Saturday, July 22, 2017

LAKE VEERANAM CHOLA MILITARY MADE IT வீராணம் ஏரி ராஜராஜனின் ராணுவம் வெட்டிய ஏரி -

                                                      
வீராணம் ஏரி   ராஜராஜனின் 
ராணுவம்   வெட்டிய ஏரி  -  

மதுரை என்றதும்  மீனாட்சி  திருக்கோயில்;  நினைவுக்கு வரும். ஊத்துக்குளி என்றதும்  வெண்ணெய்;  வரும்.  மணப்பாறை என்றால் முறுக்கு  வரும்.  அதுபோல சோழ  அரசர்கள்  என்றால்  நினைவுக்கு வரும் பெயர்  ராஜராஜ சோழன்.
 
ராஜராஜசோழன்   நிலம்  அளக்க முதன் முதலாய்  16 சாண் அளவுள்ள ‘உலகளந்தக்கோல்’ஐ அறிமுகம்  செய்தவன்.  தஞ்சை  பெரிய கோவிலை   கட்டிமுடித்தவன் .இந்திய வரலாற்றில்  முதன்முதலாய்  கடல் பேரரசை   நிhமாணித்தவன். 33  பட்டப்  பெயர்களால்  பாராட்டப்  பட்டவன். முதன்முதலாக  கிராம  நிர்வாகத்தை  சீர்  செய்தவன்.  நீர்  மேளாண்மைக்கு வாரியம் அமைத்தவன்.

கல்லணைகட்டிய  கரிகால  சோழனின்  வழிவந்த  ராஜராஜன்,  நான் எந்த விதத்திலும் குறைந்தவன் அல்ல என்பதை  தனது  ஆட்சிக்காலத்தில்   நிரூபித்தான்.
 
இயற்கை வழங்கும் அரிய கொடை நீர் என்பதை   உணர்ந்திருந்தான். மழைநீரை சேமிக்க  5  ஆயிரம் ஏரிகளை   வெட்டினான்.  நீர் நிலைகளை உருவாக்க  நீரைப்பங்கிட தனியான நிர்வாக அமைப்பை  உருவாக்கினான் , ஏரிகள், குளங்கள், ஆறுகள்  ஆகியவற்றை நிர்வகிக்க  நீர்  வாரியங்கள்  அமைத்தான். 

வறட்சியான  வடதமிழகப்  பகுதியில்  இந்த ஏரிகளை வெட்டினான். வெட்டிய ஏரிகளில் கால்வாய் மூலம் காவிரி நீரைக்; கொண்டுசென்று  ஏரிகளை நிரப்பினான்.  நிரப்பிய நீர் மூலம்  அங்கு  வறண்ட நிலங்களை  வயல்களாக  மாற்றி அமைத்தான்.  

தீவிரமாக யோசித்தான்.  கம்புக்கு களைஎடுத்த மாதிரியும் இருக்கும்; தம்பிக்கு பெண் பார்த்த மாதிரியும் இருக்கும்.  யோசித்தார்.  அடுத்த நாள் தனது  படை வீரர்களுக்கு  வீராணம்   ஏரியை  வெட்ட உத்தரவிட்டான்.  

மழை அறுவடை செய்யவேண்டும்.  அதை முறையாக  சேமிக்கவும்   வேண்டும்.   விவசாயிகளுக்கு  உதவ  வேண்டும்,  உற்பத்தி பெறுக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவர்கள் மனதில்  அணையாத  தீயாக  எரிந்துக் கொண்டிருக்கிறது.  அதனால்தான்  போருக்கு  செல்லும்போது கூட ஊருக்கு  நல்லது என்ன செய்யலாம்   என்று  யோசித்தான் ராஜாதித்தன்  .
  
நம் இந்திய திருநாட்டில்கூட  பெரும்படை நம் கைவசம்  உள்ளது.  அதில் பலலட்சம் போர் வீரர்கள்  அடக்கம்.  எல்லையில் இருக்கும் வீரர்கள்  வருஷம்  365 நாட்களும்   துப்பாக்கியும் கையுமாக இருக்க வேண்டும். 

தனது இன்னுயிரைப்  பற்றிய கவலை  இம்மியளவும் இல்லாமல் இருக்கிறார்கள்.   துப்பாக்கியை ஏந்தியபடி  தூங்கா  விழியுடன்  பனிமலையில் மரணத்தை சுவாசித்தபடி  இருப்பதால்தான் நாம்  சுகமாய் சுவாசிக்க முடிகிறது.  

ராணுவம் என்பது  நாட்டிலுள்ள  பாதுகாப்பு  கவசம்.   அதனை நீர்வள பாதுகாப்பிற்கு பயன்படுத்த முடியுமா  ?  முடியும் அதுவும் ஒரு நாட்டின் பாதுகாப்;பு  தொடர்பான பணிதான் என்கிறார்  திருவள்ளுவர்.   ஒரு நாட்டிற்கு  எது  பாதுகாப்பு என்று  அரண் என்ற அதிகாரத்தில்   இதனை விளக்குகிறார்.
        
         மணிநீரும்    மண்ணும்    மலையும்      அணிநிழற்;
         காடு   முடைய  தரண்.

மண், நீர்,  ஆறுகள்,  காடுகள்,  இவை நான்கையும்  பாதுகாப்பதுதான்   ஒரு நாட்டிற்கு பாதுகாப்பு.  இதுதான்  அதன் பொருள்.
  
போர் நடக்காத சமயங்களில்,  ராணுவ வீரர்களை  மழைநீர் அறுவடைக்கான  நீர் ஆதாரங்களை   உருவாக்குவதில்  பராமரிப்பில் பயன்படுத்த முடியும். 

சோழர்களுடைய அரசாட்சி  காலத்தில்  மிகவும் பிரபலமானத்  திருவிழா    இந்திர  விழா. .இந்திரன்  மழைக்கடவுள்.  இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காகத்தான்,  அந்த காலக் கட்டத்தில் முக்கியத்துவம்   அளிக்கப் பட்டது. 

கரிகால்சோழன்   கல்லணைகட்டி  நீர் வளம் பெருக்கினான்.   அவன்வழி வந்த சோழ மன்னர்கள்   நீர் நிலைகளை ஏற்படுத்தியது,  அவர்களின் சிறப்பு என்கிறார் ‘தமிழ்நாட்டு   வரலாறு’ நூலின் ஆசிரியர்   இறையரசன்.
  
காவிரியில் கிளையாறுகள் பல  வெட்டினர்  பிற்கால சோழமன்னர்கள்.  பழையஆறுகளை பழுது பார்த்தனர். வீர சோழன் ஆறு, விக்கிரமன்  ஆறு,     உய்ய கொண்;டான்  ஆறு,  முடிகொண்டான் ஆறு,  அனைத்தும் அந்த பட்டியலில் வரும்  ஆறுகள்தான்.
                   
வீரநாராயணன்  ஏரி,  மதுராந்தகம்  பேரேரி,  கண்டராதித்த  பேரேரி,  குந்தவைப்பேரேரி ,சோழ கங்கம் (பொன்னேரி)  அத்தனையும்  நீர் மேளாண்மைக்கு  சோழ மன்னர்கள் அளித்த கொடை  எனலாம்.

பூமி ஞானசூரியன், செல்பேசி:+918526195370, மின்னஞ்சல்;gsbahavan@gmail.com





No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...