Tuesday, July 18, 2017

MAWSYNROM WORLD'S WETTEST PLACE - சிரபுஞ்சி இரண்டாவதுதான்

                     
                                                       சிரபுஞ்சி இரண்டாவதுதான்

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்…..?
ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்..
ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்…
உயரும் உன்மதிப்பு அயல் நாட்டில்…
                          
முன்னால் இருக்கும் சாதனைகளை முறியடிப்பதற்காகவே சாதனையாளர்கள் தோன்றுகிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக உலகின் மிக அதிகமான மழை பெறும் இடம் என்று, கிரீடம் தாங்கியிருந்த சிரபுஞ்சி பின்னுக்கு தள்ளப் பட்டிருக்கிறது.
அந்த இடத்தை பிடித்துள்ளது இன்னொரு இந்திய கிராமம் என்பதற்காக இந்தியாவின் அனைத்து குடிமக்களும் பெருமைப்படலாம்.

இன்று உலகப்படத்தில் மாசின்ரோம் என்ற இந்திய கிராமத்தின் பெயர் அடிக்கோடிடப் பட்டுள்ளது.

சிரபுஞ்சியின் ஆண்டு சராசரி மழை 11,444 மி.மீ. மாசின்ரோமின்   ஆண்டு சராசரி மழை 11,872 மி.மீ.

சிரபுஞ்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், அஸ்ஸாமின் தலைநகர் ஷில்லாங்கிலிருந்து  65 கி.மீ. தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து; 7000 மீ  உயரத்திலும் காசி மலைச்சாரலில் அமைந்துள்ள மழை நகரம்  மாசின்ரோம்.

“மாசின்ரோமை நாங்க ஏத்துக்க முடியாது.  ‘லோபஸ்  டி மிக்கே’ என்ற இடத்தில்  12842 மி.மீ. ம் “லோரா” என்னும் இடத்தில் 12717 மி.மீ. மழையும் கிடைக்கிறது. கின்ன}ஸ் சொல்வது பொய் என்று வடஅமெரிக்கா கோபப்படுகிறது. 

இந்த இரண்டு ஊர்களும், வடஅமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் உண்மையாகவே மழை சாதனை நிகழ்த்துகின்றன. வாஸ்தவம்தான். ஆனால் விக்கி மீடியாவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். 

“அது அதிகமில்லை ஜென்டில்மேன் 1965 ல் பதிவான மாசின்ரோமின் மழைஅளவு 26000 மில்லி மீட்டர்” என்ற புள்ளிவிவரத்தால் உண்மையை உலகறியச் செய்துள்ளது விக்கிமீடியா வலைத்தளம்.

அதுபோல, லோபஸ் டி மிகே வில் அதிகபட்சமாக  1984. ஆம் ஆண்டு பதிலான மழை 23818 மில்லி மீட்டர்.

லோபஸ் டி மிகே ன் ஆண்டு சராசரி மழையாக குறிப்பிடப்படும் 12892 மி.மீ. என்பது 31 ஆண்டுகளிள் கணக்கிடப்பட்டது. அதாவது 1960. ஏப்ரல் முதல் 2,012 பிப்ரவரி வரை.

ஏறத்தாழ இந்த இரு நகரங்களுக்கு சமமாக பேசப்படும் இன்னொரு மழையூர் ஹவாயன் ஐலண்ட் ல் உள்ள வாயாலீல். வாயாலீல் என்றால் மிகையாக வழிந்தோடும் நீர் என்று பொருள். 

5,140. அடி உயரத்தில் அமைந்துள்ள வாயாலீல் பெறும் மழை 11,500. மில்லி மீட்டர். 1982 ஆம் ஆண்டு இங்கு பெற்ற மழை அளவு 17300 மில்லி மீட்டர்.
ஆண்டு முழுவதும் சீராக மழை கிடைப்பது மவுண்ட் வாயாலீல்' ன் சிறப்பு. மாசின்ராம் மற்றும் சிரபுஞ்சியில் பருவகாலத்தில் மட்டுமே அதிக அதிக மழையைப் பார்க்க முடியும்.

வாயாலீல் க்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 365 நாள் கொண்ட ஒரு ஆண்டில் 335 நாட்களில் மழை பொழிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

ஒரு வருஷத்தில் 30 நாட்களில் மட்டுமே மழை இல்லை.
நம்ம ஊர்களில் நம்ம ஊர்களில் தொடர்கிறது ஒரு வாரம் வாரம், ரெண்டு வாரம், மழை பெய்தாலே மக்களின் மாமூல் வாழ்க்கை  பாதிக்கிறது. நமது கிராமங்களும் நகரங்களும் போட்டி போட்டுக் கொண்டு தண்ணீரில் மிதக்கின்றன.

நம்ம ஊர் தார்ச் சாலைகளிலும், சிமெண்ட் சாலைகளிலும் தேங்கி நிற்கும் தண்ணீர் போகும் இடம் தெரியாமல் தத்தளித்து தடுமாறுகிறது. 

அடுக்கு மாடி குடியிருப்புக்களில் இருப்பவர்களை பாதுகாக்க படகுகளும் மேல் தளத்தில் வசிப்பவர்களை பாதுகாக்க வெறலிகாப்டர்களும் அனுப்ப வேண்டி உள்ளது.

உடைப்பெடுத்த ஏரிகளின் நீர்,  சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமத்து மக்களை முச்சுடுமாக கிராமங்களைவிட்டு கிளப்பப் பார்க்கிறது. 335 நாள் மழையை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

“ராசாக்களா எப்படி சமாளிக்கிறீங்க…?” வாயாலீல் போனால் அவர்களிடம் கேட்க வேண்டும்.

ஆனாலும் இந்த மழை ஆட்டத்தின் உலக சாம்பியனாக விளங்கும் சிரபுஞ்சியில் குடிநீர் பஞ்சமென்றால் அது கொடுமை.

மவுண்ட் வாயாலில்’ல் மழை எப்படி ஆணடு முழுவதும் சீராக பெய்கிறது என்று பார்ப்போம். 

(மழை அளவு மி.மீ.;)
      ஜனவரி  --  629.4            .ஜூலை  --.    911.1
      பிப்ரவரி  --  625.6            ஆகஸ்ட்  --.   831.9
      மார்ச்   --   691.9            செப்டம்பர்  --  613.2
      ஏப்ரல்  --   1144             .அக்டோபர்  --  806.7
      மே    --   714.8             நவம்பர்    --  922.8
      ஜூன்   --   778.5             டிசம்பர்    --  764.5

மொத்த சராசரி மழைஅளவு  949.53. மழை இல்லா மாதங்கள் ஏதும் இல்லை. மழை பெறும் அளவில் அதிக வேறுபாடு இல்லை. குறைவான மழைஅளவு 6,13.2. மி.மீ. அதிகமான மழைஅளவு 1,199. 0 மி.மீ.

சிரபுஞ்சி மற்றும் மாசின்ரோம் ல் மழை, மாதந்தோரும் எப்படி பெய்கிறது   என்று பார்க்கலாம்.
      
      மான்சிரோம் (மழைஅளவு மி.மீ.) 
     
      ஜனவரி  --  11          ஜூலை   -- 3272 
      பிப்ரவரி  --  46          .ஆகஸ்ட்  -- 1760
      மார்ச்   --   240             செப்டம்பர் – 1352
      ஏப்ரல்  --   938            அக்டோபர் – 549
      மே    --   1214               நவம்பர்   -- 72
      ஜூன்   --   2294           டிசம்பர்   -- 29
   
சிரபுஞ்சியில் மிகக் குறைவாக மழை கிடைப்பது ஜனவரி மாதத்தில்    17 மில்லி மீட்டர். அதிகம் பெறுவது ஜூலை மாதம் 3272 மில்லி மீட்டர்.
      
      ஜனவரி  -- 17         ஜூலை   --  2467
      பிப்ரவரி  -- 30         ஆகஸ்ட்  --  1714
      மார்ச்   -- 163         செப்டம்பர் –  853
      ஏப்ரல்  --  451          அக்டோபர் – 338
      மே    --  1083          நவம்பர்   -- 52
      ஜூன்   -  2348           டிசம்பர்   -- 11

மாசின்ரோம் ல்  மிகக் குறைவாக மழை பெய்வது டிசம்பர் மாதத்தில் 11 மில்லி மீட்டர்.  அதிகம் பெறுவது 2467 மில்லி மீட்டர்.

மழை விநியோகத்தில்  சிரபுஞ்சிக்கும் மாசின்ரோம்க்கும் வேறுபாடு பெரிதாக ஏதும் இல்லை.

- பூமி ஞானசூரியன்
777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777
கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடும்
நாவாயு மோடா நிலத்து – குறள் 495 




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...