ஆக்கிரமிப்புக்கள், வனவிலங்குகள் வேட்டை, காடுகள் அழிப்பு, வியாபார வியாபார ரீதியான இறால்வளர்ப்பு, இவை அத்தனையும் டி.வி. சீரியல்போல, ரகசியமாய் நடந்துக் கொண்டிருக்கும் இடம்தான் களிவெளி.
உயிரின்மீது ஆசையிருந்தால், அந்தப்பக்கம் மட்டும் போகாதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள். ஃபைலேரியாசிஸ், மலேரியா, நீர்வழிப்பரவும் நோய்கள், எல்லாம் அங்கு செல்லுபவர்களுக்கு மலிவாய் விநியோகம் ஆகிறதாம்.
இந்த ஏரியை சுலபமாக அணுக முடியாது. காரணம் இதனை அணுக எவ்விதமான பாதை வசதியும் கிடையாதாம். சதுப்பு நிலத்தின் வழியே நடந்துப் போகலாம். சேறும் சகதியும் அதிகமிருந்தால், வெளியே எழ முடியாமல், அதில் புதைந்துகூட போகலாம் என பயமுறுத்துகிறூர்கள்.
.
கொசுக்கள் அங்கு கூடாரமிட்டு வசிக்கிறதாம். கொசுக்கள் மட்டுமில்லை, பெயர்தெரியாத பலவகைப்பூச்சிகளுக்கும் ஜாகை அங்குதான். இவை விஷம் கொண்டவையா இல்லையா? யாருக்கும் தெரியாது.
கொசுக்கள் அங்கு கூடாரமிட்டு வசிக்கிறதாம். கொசுக்கள் மட்டுமில்லை, பெயர்தெரியாத பலவகைப்பூச்சிகளுக்கும் ஜாகை அங்குதான். இவை விஷம் கொண்டவையா இல்லையா? யாருக்கும் தெரியாது.
களிவெளி ஏரியும் ஒரு உப்பு நீர் ஏரி. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து 16 கி.மீ. மற்றும் ஆரோவில்'லிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
20 கி.மீ. சுற்று வட்டாரத்தில் ஒரு மானுடத்தையும் பார்க்க முடியாது. மனுஷ வாசனையே அங்கு வீசாது. வழி கேட்கக்கூட ஆள் இருக்காது. மேலே போக வேண்டுமென்று நினைத்தால், தண்ணீர் ,சிற்றுண்டி, பழம், பிஸ்கட் இன்னபிற வஸ்துக்கள்; கைவசம் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
காலில் மொத்தமான தோலுடைய ஷூவைப் போட்டுக் கொள்ளுங்கள்;
பல வகை வண்டுகள் பூச்சிகளிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த கவசம் அவசியம் வேண்டும்.
அப்படியே கடித்தாலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிரீம் ஏதாச்சும் கண்டிப்பாக கொண்டு செல்லுங்கள் என்று எச்சரிக்கிறார்கள்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918626195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment