இஸ்ரேலில்
நீராதாரங்கள்
அத்தனையும்
அரசாங்கத்திற்கு
சொந்தம்
நீராதாரங்கள்
அத்தனையும்
அரசாங்கத்திற்கு
சொந்தம்
ISRAEL'S
WATER RESOURCES
GOVERNMENT OWNED
இங்கு சமவெளியில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 300 முதல் 400 மில்லிமீட்டர்.
மலைப்பகுதியில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 500 முதல் 600 மில்லிமீட்டர்.
இஸ்ரேல் நாட்டின் மொத்த விவசாய நிலப்பரப்பு 11 முதல் 12 லட்சம் ஏக்கர்.
நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ளது ஜோர்டான் நதி நீர் கலீலோ என்னும் ஏரியில் தேக்குகிறார்கள்.
இந்த ஏரி பூமியின் மட்டத்திலிருந்து 700 அடிக்கும் கீழே உள்ளது.
இந்த நீரை பம்ப் செய்து 850 அடி உயரத்திற்கு பம்ப் செய்து மத்திய மற்றும் தெற்கு பகுதி நிலங்களில் விவசாயம் செய்கிறார்கள்.
இஸ்ரேல் நாட்டின் மொத்த நீர்வளம் - 0.25 மில்லியன் எக்டர் மீட்டர். அதாவது சுமார் 70 டி எம் சி.
இது சராசரியாக பவானிசாகர் அணையில் ஓர் ஆண்டில் வந்து சேரும் நீருக்கு சமம். இந்த அளவு நீரைக்கொண்டு நாம் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறோம்.
இந்த அளவு நீரைக்கொண்டு இஸ்ரேலில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறார்கள்;.
எல்லாம் சொட்டு நீர் தெளிப்பு நீர் பாசனம்தான்.
பாசன நீரை 10 அடி விட்டமுள்ள குழாய்களில் அதிக அழுத்தத்தில் எடுத்துச் செல்லுகிறார்கள.
இந்த நீர் எல்லா பகுதிக்கும் விநியோகம் ஆகிறது.
நீர் அதிக அழுத்தத்தில் செல்வதால் எல்லோரும் சொட்டு நீர மற்றும் தெளிப்பு நீர் பாசனம் செய்யலாம்.
நம் நாட்டில் நகரங்களில் குடிநீர் தருவது போல அங்கு பாசன நீர் விநியோகம் ஆகிறது.
ஒவ்வொரு நிலத்திலும் ஒரு நீர் உறிஞ்சியும் நீர் அளவு மானியும் பொருத்தி பயிருக்கு தேவையான தண்ணீih மட்டுமே தருகிறார்கள.
விவசாயிகள் அந்த அளவை விட ஒரு லிட்டர் நீர் கூட அதிகமாக எடுக்கக் கூடாது. பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் மட்டும்தான்.
அரிசி, கோதுமை, பயறுவகை தேவை இருப்பினும் வருமானம் குறைவாகக் கிடைப்பதால் இஸ்ரேல் விவசாயிகள் அவற்றை அதிகம் பயிர் செய்வதில்லை.
இஸ்ரேலியர்கள் பொதுவாக பழங்கள்ரூபவ் காய்கறிகள் மற்றும் பூக்களை மட்டும்தான் அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.
இந்த பயிர்களுக்கு அதிக நீர் தேவையில்லை.
மேலும் சொட்டுநீர் பாசனத்தில் குறைந்த அளவு நீரையே செலவு செய்கிறார்கள்.
குறைந்த நீர் செலவில் அதிக மகசூல் எடுக்க முடிகிறது.
அவர்கள் உற்பத்தி செய்யும் பழங்கள்ரூபவ் காய்கறிகள் மற்றும் பூக்களின் தரமும் அதிகம.;
அதனால் உலக சந்தையில் அவர்களுடைய விளைபொருட்கள் நல்ல விலைக்கு போகிறது.
தண்ணீர் அரசாங்கத்திற்கு சொந்தம்.
தண்ணீர் எங்கு கிடைத்தாலும் அது அரசாங்கத்திற்கு சொந்தம்.
ஒரு நாட்டில் ஒரு நபருக்கு 1700 கன மீட்டருக்குக் குறைவாக தண்ணீர் கிடைத்தால்; அது; தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நாடு.
நாட்டின் மொத்த மக்கள் தொகை 50 லட்சத்திற்கும் குறைவு.
ஒரு நபருக்கு கிடைக்கும் நீரின் அளவு 460 கனமீட்டர் அதாவது 460;000 லிட்டர்
உலக நீரியல் நிபுணரின் கணிப்பு.
ஒரு நாட்டில் ஒரு நபருக்கு 1700 கன மீட்டருக்குக் குறைவாக தண்ணீர் கிடைத்தால் அது; தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நாடு.
இஸ்ரேல் நாட்டில் ஒரு நபருக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு 460 கனமீட்டர் .
இந்திய நாட்டில் ஒரு நபருக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு 2200 கனமீட்டர்.
தமிழ்நாட்டில்; நாட்டில் ஒரு நபருக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு 1000 கனமீட்டர.
இஸ்ரேல் நாட்டில் ஒரு விவசாயியின் ஆண்டு வருமானம் - 66960 யு எஸ் டாலர்.
நாமும் நமது விவசாயத்தை லாபகரமாக மாற்ற முடியும்.
நமக்கு கிடைக்கும் நீர் இஸ்ரேலைவிட அதிகம்.
நம்மிடையே உள்ள இயற்கை வளங்கள் இஸ்ரேலைவிட அதிகம்.
இஸ்ரேல் நிலப்பரப்பு பாலைவனம்; நமது நிலப்பரப்பு சோலைவனம்.
நம்முடைய விவசாயத்தை இஸ்ரேலைவிட சிறப்பாக மாற்றி அமைக்க முடியும். மனமிருந்தால்; மார்க்கம் உண்டு.
(ஆதாரம்; “நிலம் மற்றும் நீர்வள விழிப்புணர்வு கருத்தரங்கு கையேடு”- வெளியீடு: துணை இயக்குநர், தோட்டக்கலைத் துறை, சென்னை 600051)
பூமி ஞானசூரியன், செல்போன்: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment