Tuesday, July 18, 2017

சமையலறை குளியலறை நீரை பயன்படுத்தலாம் - GREY WATER COULD BE REUSED


சமையலறை 
குளியலறை நீரை 
பயன்படுத்தலாம் 

GREY WATER 
COULD BE 
REUSED

நீர் ஆவியாகி,  ஆவி  நீராகி மறுபடியும் மறுபடியும் நீர் ஆவியாகி,  ஆவி  நீராகுவதுதான் நீர்  சுழற்சி.

கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.  ஏரி,  குளம்,  குட்டை . ஆறு,  கடல்;, அனைத்திலிருந்தும் நீர்  வெப்பத்தினால் ஆவியாகிறது. 
 
செடிகொடிகள்,  பயிர்கள்,  மரங்கள், மற்றும்  தாவரங்கள்  சுவாசித்தும் ஆவியை வெளிவிடுகின்றன.  இந்த ஆவி அனைத்தும் குளிர்ந்து  நீர்த்திவலைகளை   உள்ளடக்கிய  மேகங்களாக   அவதரிக்கின்றன. 

நீர் பருகிய  மேகங்களை காற்று அள்ளிச் செல்கிறது.   குறித்த அளவுவரை  மேகங்கள்  தொடர்ந்து  பருகுகின்றன.    மேகங்களின் தாகம் தீர்ந்ததும்,  தனது நீர்ச்சுமையை, மழையாக,  பனியாக,  கல்  மழையாக,  இந்த பூமிப்பந்தின்மீது வாரி இறைப்பதும்,  இந்தப் பணி  சுழற்சியாக நடைபெறுவதும்  தான்    நீர் சுழற்சி.

பசுமைநீர்:

மழைநீரில்  ஒரு பகுதி மண்பரப்பில்  வீழ்கிறது. வீழ்ந்து  மண்கண்டத்தை நீரால் நிரப்புகிறது.  இதனை மண் ஈரம்   (SOIL MOISTURE)  என்கிறோம்.  பயிர்களும் மண்மீது வளரும்,  செடி கொடிகளும் மரங்களும்,  தனது வேர்களால் உறிஞ்சுகின்றன.  ஒளிச்சேர்க்கைக்கும்,  சுவாசத்திற்கும்,  பயன்படுத்திக் கொள்கின்றன.   இதுதான்  பசுமைநீர்;;  (புசநநn  றுயவநச).

வெண்மைநீர்:    

ஒரு நிலம் முழுவதும்  பயிர்களால் மூடியிருக்கிறது.   பயிர்கள் அனைத்தும் ஆவியாக்கும்   நீர்  வெண்மை  நீர். அதுமட்டுமல்ல  நிலப்பரப்பின்மீது ஈரமாக இருக்கும் நீரும்  வெப்பத்தால் ஆவியாகி  மேலே பறக்கிறது.  இவை இரண்டும்தான்  வெண்மை நீர்.

நீலநீர்:


மழையின்போது  தப்பி ஓடும்   தண்ணீர்  (RUN OFF WATER )   ஆறுகளில் சென்று தஞ்சமடைகின்றது.   அதில் ஒருபகுதி  நிலத்தடி நீராக  மண்ணுள்  செல்லும்.  ஆக ஓடும் நீர்தான்  நீலநீர்.  

சுருக்கமாக  புரியும்படி  சொல்ல வேண்டுமானால,  மானாவாரி விவசாயத்திற்கு  பயன்படும் நீர்,  பசுமைநீர்.   இறைவை  விவசாயத்திற்கு  பயன்படும் நீர்  அல்லது தேக்கி வைத்த பாசனத்துக்கு பயன்படுத்தும் நீர்  நீலநீர். 

சாம்பல்வண்ணநீர்:

சுமாரான அசுத்தங்களை உள்ளடக்கியது தான் சாம்பல்  வண்ண நீர்.  குளியல்நீர், துணி துவைக்கும்போது வெளியேற்றும் அழுக்கு நீர்,  சமையலறைக் கழிவுநீர்  ஆகியவை   சேர்ந்ததுதான் சாம்பல் வண்ணநீர் (சா.வ .நீ ) 

கழிவறை நீர்  மூலம்  டயாபர் போன்றவை  இல்லாதது   என்று பொருள்.
இதில்  அழுக்கு, உணவு,  கிரீஸ், மயிற்கற்றைகள், வீட்டில் பயன்படுத்தும்,  சோப்பு,  வாஷிங் பவுடர்,  கிளீனிங்  பவுடர்,  போன்றவை சாம்பல் வண்ண நீரில் இருக்கலாம்.    அழுக்காக பார்க்க  அருவருப்பாக இருக்கும்.  ஆனால்  இதனை பாதுகாப்பாக  பயிர்களுக்கு  பாசனம் அளிக்க  பயன்படுத்தலாம். 

ஆறுகள், ஏரிகள், கழிமுகங்கள்,  ஆகியவற்றில்  சா.வ.  நீரை  நிறைத்து விட்டால் அதிலுள்ள  ஊட்டச்சத்துக்கள், (NUTRIENTS)   வீழ்படிவை   உண்டாக்கும்.  அதுவே  பயிர்களுக்கு பாதுகாப்பான   உணவாகும். 

சாம்பல்வண்ணநீரை  செப்டிக் டேங்க்கில் விட்டால்,  அது வீணாகிவிடும்.  தனியாக  அதனை சேகரிக்க முடியும்.   அது           உங்களுக்கு   உபயோகம்;  ஆகும்.  உள்ளுரில்  இருக்கும் நீர்  ஆதாரங்களை   மாசுபடுத்தாமல் இருக்கலாம்.  நமது  சுற்றுப்புறத்தை  சுகாதாரமாக  வைத்துக்கொள்ள  நம்மாலான  உதவியை  செய்ததாக  அர்த்தம். 

வீட்டுத்  தோட்டத்திற்குப் பாய்ச்சலாம்.  நகரவாசிகள் தங்களுக்கு சொந்தமான  சா.வ. நீரைப்பயன்படுத்தி,  தனது வீட்டு புறக்கடைத்தோட்டம் அமைக்கலாம். 
வீட்டின் முன்;புறமும்  பின்புறமும்   உள்ள  வெற்றிடத்தில்  பூச்செடிகளை நடலாம்.  பூ மரங்கள் நடலாம்.  அவற்றிற்கு  நேரடியாக ஒரு குழாயை  இணைத்து,  தாவரங்களின்   வேர்ப்பிரதேசத்தில் இந்த  சா.வா. நீரினை  பாய்ச்சலாம். 

காய்கறி செடிகளுக்குக்கூட  பாய்ச்சலாம்.  அந்த நீர்   உண்ணும் பகுதிகளைத்  தொடாதவாறு  பாய்ச்சலாம்.  பிரச்சனை ஏதும் இல்லை. 

ஆனால்  அதில் சாப்பாட்டு  உப்பு, போரான்  உப்பு,   குளோரின்  உப்பு  ஆகியவை  கலக்காமல்  பார்த்துக் கொள்ள வேண்டும்.  இந்த  உப்புக்கள்   அளவுக்கு  மேல்  இருந்தால்  செடிகளின் வளர்ச்சியைப்   பாதிக்கும். 
போரான்,  குளோரின்,  சோடியம் குளோரைடு,  எனும் உப்புக்கள்  பயிர்  ஊட்டச்சத்துக்களைச்   சேர்ந்தவைதான்.   ஆனால் அவை மிகவும் குறைவான அளவுதான்  தேவை. 

குளியலறை  மற்றும் சமையலரைக்  கழிவுநீரை  சிறிய வாய்க்கால் அமைத்து தோட்டத்திற்கு பாய்ச்சலாம். சொட்டு நீர்ப்பாசனத்தை தவிர்ப்பது நல்வது.  காரணம், அடிக்கடி ஏற்படும் அடைப்பை சரிசெய்ய முடியாது.

சரிவான நிலத்தில் இந்த நீரை எடுத்துச்செல்லும்போது, மண்ணே கூட வடிகட்டியாக  செயல்பட  வாய்ப்பு    உள்ளது. 

கழிவுநீரை  வீட்டுத் தோட்டத்திற்குப் பயன் படுத்துவது  நல்லது.  சூழல்  சுத்தமாகும்.   நீர்ச் சிக்கனம்  சாத்தியம்.  புத்தம்புதிய  காய்கள்,  பழங்கள், பூக்கள்  கிடைக்கும்.  வீட்டிற்கு  அழகுதரும்.  வீட்டுச்  செலவு  குறையும்.    நம்  ஆரோக்கியம் மேம்படும்.    டாக்டர் செலவு, மருந்து செலவு  மிச்சமாகும்.   தண்ணீர் செலவு குறையும்.  

சாம்பல்நிற நீரை  பயன்படுத்துவது  எப்படி  ?  

குளியல்நீர்,  துவைக்கும்நீர்,  சமைக்கும்நீர்,  ஆகியவற்றை   தோட்டத்திற்கு  பாய்ச்சும்போது இவற்றை  சிலவற்றை கவனத்தில்  கொள்ளவேண்டும்.

1. சாம்பல் நிற  நீரை  24  மணி  நேரத்திற்கு மேல்  சேமித்து  வைக்கக்  கூடாது.  அப்;;படி அதை  சேமித்தால்,  நாற்றம் வீசத்  தொடங்கும்.

2. கை, கால்,  உடல், முகம்  போன்றவற்றில், இந்தநீர்  படாதவாறு  பயன்படுத்த வேண்டும்.

3. இது  தேங்கி நிற்கவோ,  வேறு  இடங்களில்  வடிந்து போகவோ  கூடாது. இது கொசுக்கள் குடியிருக்கும்  கூடாரமாகிவிடும். 

4. குழாய்கள், வடிகட்டிகள்,  சொட்டிகள் (DRIPS)  ஆகியவற்றை   தவிர்க்கவும்.   இது  அதிக  வேலை வாங்கும்.
 
5. உங்கள்  வீட்டின்;  சாம்பல்நிற நீர்போக்கி  வெளியேற்றும்  நீர்,   எவ்வளவு எனக்  கண்டறியுங்கள்.  அதற்கு ஏற்ப    காய்கறிச்செடிகள்,  பழ மரங்கள்,  பூச்செடிகள்,  பூமரங்கள்,  மூலிகைச்செடிகள்,  ஆகியவற்றைத்  திட்டமிடலாம்.
பூமி ஞானசூரியன்

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...