Friday, July 28, 2017

ஜயண்ட் செக்கோயா உலகின் உயரமான மரம் - GIANT SEQUOIA WORLDS LARGEST TREE



ஜயண்ட்  செக்கோயா 
உலகின் உயரமான 
மரம் 

GIANT SEQUOIA 
WORLDS TALLEST
LARGEST TREE

                                                                
தாவரவியல் பெயா:; செக்கோயாடெணட்;ரான் ஜெய்ஜாண்டியம் (SEQUOIADENDRON GIGANTEUM)

தாவரக்குடும்பம்: குப்ரேசியே (CUPRESSACEAE)

உலகின் மிகப் பெரிய மரம் என்ற அழைக்கப்படும் அதிசய மரம் ஜயண்ட்  செக்கோயா  மரங்களதான். அதிகபட்சமான இதன்வயது  3,500 ஆண்டுகள்; வளரும் உயரம்  300 அடி;  வளர்ந்த கிளைகளின்  அடி விட்டம் 18 அடி;  மரப்பட்டைகளின் தடிமன் 3 அடி;   இதன் தாரவியல் பெயர் செக்கோயா டெண்ரான் ஜெய்ஜாண்டியம். இந்த மரங்கள் கலிபோர்னியாவின் நெவாடா மலைச்சாரலில்  இயற்கையாக வளர்ந்துள்ளன. 

கலிபோர்னியாவில் சிரா நெவாடா பகுதியில் மட்டும் சுமார் 36,000 ஏக்கர் பரப்பில் இம்மரங்கள் உள்ளன. இதன் கனிகள் வெடித்து விதைகள்  சிதற வேண்டுமானால், அதற்கு காட்டுத்தீ வேண்டும்; இல்லையென்றால் அதன் காய்களை கடித்து சுவைக்கும்                  'டவுக்ளாஸ்" (DOUGLAS ) என்னும் அணில், மற்றும் நீள் கொம்பு வண்டும் (LONG HORN BEETLE) தேவை. 

இந்த மரம் அழுகாது வேலிக் கம்பங்களாகவும், தீக்குச்சிகள்  செய்யவும் பயன்படும்; மரங்களை வெட்டிச் சாய்க்கும்போது நொருங்கி விடும்; அதனால் கட்டுமானப்  பணிகளுக்கு உதவாது;  மற்றபடி செக்கோயா மரங்கள் சுற்றுலாத்  தலங்களின், வசூல் மன்னன். 

கொஞ்ச நாட்களுக்கு முன்னால், உலகப் பிரசித்தி பெற்ற லண்டன் “கியூ ராயல் பொட்டானிக்கல் கார்டன்”(ROYAL BOTANICAL GARDENS, KEW, LONDON) போயிருந்தேன். என் மகன் எனக்கு போகிற போக்கில் இதனை அறிமுகப்  படுத்தினான்.  

“அங்க பாருங்க உலகின் பெரிய மரவகை இதுதான். தெரியுமா  ..?  ஜெயிண்ட் செக்கோயா  என்று  பெயர்” நான்  அப்படியா ..? என்றேன்  சாதாரணமாக. அது பிரம்மாண்டமானது என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன். 

கலிபோர்னியாவில் இதற்கென்றே தேசியப் பூங்கா ஒன்றினை அமைத்துள்ளார்கள்; யோஷிமைட் நேஷனல் பார்க் (YOSHIMITTE NATIONAL PARK).

பூமி  ஞான சூரியன் - 8527195370, செல்போன்: ூ918526195370,மின்னஞ்சல்: gsbahavan@gmail.com  



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...