காவேரிப்பாக்கம் ஏரி |
காவேரிப்பாக்கம் ஏரி
தமிழ்நாட்டின்
இரண்டாவது
பெரிய ஏரி
KAVERIPAKKAM LAKE
TAMILNADU'S
SECOND BIG-ONE
காவேரிப்பாக்கம் ஏரி வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வேலூரிலிருந்து கிழக்கு திசையில் 40 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்;ளது.
தமிழ்நாட்டில் காவேரிப்பாக்கம் ஏரி, இரண்டாவது பெரிய ஏரி. மூன்றாவது நந்திவர்மன் என்னும் பல்லவ அரசனால் வெட்டப்பட்டது.
இப்பகுதியின் முக்கிய பயிர்கள் வாழை மற்றும் நெல்; இதற்கு காரணம் இப்பகுதியின் நீர்வளம். இந்த நீர் வளத்திற்கு காரணம் காவேரிப்பாக்கம் ஏரி என்று சொல்லவும் வேண்டுமோ ?
வெறும் 500 படைவீரர்களைக் கொண்டு ராபர்ட் கிளைவ் 7,000. படைவீரர்களைக் கொண்ட ஆற்காடு நவாப்பின் படையை தோற்கடித்த அதிசயமான போர்க்களம் காவேரிப்பாக்கம் தான்.
சுமார் 30 கிராமங்களுக்கும் மேலாக பாசனம் அளிக்கும் ஏரி. இந்த ஏரியின் கொள்ளளவு 41.7 மில்லியன் கன மீட்டர் (MCM). இதன் மூலம் 2,317 எக்டர் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். இந்த ஏரியின் ஆழம் 30.5 அடி.
2014 ஆம் ஆண்டு வாக்கில் ஏரிக் கரையோர சாலையில், ஏழெட்டு நாட்கள்; போக வேண்டியிருந்தது,. எவ்வளவு பெரிய ஏரி ? ஆச்சரியமாக இருந்தது. ஏரியைப்பார்க்க கரையின்மீது ஏறினேன். ஒரு சொட்டு நீர் கூட இல்லை ஏரியில். ஆனால் ஏரியின் உட்பக்கம் முழு வீச்சில் விவசாயம் நடந்து கொண்டிருந்தது. ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
என்னங்க இது ஏரிக்குள்ளேயே விவசாயம் பாக்கறீங்க ? பி. டபிள்யூ. டி. யில ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா ? என்று அந்த ஊர் விவசாயி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கன்டிஷன் பட்டா வாங்கினால், ஏரிக்குள்ள விவசாயம் பார்க்கலாம் என்று சொன்னார்.
பல ஆண்டுகள் ஏரி தண்ணீர் இல்லாமல்தான் உள்ளது. இந்த காலகட்டத்தில் அந்த ஏரியின் உட்புறம் என்ன விவசாயம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதற்கு அரசிடம் பட்டா வாங்க வேண்டும். அதற்குப் பெயர் கண்டிஷன் பட்டா. இதுபோல இரண்டு தலைமுறைகளாக ஏரிக்குள் விவசாயம் நடக்கிறது. 1952 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இவர்களுக்கு கன்டிஷன் பட்டா வழங்கப்பட்டது.
இந்த ஏரி 1,575 ஏக்கர் பரப்பில் பரந்துள்ளது. ஏரியின் அதிகபட்ச ஆழம் 30.6 அடி. 2,015 ஆம் ஆண்டு 29.6 அடி உபரியாக நீர் மட்டம் உயர்ந்தது. அதிகபட்சமான நீர் திறந்துவிடப்பட்டது. இப்படி வழிந்தோடும் நீர், கொசஸ்தலை ஆற்றின் வழியே வெளியேறும்.
ஒரு முறை இந்த ஏரி நிரம்பினால், 3 ஆண்டுகளுக்கு கவலையே இல்லை. பிரச்சனை இல்லாமல் விவசாயம் பார்க்கலாம் எனகிறார் ஓரு பொதுப்பணித்துறை செயற் பொறியாளர். ஆனால் ஏரியில் தூர் எடுத்து மாமாங்கம் ஆகிறது என்கிறார் ஒரு விவசாயி.
சுமைதாங்கி, பூண்;டி, சிவசமுத்திரம், ஆகிய பகுதிகளில் மழை பெய்தால் காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பும்.
வேலூர் மாவட்டத்தின் பொதுப்பணித்துறையின் அதிகாரத்தின் கீழுள்ள 519 ஏரிகளில் காவேரிப்பாக்கம் தான் மிகப்பெரிய ஏரி.
இந்த ஏரி மூன்றாம் நந்திவர்மன் என்னும் அரசனால் வெட்டப் பட்டது. கி.பி 826 முதல் 849 வரை அரசாட்சி செய்த பல்லவ அரசன். இவன் தந்தை நந்திவர்மனால் வெட்டப் பட்டது தான் வாவிவருகண் ஏரி, வயிரமகன் ஏரி. இவன் கல்வெட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்;ளது.
சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தின் ஊரக ஆட்சிமுறை சிறப்பாக இருந்தது. நிறைய ஏரிகள் குளங்கள் வெட்டினர். அவற்றை முறையாக பராமரிக்கவும் செய்தனர்.
இவற்றையெல்வாம் படிக்கும்போது, தெரிந்துக் கொள்ளும்போது, அவர்களைப்போல நம்மால் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டாலும், அவற்றை பராமரிக்கக்கூட நமக்கு ‘துப்பு’ இல்லையே என வருத்தப்படத்தான் முடிகிறது நம்மால். அரசாங்கம், கேட்டால் ‘டப்பு லேது’ என்று கைவிரிக்கிறது.
குடி மக்களுடைய சமூக, பொருளாதார, சமய வாழ்க்கையில் அரசர்கள் தலையிட மாட்டார்கள். நானா தேசிகன் காப்பகம் மணிக்கிராமம் போன்ற வியாபாரச் சங்கங்கள் இருந்தன. கன்னார், செக்கார், நெசவாளர் போன்றவர்களுக்கான தொழிலாளர் சங்கங்கள் இருந்தன. மாணவர்கள், துறவிகள், புரோகிதர்கள், மற்றும் கோயில் பணியாளர்களுக்;கான சிறப்பு சங்கங்களும் இருந்தன. அனைத்தும் அரசின்; தலையீடின்றி தன்னிச்சையாக செயல்பட்டன. இவை எல்லாம் பல்லவ ஆட்சிக்கால சிறப்புக்கள்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்:gsbahavan@gmail.com
No comments:
Post a Comment