Sunday, July 30, 2017

கொடுக்காய்ப்புளி ஆட்டுத்தீவன மரம் - KODUKKAIPULI - TREE FODDER OF MEXICO


                                                               

கொடுக்காய்ப்புளி  

ஆட்டுத்தீவன மரம்

 

KODUKKAIPULI -

TREE FODDER

OF MEXICO

 

                                 தாவரவியல் பெயர்:  பித்தசெல்லோபியம் டல்ஸ்                     
                                                          (PITHECELLOBIUM DULCE)
                                 தாவரக் குடும்பம்: மைமோஸியே  (MIMOCEAE)
                              பொதுப்பெயர்: மெட்ராஸ்  தார்ன்  (MADRAS THORN)
          .................................................................................................................................................

 பள்ளிக் குழந்தைகளுக்கு திண்பண்டமாகும் பழம்; ஆடுகளுக்கு தீவனமாகும்  தழை;  தோலை பதனிட உதவும் டேனின் பொருந்தியுள்ள பட்டை;  தேனீக்களுக்கு உபயம் செய்யும்  மகரந்தம்; மேஜை, நாற்காலி, உத்திரம், சட்டங்கள், தூண், ஆகியன தர உதவும் மரம்; மணலிலும் வளரும் திறன்;   எண்ணெய் தரும் கொட்டை; எந்த சூழலிலும் வளரும் தன்மை,  அத்தனையும் நிறைந்தது கொடுக்காய்ப்புளி  மரம்.

இன்றும்கூட கிராமத்துக் குழந்தைகளுக்கு  மகிழ்ச்சி தரும் தின்பண்டம்  கொடுக்காய்ப்புளி.

 ஒரு பெரிய காது வளையத்தைப் போன்ற, இதன் பழங்கள் சிறு குழந்தைகளை வெகுவாக  கவரும்;  சிவப்பு நிறம்கலந்த வெண்ணிற தசை; ஒரு வித்தியாசமான சுவையுடன் விளங்கும் ;   துவர்ப்பும் இனிப்பும் சுவை கலந்த தசை ; தசை இப்பழங்களின் பழத்தின் பெரும்பகுதியை நிறைத்தபடி இருக்கும்;கொட்டைகளின் மேற்பக்கம் அகன்றும், கீழ்ப்பக்கம் குறுகியும் இருக்கும். 

சுமார் 20 மீட்டர் உயரம்வரை வளரும்; நிறைய கிளைகளை விட்டு அடர்ந்த தழையுடன் காணப்படும்; இலைகள் அவ்வப்போது உதிர்ந்தாலும், முழுவதுமாக அவற்றை உதிர்ப்பதில்லை; எப்போதும் பசுமை மாறாத  மரமாக  இது  தென்படும்.

இந்த மரம் ஏறத்தாழ நமது உள்ளுர் மரம் என்றே நினைக்கிறார்கள்; ஆனால் இது உண்மையில் மெக்சிகோ  நாட்டைச் சேர்ந்தது;  மெக்சிகோவில்  இந்தப் பழத்தின் தசையிலிருந்து தயாரிக்கும் ஒருவகையான  பானம், மிகவும் பிரபலமானது.

வட அமெரிக்காவில், வறண்ட மாநிலங்களில், இதன் கனியும் தழையும்  மிகவும் பிரபலமானவை;  தழையை கால்நடைகளுக்கு போடுகிறார்கள்;   கனியை மனிதர்கள் உண்ணுகிறார்கள்.

இந்த மரங்களை தோப்பாக வளர்த்தால், இதன் விதைகளிலிருந்து 13 சதவீதம் எண்ணெய் எடுக்கலாம்;   இதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்;  சோப்பு தயாரிக்கலாம்.

எண்ணெய் எடுத்தது போக மீதமுள்ள பிண்ணாக்;கில், கணிசமான அளவு  புரதம் இருப்பதால், கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம்;   இதன் பிண்ணாக்கில் 37 சதவீதமும்  சதையில் 25 சதவீதமும் புரதச்சத்து  அடங்கி உள்ளது.

வன்னி மரம், சீமைக்கருவை  மரம்,  இவைகளைப்போல  கொடுக்காய்ப்புளி மரங்களையும், மணல் மிகுந்தத்,  தேரிப்பகுதிகளில் மண்ணரிப்பைத் தடுக்க கொடுக்காய்ப்புளி மரக்கன்றுகளை நடவு செய்யலாம்;  தரிசான நிலங்களில் நடவு செய்தும், மண் அரிமானத்தை  தடுக்கலாம்;  கடலோரப் பகுதிகளிலும், உவர் நிலங்களிலும் இது வளரும். 

இப்போதெல்லாம் வெள்ளாடுகளை, கொட்டில்களில் கட்டிப்;போட்டு  வளர்க்கிறார்கள்; இப்படி வளர்ப்பவர்கள் தங்கள் நிலத்திலேயே ஏக்கர் கணக்கில், இந்த மரங்களை நெருக்கி நடுவதன் மூலம் தீவனப் பிரச்சனையை  முழுவதும் தீர்க்கலாம். 

இப்படி தீவன தோட்டத்தை உருவாக்கிய பின்னர் ஆடுகள்  வளர்க்கப்படுவதால், இது  உறுதியான லாபகரமான தொழிலாக இருக்கும்.
போத்துக்களாக வெட்டி நடுவதற்கு ஏற்ற மரம் இது; விதைகளை நேரடியாக விதைக்கலாம்;  வேர்க்குச்சிகள் தயாரித்தும் நடவுசெய்யலாம்.

இதன் பழங்களிலிருந்து விதைகளைப் பிரித்தெடுத்து  உடனடியாகவும் விதைக்கலாம்; ஆறுமாதம்வரை சேமித்தும் விதைக்கலாம்;  ஒரு கிலோ எடையில், 5,500 முதல் 8,800 விதைகள்  வரை  இருக்கும்;  இதன் முளைப்புத்திறன் அதிகபட்சமாக 65  சதவீதம் வரை  இருக்கும். 

பூமி ஞானசூரியன், செல்பேசி: ூ918526195370, மின்னஞ்சல்: பளடியாயஎயn;பஅயடை.உழஅ



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...