்சிலி எப்படி மழை மனிதனாக 
ஆனார் ?  என்று பார்க்கலாம்.

ஜெருசலேம் நகரைச்சுற்றி  சுற்றி 

பல பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக 
வேலை பார்த்தவர் அமீர்.

இஸ்ரேல் தண்ணீர்த் தாகம் 

உள்ள தேசம். இங்கு கிடைக்கும் 
ஆண்டு சராசரி மழை 
300 மில்லி மீட்டருக்கும் கம்மி. 
பெய்யும் மழை நீரை அடுத்த 
கணமே கபளீகரம் செய்யும் 
பாலைவன மணல். 
ஆனாலும் ஆறு மாதம் 
மழை பிசுபிசுக்கும். 
ஆறாக ஓடவில்லை எனினும், ஆறஅமர 
நூறு நாள் மழையாய்ப் பெய்யும். 
ஆச்சரியம்!

பள்ளிக்கூடத்தில் அறிவியலில் 

‘ஆனா ஆவன்னா’ சொல்லிக்கொடுத்த 
நேரம் போக அவகாசமான 
தருணங்களில் மழை வேடிக்கை 
பார்க்க, அமீருக்கு பிடிக்கும்.

இப்படி ஆண்டு முழுவதும், 

பள்ளிக்கூட கூரையில் வழியும் 
மழைநீரை சேகரிக்க முடியுமா ? 
எவ்வளவு சேமிக்கலாம் ?  
அதனை எதற்கு பயன்படுத்தலாம் ?  
குறைந்த பட்சம் இந்த தண்ணீரை 
கழிப்பறைகளில் பயன்படுத்தலாம்.

இதனால்  ஒன்று  கழிப்பறைகள் 

சுத்தமாகும். அந்த தண்ணீருக்காக 
செலவிடும் பணம் மிச்சம். 
மூன்று கூரையிலிருந்து 
வழிந்தோடி நிலப்பரப்பில் தப்பி ஓடும்
 தண்ணீரை உபயோகப்படுத்தலாம்.

ஒரே கல்லில் மூன்று மாங்காய்..! 

ஒரே செல்லில் மூன்று சிம்.” என்று 
அமீரின் மனசில் யோசனை மேல் 
யோசனையாக தோன்றிக் கொண்டே இருந்தன.

இதை எப்படி நடைமுறைப்படுத்துவது ?

தனக்கு தெரிந்த ஒரு பள்ளியின் 
தலைமை ஆசிரியரைசந்தித்து 
தனது யோசனைகளை 
அவரிடம் விளக்கமாக 
எடுத்துக் கூறினார்.

அமீருக்கு ‘சரி’ என்று 

பதில் சொல்வதற்கு முன்னால், 
இதற்கு எவ்வளவு பணம் செலவாகும் ? 
இதற்கு எப்படி நிதி திரட்டலாம் ? 
இப்படியாக அவருக்கு யோசனை ஓடியது.

சீக்கிரமாகவே அந்த பள்ளியில் 

அமீரின் யோசனை செயல் வடிவம் பெற்றது. 
கூரையில் இருந்து வடியும் தண்ணீரை 
வடிக்க ஒரு குழாய். 
அந்த தண்ணீரை சேமிக்க 
ஒரு தொட்டி. தொட்டியிலிருந்து 
கழிப்பறைக்கு எடுத்துச் செல்ல 
ஒரு குழாய். அவ்வளவுதான்.

இஸ்ரேல் நாட்டின் முதல் 

பள்ளிக்கூட மழைநீர் அறுவடை 
கட்டமைப்பை நிறுவினார். 
தலைமையாசிரியர் பதவி 
உயர்வு பெற்றது போல மகிழ்ச்சி அடைந்தார் அமீர்.

நீரை சேமிப்பதில், நாட்டின் ஒவ்வொரு 
குடிமகனுக்கும் பொறுப்பு உண்டு. 
நீர் இல்லாமல் விவசாயத்தை 
வளர்க்க முடியாது. விவசாயம் 
இல்லாமல் எந்தஒரு வளர்ச்சியும் 
வர முடியாது. அப்படி வந்தாலும் 
அது அடித்தளம் போடாத 
கட்டிடம் மாதிரி சரிந்துவிடும். 
இதை எல்லாம் 
மாணவர்களுக்கு 
எடுத்துக் கூறினார் அமீர்.
 
கட்டிடக் கூரைகளில் எப்படி 
மழைநீரை சேகரிக்க முடியும் ? 
என்று மாணவர்களுக்கு 
பயிற்சி அளித்தார்.
 
அதன் பின்னர் பல பள்ளிகள், 
இப்படிப்பட்ட  மழைநீர் 
சேமிப்புக் கட்டமைப்புக்களை 
அமைத்துத் தரும்படி  அமீரை அணுகினர்.
 
அமீர் தனது மாணவர்களின் 
உதவியுடன் பல பள்ளிகளில் 
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்களை 
செய்து முடித்தார். இவர் தனது 
சொந்த முயற்சியில் 15 ஆண்டுகளில் 
120 பள்ளிகளில் இதனை செய்து முடித்தார்.

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 

மழைநீர் அறுவடையின் 
அவசியம்பற்றி பொது மக்களிடையே 
விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
 
கூரைகளில் வடியும் நீரை 
ஒரே தொட்டியில் சேமிக்க வேண்டும். 
சேமித்த நீரை வரிசையாக பல 
தொட்டிகளில் செலுத்தி வடிகட்ட 
வேண்டும். இதனால் ஒவ்வொரு 
தொட்டியிலும் ஒருமுறை வடிகட்ட 
மிக சுத்தமான தண்ணீர் கடைசி 
தொட்டியில் கிடைக்கும் 
என்பது அமீரின் அனுபவம்.

இஸ்ரேலின் உயிர் தண்ணீர்.

இஸ்ரேலிய அரேபியர்கள், 

ஜோர்டானியர்கள், யூதர்கள் 
இப்படி எந்தவித பாகுபாடுமின்றி 
அமீர் எச்சிலி மழைஅறுவடை 
செய்ய அவர்ககளுக்கு  
சொல்லித் தருகிறார். 
இந்த வகையில் நீர் அறுவடை 
மத நல்லிணக்கத்திற்கு உதவியாக 
உள்ளது என்று மனம் திறக்கிறார் அமீர்.
நேற்று ஒரு சாதாரண 
அறிவியல் ஆசிரியர் 
அமீர் எச்சிலி. இன்று உலகமே  
‘ரெய்ன் மேன் ஆஃப் இஸ்ரேல்’ 
என்றழைக்கப்படும் மழை மனிதர்.

FOR FURTHER READING LIST
FROM VIVASAYA PANCHANGAM


1. பழவேற்காடு பகுதியில் பாரம்பரிய கூரைநீர் அறுவடை  -  TRADITIONAL ROOF WATER HARVESTING IN PAZHAVERKADU – Date: 21.12.2019 /https://vivasayapanchangam.blogspot.com/2019/12/traditional-roof-water-harvesting-in.html

2. பள்ளிக்கூடங்களில்   மழைநீர் சேகரிப்பு - RAINWATER HARVESTING IN SCHOOLS  - Date: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/rainwater-harvesting-in-schools.html

3. மழைநீர்   சேகரிக்க  சில வழிமுறைகள்    - RAINWATER   HARVESTING  - TEN GUIDELINES – Date:19.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/roof-water-harvesting.html

4. தண்ணீரினால்  பரவும்  நோய்கள் -  WATERBORNE  DISEASES – Date of Posting: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/waterborne-diseases.html

5. மழைநீரை சுத்தம் செய்வது      எப்படி ?    HOW TO CLEAN  RAINWATER TO DRINK ? Date of Posting: 18.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/rain-water.html
6. இன்று ஒரு  குறுஞ்செய்தி - கூரைநீர்  அறுவடை - NEWS TODAY - ROOFWATER  HARVESTING / Date of Posting: 13.08.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/08/news-today-roofwater-harvesting.html

7. சென்னையில் மழை அறுவடை  விழிப்புணர்வு - ROOFWATER HARVESTING AWARENESS PROGRAMME IN CHENNAI - Date of Posting: 07.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/roofwater-harvesting-awareness.html

8. மழைநீரை  சேகரித்து      சுத்தம் செய்து      குடிக்கலாம்  -   RAINWATER HARVEST CLEAN DRINK/ Date of Posting: 20.08.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/rainwater-harvest-clean-drink.html

9. 38000 கோவில்களில்   மழை அறுவடை செய்ய   அரசுக்கு கோரிக்கை !    38000 TEMPLES  NEED    RAINWATER HARVEST / Date of Posting: 12.08.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/38000-request-for-rainwater-harvest-in.html


10. உங்கள் வீட்டு  கூரை மூலம்  30000 லிட்டர் நீரை அறுவடை செய்யலாம்  - ROOF WATER HARVEST  YOU  CAN DO IT / Date of Posting: 27.02.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/02/30000-roof-water-harvest-you-can-do-it.html

11. மழைநீரை  சுத்தப்படுத்த பிளீச்சிங் பவுடர்  CLEAN RAINWATER  BY BLEACHING POWDER / Date of Posting: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/bleaching-powder-cleans-water.html

12. கூரை நீர்   அறுவடை  சில கேள்விகளும்   பதில்களும்     ROOFWATER  HARVESTING QUESTIONS  & ANSWERS / Date of Posting: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/roofwater-harvesting-questions-answers.html


No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...