தண்ணீர்
பஞ்சமே
தலைகாட்டது
எங்களுக்கு
ISRAEL -
WATER FAMINE
WILL NOT
HAPPEN TO US
உலகத்தில் கிட்டத்தட்ட 199 நாடுகள் இருக்கு. அந்த நாடுகளின், ஒரு ஆண்டு சராசரி மழையைவிட, இந்தியாவின் மழை அதிகம். இந்தியாவைவிட மிகவும், குறைவான மழை பெறும் நாடு இஸ்ரேல்.
“தண்ணீர் பஞ்சமே எங்களுக்கு வராது” என்று சொல்லுகிறார்கள் இஸ்ரேல் நாட்டுக் காரர்கள்.
உலகத்தின் மிக அதிகமாக மழைபெறும் சிரபுஞ்சியில் குடிநீர்ப் பஞ்சம் என்பதைவிட, இஸ்ரேல் நாட்டுக் காரர்களின், சபதம்தான் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
வசதியாக இருக்கும், ஒருத்தரிடம் கேட்டேன். சவுக்கியமா இருக்கீங்களான்னு.
‘நல்லாதான் இருக்கேன்;’ கொஞ்சம் இழுத்த மாதிரி சொன்னார்.
“ஏன் இழுத்தமாதிரி சந்தேகமா சொல்றீங்க ? வியாபாரம் நல்லாதானே போவுது ? ”
“வியாபாரம் ஒண்ணும் குறைச்சல் இல்லைங்க. எவ்ளோ சம்பாதிச்சாலும், மணல்ல ஊத்தின தண்ணிமாதிரி போயிருதுண்ணே” என்று புலம்பினார்.
வசதி குறைவான ஒருத்தர்கிட்டே அதெ கேள்வியை கேட்டேன்.
“தம்பி சவுக்கியமா இருக்கீங்களா”
“உங்க ஆசீர்வாதத்துல நல்லா இருக்கேன், பிள்ளைங்க எல்லாம், நல்லா படிக்கிறாங்க. சீப்பாக வந்தது, ஒரு பிளாட் வாங்கி போட்டிருக்கண்ணே. அடுத்த வருஷத்துல சிறுசா, வீடு கட்டலாம்’ன்னு யோசனை இருக்குண்ணே. தெரிஞ்ச மேஸ்திரி யாராச்சும் இருந்தா சொல்லுங்கண்ணே”
எவ்வளவு சம்பாதித்தாலும், நூற்றுக்கு தொண்ணூறு குடும்பங்கள், ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ கதைதான். வரவுக்குள் குடும்பம், நடத்துபவர்களை, விரல்விட்டு எண்ணிவிடலாம்.
மழையை பயன்படுத்துவதில், நாம்கூட வரவு எட்டணா, செலவு பத்தணா வகைதான். இதை நான் சொல்ல வேண்டியதில்லை.
இப்போது நாம் இஸ்ரேலின் மழையளவு, அதன் தன்மை, நீர்ப் பிரச்சனை இவற்றை, அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் ? என்று தெரிந்து கொள்வது நமக்கு உபயோகமாக இருக்கும்.
இஸ்ரேல் நாட்டில் 1960 முதல் 1990 வரை 30 ஆண்டுகளில், பெற்ற ஆண்டு சராசரி மழையின் அளவு 282.6 மில்லி மீட்டர்.
நம்மைப் போலவே இஸ்ரேலிலும், நான்கு பருவங்கள் உண்டு. ஜனவரி மாதம் தொடங்கும், பருவத்தின்பெயர் ‘ஹவெட்’. ஏப்ரல் மாதம் தொடங்கும் பருவத்தின் பெயர், ‘திஸான்’; ஜூலையில் தொடங்கும், பருவத்தின் பெயர் தம்முஸ், அக்டோபர் மாதம் தொடங்கும் பருவத்தின் பெயர் ‘திஷ்ரி, ஒவ்வொரு பருவமும் நான்கு மாதங்களுக்கு தொடரும்.
ஓர் ஆண்டில் 8 மாதங்களில் மழை பெய்கிறது. ஆனால் சொட்டு சொட்டாய் பெய்கிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், ஆகிய நான்கு மாதங்களில், துடைத்து வைத்தது போல, ஒருபொட்டு மழையும், பெய்யாது. மழை தூக்கலாக பெய்யும் மாதங்கள் நான்கு. அவை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மற்றும் மார்ச்.
மழை குறைவாகபெய்யும் மாதங்கள் நான்கு அவை ஏப்ரல், மே. மற்றும் அக்டோபர், நவம்பர்.
இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமானவை. உலக வங்கியின் ‘கிளைமேட் சேன்ஞ் நாலெட்ஜ் போர்டல் ஃபார் டெவலப்மெண்ட் பிராக்ட்டிஷனர்ஸ் அண்ட் பாலிசி மேக்கர்ஸ்’ (WORLD BANK'S CLIMATE CHANGE KNOWLEDGE PORTAL FOR DEVELOPMENT PRACTITIONERS) என்ற தலைப்பின் கீழ் இந்த புள்ளி விவரங்களை வலைத்தளத்தில் பார்க்கலாம்.
இங்கு மாதங்களின் பெயர்களைத்தான், பருவங்களுக்கு சூட்டி இருக்கிறார்கள். ‘தெவட்’ என்பது ஜனவரி மாதம். நிஸ்சான் என்றால் ஏப்ரல், தம்முஸ் என்றால் ஜூலை, திஷ்ரி என்றால் அக்டோபர். எல்லாம் ஹிப்ரு மொழிப் பெயர்கள்.
ஆண்டின் முதல் மாதம் ஜனவரி, அதிக மழை பெறும் குளிர்ச்சியான மாதம்.
பிப்ரவரி மாதம், ஒருநாள் மழை பெய்யும். ஒரு நாள் வெயில் அடிக்கும். மழையும்; வெயிலும் மாறிமாறி வரும் மாதம்.
மார்ச மாதம், ஒரு நாள் சுளீர் என்று வெயில், இன்னொரு நாள் மூர்க்கமாக காற்று, சிலநாள் கனமழையும் பெய்யும்.
ஏப்ரல் பூக்களின் மாதம். எங்கும் பசுமை படர்ந்திருக்கும் அழகான மாதம். அவ்வப்போது பாலைவனக் காற்றும் பதம் பார்க்கும். மூன்று நாட்களுக்குக் கூட, மூச்சுவிடக்கூட இடைவெளி இல்லாமல் பனிமழை பெய்யும். பழ மரங்கள் பூத்துக் குலுங்கும். இத்தனைக்கும் உரிய ரம்மியமான மாதம் ஏப்ரல்.
மே மாதம், வெயில் விஸ்வரூபம் எடுக்கும், புல்லும் தன் பூக்களை உதிர்த்துவிட்டு, வறட்சியை வரவேற்கும்.
ஜூன், ஜூலை மாதங்கள் வெயில் தீயாய் சுட்டெரிக்கும். புற்களும் பொசுங்க, நிலப்பரப்பை பொட்டல்காடாக மாற்றும் மாதம்.
ஆகஸ்ட் மாதம், வெயில் நெருப்பை அள்ளி வீசும் மாதம்.
செப்டம்பர் மாதம், கோடை வெப்பத்தை கொம்பு சீவி விடும் மாதம். அத்துடன் இறுதியாக நீண்ட கோடைக்கு முடிவுரை எழுத, முதல் மழை இறங்கும் மாதமும் கூட.
அக்டோபர் நவம்பர் மழைக் காலத்திற்கு முகமன் எழுதும், மாதங்கள்.
ஓர் ஆண்டு முழுவதும் ஒரு சொப்பும் நிறையாத மழையை எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் ? உலகத்தில் நிறைய நாடுகள், கேட்கும் கேள்வியும் இதுதான்.
ஓர் ஆண்டு முழுவதும் ஒரு சொப்பும் நிறையாத மழையை எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் ? உலகத்தில் நிறைய நாடுகள், கேட்கும் கேள்வியும் இதுதான்.
அவர்கள் எதையும் மூடிமறைப்பதில்லை. வெளிப்படையாக சொல்கிறார்கள். சொல்லியும் கொடுக்கிறார்கள். சொல்லிக் கொடுப்பதற்கான காசையும் கராராக கறந்தும் விடுகிறார்கள்.
“நாங்க கழிவுநீரை, 75 சதம் சுத்தப்படுத்தி, மறுபடியும், பயன்படுத்துவோம். நூத்துக்கு 25 பேர் உப்பு நீக்கின கடல் தண்ணியத்தான், உபயோகப்படுத்தறோம். கிட்டத்தட்ட 10 முதல் 12 சதம் மழைநீரை அறுவடை செஞ்சி பயன்படுத்துகிறோம். சீக்கிரமாகவே இந்த தண்ணீர் பிரச்சனையை, நாங்க சமாளிச்சிடுவோம்” என்கிறார்கள் நம்பிக்கையாக இஸ்ரேலியர்கள்.
கடல்நீரை உப்பு நீக்கி நன்னீராக்கும் டிசலைனேஷன் பிளாண்ட்களை நிறைய அமைத்திருக்கிறார்கள். இவை அத்தனையும் முழுமையாக செயல்படும்போது, “எங்களுக்கு தண்ணீர் பிரச்சனை என்பது ஜூஜூபி” என்கிறார்கள் இஸ்ரேல் நாட்டினர்.
கண்ணன் குசேலரிடம் தர்மம் கேட்பதைப்போல, சிரபுஞ்சியின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க, மேகாலயா இஸ்ரேலுடன் ஒரு ஒப்பந்தத்தில், கையொப்பமிட்டுள்ளது.
நீர் அறுவடை, வாழ்வாதார மேம்பாடு, மரம் வளர்ப்பு, விவசாய வளர்ச்சி, என்று பல்வேறு தளங்களில், இதை செயல்படுத்த உள்ளோம் என்கிறார் இஸ்ரேல் நாட்டின் நீரியல் நிபுணர் அண்ணாச்சி, ‘டேவிட் ரம்நாங் அன்னோசி.
- பூமி ஞானசூரியன் - 8526195370
88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள் தோயாதார் - குறள் 149
அதிகாரம்: 15 பிறனில் விழையாமை
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
எண்ஆற்றுங் கொல்லோ உலகு – குறள் 211
அதிகாரம்: 22, ஒப்புரவறிதல்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு – குறள் 215
அதிகாரம் 22, ஒப்புரவற்தல்
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும் - குறள் 297
அதிகாரம்: 30, வாய்மை
நிலத்தியல்பால் நிர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு – குறள் 452
அதிகாரம்: 46, சிற்றினம் சேராமை
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள் தோயாதார் - குறள் 149
அதிகாரம்: 15 பிறனில் விழையாமை
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
எண்ஆற்றுங் கொல்லோ உலகு – குறள் 211
அதிகாரம்: 22, ஒப்புரவறிதல்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு – குறள் 215
அதிகாரம் 22, ஒப்புரவற்தல்
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும் - குறள் 297
அதிகாரம்: 30, வாய்மை
நிலத்தியல்பால் நிர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு – குறள் 452
அதிகாரம்: 46, சிற்றினம் சேராமை
2 comments:
SUPPER
அன்பு ஞானவேல், உங்கள் கருத்தினை தொடர்ந்து எழுதுவதற்கு மிக்க நன்றி.
ஞானசூரிய பகவான் தே.
Post a Comment