Monday, July 24, 2017

MADHURANTHAGAM LAKE LARGEST ONE மதுராந்தகம் ஏரி - செங்கற்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரி -

மதுராந்தகம் ஏரி 


மதுராந்தகம் ஏரி - 
செங்கற்பட்டு மாவட்டத்தின் 
பெரிய ஏரி 

MADHURANTHAGAM LAKE
CHINGLEPUT DISTRICT'S
LARGEST ONE

மதுராந்தகம் ஏரி  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உள்ளது. சென்னை யிலிருந்து   விழுப்புரம்  செல்லும் தேசிய  நெடுஞ்சாலையில்   89  கி.மீ.  தொலைவில்  உள்ளது.  தமிழ்நாட்டின் மகப்பெரிய   ஏரிகளுள்  ஒன்று.  

தமிழ்நாட்டில்  பெரும்பாலான ஏரிகளை வெட்டியது  சோழர்கள்  ஆட்சிக்காலத்தில்தான்.   இந்த ஏரி சோழப்பேரரசன்  உத்தமசோழனால்  வெட்டப்பட்டது.   மதுராந்தகன் என்ற பட்டப்பெயர் இவனுக்கு  உண்டு அவனுடைய  பெயராலேயே   இந்த ஊர்  மதுராந்தகம்  என அழைக்கப் படுகிறது. 

மதுராந்தகம் என்றால் இரு  சிறப்பான அம்சங்களை சொல்வார்கள்.  ஒன்று மதுராந்தகம்  ஏரி.  இரண்டு ஏரிகாத்த  ராமர் கோயில்.   இந்தப்பெயர் எப்படி வந்தது ? அது ஒரு சுவாரஸ்யமான கதை.
 
வெள்ளைக்காரர்களின் ஆட்சிக்காலத்தில்   ஆண்டு தவறாமல்  ஏரியின்  மதகுகள் உடைந்து  அதன் இருபக்க கரைகளும்   வெள்ளத்தில் கரைந்து போய்விடும்.  மீண்டும் கரையும.; மீண்டும் மதகு கட்டுவார்கள்.   மீண்டும் வெள்ளம் வரும்.  இது தொடர்ந்தது.  

அந்த சமயம்  கலோனல்  லயோனல்  பிளேஸ்  என்பவர் இப்பகுதியின்  கலெக்டராக  இருந்தார்.  அவர் ஒரு வெள்ளைக்காரர்.  மதுராந்தகம் ஏரியின் மேல்  பற்றும் பாசமும்  கொண்டவர்.   பரந்து விரிந்திருக்கும் நீர்ப்பரப்பைக் கண்டு சொக்கிப்போவார்.     ஏரியில் நீர் நிரம்பியது தெரிந்தால்  அன்றே ஏரிக்கரைக்கு வந்து நிற்கும் அவரது ஜீப். 

ஒருநாள் அவர்  மதுராந்தகம் ஏரிக்கு  வந்திருந்தார்.   ஏரி நிரம்பி இருந்தது.  விசாலமான  நீர்ப்பரப்பு. நீர்வரத்து   தொடர்ந்தது.  மதகுகுள் திறந்திருந்தும் நீர் தளும்பி  கரைமேல் விழுந்துக் கொண்டிருந்தது.  மக்கள் அங்கு கூடிவிட்டனர்.  இந்த ஆண்டும்  இந்தக்கரை  உடைந்துவிடும்  என்று பயத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள் எல்லோரும்.

அப்போது  லயோனல் அங்கிருந்த கோதண்டராமர் கோயில் பற்றி விசாரித்தார். அங்கிருந்த  மக்கள்  ராமன்,  சீதை,  லட்சுமணன் பற்றியும்,  மாகாவியம் ராமாயணம் பற்றியும், சுருக்கமாக அவருக்கு விளக்கினார்கள். யார் எதை வேண்டிக் கொண்டாலும் அதனை  கோதண்டராமர்  கணடிப்பாய் நிறைவேற்றுவார் என்றும் சொன்னார்கள்.  

அவருடன் வந்தவர்கள்   “புறப்படலாம்  நேரமாகிவிட்டது.  ஏரிக்கரை கூட உடைந்துவிடும்  என்று சொல்கிறார்கள்.  இதற்குமேல், இங்கு நிற்பது ஆபத்து” என்கிறார்கள்.   புறப்படுங்கள்  தாமதிக்க வேண்டாம்  என்று  அவரை அவசரப்படுத்துகிறார்கள்.  

அப்போது  லயோனல்  “எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  ஏரிக்கரை  உடையாது.  கோதண்டராமர் உடைய விடமாட்டார்.  நான் இரவு இன்று இங்கேயே தங்கப்   போகிறேன்.  உங்களுக்கு பயமாக இருந்தால்  நீங்கள்; புறப்படலாம” என்று அமைதியாகச் சொன்னார்.

வேறு வழியின்றி  உடன்வந்த  சிப்பந்திகளும்  அன்று இரவு அவருடன்   தங்கிவிட்டனர்.    இரவு  முழுக்க மக்களோடு  பேசுவதும், கரையின்மேல்   போய் பார்ப்பதுமாக இருந்தார். ஒரு நேரத்தில் அப்படியே  தூங்கிப்போனார்.  ஒரு சமயம் திடீரென விழிப்பு வந்தது. எழுந்து நடந்து ஏரிக்கு அருகே  நடந்து போனார்.   அங்கே கரையில்  இரண்டு   உருவங்கள்.  நின்றுகொண்டிருந்தன. 
நான் காண்பது  கனவா  நனவா  ?   கிள்ளி  பார்த்துக் கொண்டார்.  கனவில்லை.  கரையில்,  வில்லும், அம்பும்,  அம்பறாத் தோணியுமாக இருவர்  நின்றிருந்தனர். யார் இவர்கள் ? ஏரியின் கரைகளை  காவல் காப்பது  ராமனும்  லட்சுமணனும்.   வெள்ளைக்கார   கலெக்டருக்கு  மெய்  சிலிர்த்தது. 

உடனே  தரையில் அமர்ந்து  முட்டிபோட்டு  (மாதா கோவிலில்  வேண்டுவது  போல)  வேண்டினார்.  இந்த  ஏரிக்கரையை   உடையாமல்  காப்பாற்றித்  தாருங்கள்,  என்று மனம் உருக   வேண்டினார். 
 
அதற்குப் பிறகு  என்ன நடந்தது என்று  தெரியவில்லை.    காலையில் எழுந்து பார்த்தால், கரைகள் உடையவில்லை.  நீர்வரத்து   குறைந்திருந்தது.  நீர் கரைக்குள் அடக்கமாக இருந்தது .இனி ஆபத்து இல்லை  என  மக்கள்  பேசிக் கொண்டது அவர் காதில்  விழுந்தது.  தனது வேண்டுதலுக்கு   கோதண்ட ராமன் செவி  சாய்த்ததாக  நம்பினார்.   கலெக்டர் அன்றே  கோதண்டராமர் கோவிலின் ஒரு பகுதியாக  சீதைக்கென்று ஒரு தனியான பீடம்  அமைக்க    உத்தரவிட்டார்.  

அன்றுமுதல் கோதண்டராமர் கோயில்,  ஏரி காத்த ராமர் கோயில்   ஆனது. 
கடந்த 2015 ஆம் ஆண்;டு  வடகிழக்கு பருவமழை  சமயம்;   தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.  அதனால் மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிந்தது.  அப்படி நிரம்பி வழிந்த தண்ணீரின் அளவு   வினாடிக்கு  20,400   கனஅடிநீர்  என்றும்  சொல்கிறார்கள்.

“30   வருஷத்துக்கு  பின்னாடி  இந்த  வருஷம்தாங்க   (2015)  ஏரி  நிரம்பி இருக்குங்க.   அதனால  தண்ணிய திறந்து                        விட்டுட்டாங்க.   வினாடிக்கு   20,400 கன அடி  தண்;;ணீர் வீணாக   கடலில்போய் கலக்கிறது.  கிட்டதட்ட  10 நாளாக  இப்படி வீணாக போகுதுங்க.  இந்த தண்;ணிய மட்டும் சேமித்தால்,  காஞ்சிபுரம் மாவட்டத்துல   பாதி மாவட்டம்  விவசாயம்  பார்க்கலாம்” என்று வேதனையுடன் சொல்லுகிறார்  ஒரு விவசாயி.  
இது மதுராந்தகம் ஏரிக்கு மட்டுமல்ல,  தமிழகத்தின் பல ஏரிகளில் நிலவும்   நிலை இதுதான்.

இன்னொரு விவசாயி “ஏரியை தூர்  எடுத்து  ரொம்ப  வருஷம்  ஆகுதுங்க. வரத்துக்கால்வாய் ஒண்ணுகூட  சரியில்லீங்க.  சிமெண்ட்டுல  கால்வாய்   அமைச்சா  நிறைய                    தண்ணீர் மிச்சமாவுங்க..  அதே போல  மதகுகள்  சரியா இல்லீங்க.  இதையெல்லாம் சரிசெய்ய அரசாங்கம்   நடவடிக்கை எடுக்கணும்ங்க”  என்று அதே பகுதியைச் சேர்ந்த  இன்னொரு விவசாயி கருத்து தெரிவித்தார். 

இந்த இரண்டு விவசாயிகளின்  கருத்துக்களை  தினத்தந்தியின்  யூடியூப்  நிகழ்ச்சியில்,  நவம்பர் 2015   ல் MADURANTHAKAM RIVER REACHES ITS  
Maduranthakam Lake Reaches  It’s  capacity  After  30   Years  --  Thanthi    TV என்ற தலைப்பில் பதிவு செய்து வெளியிட்டார்கள்.

மதுராந்தகம்   ஏரியின்  ஆழம் 23 அடி.  இதனை முழுவதுமாக  4 ஆண்டுகளுக்கு பிறகு எட்டியது. “இதனைத்  தூர் எடுக்க 40 ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று.  தூர் எடுத்தால் இன்னும்  கூடுதலான அளவு நீரை  இதில்  தேக்க முடியும்.  கூடுதலாக  விவசாயம்  பார்க்கமுடியும்;”  என்கிறார்கள்  இப்பகுதி மக்கள். 

காஞ்சிபுரம்  மாவட்டத்திலுள்ள  இந்த ஏரியின் மொத்த  கொள்ளளவு   17.2 மில்லியன் கன மீட்டர் (MCM)   இதன்மூலம் பாசனம் பெறும் விவசாய நிலத்தின்  மொத்த  பரப்பளவு   1,151  எக்டர்.   

சென்னையிலிருந்து திருச்சி செல்லும்  தேசிய நெடுஞ்;சாலையில்  மதுராந்தகம் நகரின்  மேற்குப் பகுதியில்  அமைந்துள்ளது  ஏரி.  பஸ்ஸில் போகும்போதே   இந்த  ஏரியை  தரிசிக்கலாம்.  இதன்பரப்பளவு 34 சதுர கி.மீ.  (23  சதுர மைல்). 

கி.பி. 970 -- 980 வரை  அரசு கட்டிலில்  ஆட்சிபுரிந்த  உத்தமசோழன்  வெட்டிய  ஏரி இது.  இவன் ராஜராஜ  சோழனின்  சிறிய  தந்தை.
 
சோழர்களின்   காலத்தில்  இந்த ஊரின் பெயர்  மதுராந்தக  சதுர்வேதி மங்கலம். சதுர் வேதி என்றால் நான்கு வேதங்களை கற்றுணர்ந்த   பண்டிதன்;  என்று பொருள்.  சதுர்வேதி மங்கலம் என்றால்   வேத விற்பன்னர்களை  உள்ளடக்கிய கிராமம்.  மதுராந்தகம்   கிராமம்,  வேதியர்களுக்காக, கண்டராதித்தன் என்ற அரசனால்  கொடையாக அளிக்கப்பட்டது. 

இங்கு உள்ள ஏரி காத்த  ராமர்  கோவில்  முன்னதாக,  1,600 ஆம்   ஆண்டுவாக்கில்,  பல்லவர்களால்  கட்டப்பட்டது.  இதன் மூலவர்கள்  ராமன்,  சீதாப்பிராட்டியார் மற்றும்  லட்சுமணன்.  ஆனால் சீத்தா,  ஜானக வள்ளி   தர்பார்   என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
 
உத்திரமேருர் ஏரி நிரம்பி வெளியேறும் நீர் இரண்டு பகுதியாக செல்கிறது.  இதில் ஒரு பகுதி  கரிக்கிலி,  வெள்ளப் புதூர்,  கட்டியாம்பந்தல்,  வேடந்தாங்கல்  உட்பட  பல ஏரிகளை நிரப்பியபடி கிளியாற்றை அடைகிறது.
 
மதுராந்தகம் ஏரி நிரம்பியதும்  அதிகப்படியான நீர்  மீண்டும்  கிளியாற்றைச் சேரும்.  கிளியாற்று நீர்  கடப்பேரி,  விழுதமங்கலம்,  உள்ளிட்ட    9  கலந்து  கிராமங்கள் வழியாக  செல்கிறது.  பின்னர்   பாலாற்றுடன்   ஈசூர் என்னுமிடத்தில்   கலந்து  கடலை அடைகிறது.  
 
அத்துடன்  திருப்போரிலுள்ள  17 ஏரிகளின்   உபரிநீர்  கேளம்பாக்கம்,  தையூர்,   கோவளம்;  வழியாக  பக்கிங்காம் கால்வாயை அடைகிறது.  

இப்படி ஓர் ஏரியின்  உபரிநீர்  பல ஏரிகளின் வழியாக ஓடி  இறுதியாக கடலை அடையும்படியாக அமைத்தது  யாருடைய  மூளை ?  யோசிக்க  வேண்டும் .

 எந்தஒரு   கருவியின்  உதவியும் இல்லாமல்    சரிவைப்பயன்படுத்தி  இயற்கையாக ஓடும்படியாக  அமைத்துள்ளது  யாருடைய  மூளை  ?

‘இன்டர்  ஸ்டேட்  ரிவர்ஸ்’   என்று  சொல்லக்கூடிய  பல மாநிலங்களில் ஓடும் ஆறுகளை இணைக்கும்  திட்டத்தைவிட,  ஏரிகளை  இணைக்க சிக்கலான  தொழில்நுட்பமும் ஏதும் தேவை இல்லை. மிக அதிகமான நிதியும் தேவை இல்லை. அண்டை மாநிலங்களின்   அரசு,  நம்முன்னோர்கள் செய்தது போல  முடியும் இடங்களில் எல்லாம்  ஏரிகளை  இணைக்கலாம்.

இதனால் உருப்படியாகஇரண்டு காரியங்களை  செய்யலாம். கடலுக்கு செல்லும் நீரைக் குறைக்கலாம் அல்லது தடுக்கலாம்.   வெள்ள சேதத்தையும்  தவிர்க்கலாம்.  அரசு மனம்வைக்க வேண்டும்.  அரசு மனம் வைக்க மக்கள்  அரசினை தூண்ட வேண்டும்.  சுடர் விளக்காயினும்  தூண்டுகோல் வேண்டும்.
   
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...