கறிப்பலா
சரித்திரமான
காய்கறி மரம்
KARIPALA
BECOMES
KARIPALA
BECOMES
UNFORGETTABLE
HISTORY
(ARTOCARPUS COMMUNIS)
தாவரக் குடும்பம் :-- பேபேஸியே (FABACEAE)
பொதுப்பெயர் :-- பிரட் ப்ரூட் ட்ரீ (BREAD FRUIT)
கறிப்பலா என்றால் அது ஒரு காய்கறி என்றுதான் தெரியும்; ஆனால் அது ஒரு ;அதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான சரித்திரம் ஒன்று ஒளிந்து கொண்டுள்ளது உள்ளது; டைட்டானிக் என்ற படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது; படமும் சக்கைபோடு போட்டது.
அதே போல கறிப்பலா கன்றுகளை தாகித்தி என்னும் தீவிலிருந்து கப்பலில் கொண்டுவந்த வீர தீர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பவுண்ட்டி என்னும் கப்பல் பயணத்தில் நிகழ்ந்த வீர தீர சாகசங்களை முன்னிருத்தி ஐந்து ஆங்கிலப் படங்கள் வெளி வந்தன. அதில் ஒன்று மவுனப்படம். கடைசியாக வந்தது 'தி பவுண்டி"(THE BOUNTY) 1984 ன் வெளியீடு.
‘ஹிஸ் மெஜஸ்டிஸ் ஆர்மிட் பவுண்டீ " என்ற கப்பலின் லெப்டினன்ட், 33 வயது வில்லியம் பிளை (WILLIAM BLIGH ) என்பவர்; அவர் 1787 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து, 'தாகித்தி" தீவிற்கு புறப்பட்டு சென்றார்; கப்பல் 1788 அக்டோபரில், தாகித்தியை சென்றடைந்தது.
அங்கிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு கறிப்பலா கன்றுகளைக் கொண்டுவர வேண்டும்; கன்றுகளை வாங்கினார்கள்; திரும்பும் போது பாதிக்கு மேற்பட்ட கப்பல் மாலுமிகள், 'நாங்க வரல்ல" என்று சொல்லி அங்கேயே தங்கிவிட்டார்கள்; மீதிப் பேரோடு கப்பல் திரும்பியது; நடுக்கடலில் பயணம் செய்யும்போது, சில மாலுமிகள் கப்பலை, கைப்பற்றிக் கொண்டு வில்லியம் பிளை மற்றும் 18 மாலுமிகளை ஒரு படகில், நடுக்கடலில் இறக்கி விட்டனர்.
அந்த ஒற்றைப்படகில், 3,618. மைல் பயணம் செய்து ஊர் திரும்பினார்கள் ;அந்தப் பயணத்தின்போது அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், இடர்ப்பாடுகள், இருக்கங்கள், எல்லாம்தான்; மேலே குறித்த ஐந்து படங்களுக்கும் தீனி.
மனம் தளராத விக்கிரமன் மீண்டும் வேதாளத்தை வெட்டி வீழ்த்தி அதை சுமந்து வருவதைப்போல, வில்லியம் 1792 ல் மீ;ண்டும் புறப்பட்டுப் போய் 1200 கறிப்பலா கன்றுகளை, தாகித்தி தீவிலிருந்து கொண்டு வந்து தன் தாகத்தைத் தணித்துக் கொண்டார்.
இந்த கதை முதன்முதலாக, 1916 ஆம் ஆண்டு 'தி மியூட்டினி ஆப் தி பவுண்டி" (THE MUTINY ON THE BOUNTY)என்ற பெயரில் ஒரு ஆஸ்திரேலிய மவுனப்படமாக வெளி வந்தது; இன் தி வேக் ஆப் பவுண்டி (IN THE WAKE OF BOUNTY) என்ற பெயரில் 1933ல் இரண்டாவது ஆஸ்திரேலியப் படமாக வெளிவந்தது; மூன்றாவதாக வந்த பிரபலமான படம் ' மியூட்டினி ஆன் தி பவுண்டி"(MUTINY ON THE BOUNTY); நான்காவதாக வந்தது மூன்றாவதாக வந்த படத்தின் ரீமேக் ; ' மார்லன் பிராண்டோ " நடித்து 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது ; ஐந்தாவது வந்த படம்தான் ' தி பவுண்டி " (THE BOUNTY); மெல் கிப்சன் நடித்து 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது; கடைசியாக வந்த படம் இது.
சினிமா மூலமாக, உலகம் முழுவதும் பிரபலமான ஒரே காய்கறி மரம் கறிப்பலா மட்டுமாகத்தான் இருக்கும்; இதன் தாவரவியல் பெயர் , அர்ட்டோகார்பஸ் கம்யுனிஸ் (ARTOCARPUS COMMUNIS ) இதன் தாவர குடும்பம் பேபேஸியே; (FABACEAE) பொதுப் பெயர் பிரட் புரூட் (BREAD FRUIT) பிரதானமாக இது ஒரு காய்கறி மரம் ; அழகு மரமாகவும் இதனை வளர்க்கலாம்.
இதன் தழைகளை ஆடுமாடுகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம்; மரத்தினை உத்திரம் , தூண்கள் செய்யலாம்; பட்டை, பிசின் ஆகியவற்றில் மருந்துகள் செய்யலாம்.
இதன் காயில் ஏகப்பட்ட வைட்டமின்களும், தாது உப்புக்களும், அடங்கி உள்ளன; வைட்டமின் ' ஏ " சி " தையமின், ரிபோபிளவின், நயாசின் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு குளோரைடு, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும், 4.2 % மாவுச்சத்தும், 1.7 % புரதமும், 0.3 % கொழுப்பு சத்தும் அடங்கியுள்ளன.
வடிகால் வசதியுடைய மண்கண்டம், ஆழமான கொஞ்சம் அதிகமான ஈரப்பதம், செம்புறை மண், கரிசல் மண், கடலோரப் பகுதி மண் ஆகியவை இதற்கு ஏற்றவை.
இதனை காய்கறி தர, அழகூட்ட, நிழல்தர, வாயு மண்டலத்தின் தூசியை வடிகட்ட, வீசும் காற்றைத் தடுக்க, இறைச்சலைக் குறைக்க, கட்டிடங்களுக்கு மரம் தர, கிராமங்களில் மற்றும் நகரங்களில், எங்கும் நடலாம். இதன் வேர்ப் பிரதேசத்தில், தொடர்ச்சியாக ஈரம் இருக்க வேண்டும். நட்ட 5 முதல் 6 ஆண்டு களில் கறிப்பலா காய்க்கத் தொடங்கும்.
- பூமி ஞானசூரியன் .
No comments:
Post a Comment